இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
1. தொடக்க இடைக்கால இந்திய வரலாற்றின் கால அளவு யாது ?கிபி 700 முதல் கிபி 1200 வரை
2. பின் இடைக்கால இந்திய வரலாற்றில் கால அளவு யாது? கிபி 1200 முதல் கிபி 1700 வரை
3. அவுரங்கசீப்பின் அவைகளை வரலாற்று அறிஞராக இருந்தவர் யார்? காஃபிகான்
4. கல்வெட்டுகள் செப்பு பட்டயங்கள் நாணயங்கள் ஆகியவை எவ்வகை சான்றுகள் ?முதல் நிலைசான்றுகள்
5. இலக்கியங்கள் காலவரிசையில் ஆன நிகழ்வு பதிவுகள் பயணக்குறிப்புகள் வாழ்க்கை வரலாற்று நூல்கள் சுயசரிதைகள் ஆகியன எவ்வகை சான்றுகள்? இரண்டாம் நிலை சான்றுகள்
6. பிற்கால சோழர்களின் காலம் எது? கி.பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை
7. திருவாலங்காடு செப்பேடுகள் யாருடையது? முதலாம் ராஜேந்திர சோழன்
8. அன்பில் செப்பேடுகள் யாருடைய காலத்தை சார்ந்தது? சுந்தர சோழன்
9. கிராமங்கள் எவ்வாறு நிர்வகிக்க பட்டன என்பது குறித்த செய்திகளை தெரிவிக்கின்ற கல்வெட்டு எது ?காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு
10. பிராமணருக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? பிரம்மதேயம்
11. கல்வி நிலையங்களை பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?சாலபோகம்
12. கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தேவதானம்
13. சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? பள்ளிச் சந்தம்
14. கஜுராஹோ கோயில் எங்கு உள்ளது ?மத்திய பிரதேசம்
15. தில்வாரா கோயில் எங்கு உள்ளது? அபு குன்று
16. கோனார்க் கோயில் எங்கு உள்ளது ?ஒடிசா
17. விருபாக்ஷா கோயில்கள் எங்கு உள்ளன?
18. வித்தாளா விருபாக்ஷா கோவில்கள் எங்கு உள்ளன? ஹம்பி
19. சார்மினார் எங்கு உள்ளது?ஹைதராபாத்
20. தௌலதாபாத் என்ழைக்கப்படுவது எது? அவுரங்காபாத்
21. பெரோஸ் ஷா கொத்தளம் எங்கு உள்ளது? டெல்லி
22. நாணயங்களில் பெண் தெய்வமான லட்சுமியின் வடிவத்தையும் தனது பெயரையும் பொறிக்கச் செய்த முகாலய மன்னர் யார்? முகமது கோரி
23. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள பயன்படும் செப்பு நாணயம் எது? ஜிட்டல்
24. இல்துமிஷ் அறிமுகம் செய்த நாணயத்தின் பெயர் என்ன? டங்கா என்னும் வெள்ளி நாணயம்
25. ஒரு வெள்ளி டங்கா= 48 ஜிட்டல்
26. ஒரு ஜிட்டல் = 3.6 வெள்ளி குன்றிமணி
27. யாருடைய காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகிறது? சோழர்கள் காலம்
28. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்? நாதமுனி
29. பெரிய புராணத்தை இயற்றியவர் யார் ? சேக்கிழார்
30. தேவாரம் யாரால் தொகுக்கப்பட்டது ?நம்பியாண்டார் நம்பி
31. திருவாசகத்தை இயற்றியவர் யார் ?மாணிக்கவாசகர்
32. 12ம் நூற்றாண்டை சேர்ந்த கீதகோவிந்தம் என்னும் நூலை இயற்றியவர் யார்? ஜெயதேவர்
33. கபீர்தாஸ் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்? பதினைந்தாம் நூற்றாண்டு
34. மதுரா விஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?கங்காதேவி
35. ஆமுக்த மால்யதா என்ற நூலின் ஆசிரியர் யார் ?கிருஷ்ணதேவராயர்
36. பிரித்திவிராஜ் ராசு என்ற நூலை இயற்றியவர் யார்? சந்பரிதை
37. பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜதரங்கிணி என்ற நூலின் ஆசிரியர் யார்? கல்ஹாணர்.
38. தப்பாகத் -இ-நஸ்ரி என்ற நூலை எழுதியவர் யார்? மின்கஜ் உஸ் சிராஜ்
39. தாஜ் உள் மா அசீர் என்னும் நூலை எழுதியவர் யார்? அசன் நிஜாமி
40. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற முதல் நூல் எது? தாஜ் உல்மா அசிர்
41. முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்று ஆசிரியர் யார்?ஜியா உத் பரணி
42. தாரிக்-இ- ப்ரோசாகி என்னும் நூலைப் படைத்தவர் யார்? ஜியா உத் பரணி
43. தாரிக்-இ- பெரிஸ்டா என்னும் நூலை எழுதியவர் யார்? பெரிஷ்டா
44. தப்பாகத் என்ற அரேபிய சொல்லின் பொருள் யாது ?தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள்
45. தச்சுக் என்ற பாரசீகச் சொல்லின் பொருள் யாது? சுயசரிதை
46. தாரிக் அல்லது தாகுய்க் என்ற அரபிச் சொல்லின் பொருள் யாது? வரலாறு
47. பாபர் நாமா என்ற நூலின் ஆசிரியர் யார்? பாபர்
48. அயனி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் யார்? அபுல் பாசல்
49. அக்பர் நாமா என்ற நூலின் ஆசிரியர் யார்? அபுல் பாசல்
50. தசுக்-இ-ஜஹாங்கிரி என்ற நூலின் ஆசிரியர் யார்? ஜஹாங்கீர்
51. தபகத்-இ-அக்பரி என்ற நூலின் ஆசிரியர் யார்? நிஜாமுதீன் அஹமத்
52. தாரி-இ-பதானி என்ற நூலின் ஆசிரியர் யார்? பதானி
53. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்? வெனிஸ் நகர பயணி மார்க்கோ போலோ
54. மார்க்கோபோலோ தமிழ்நாட்டில் இவ்விடத்திற்கு வருகை புரிந்தார் ?தூத்துக்குடியில் உள்ள காயல் துறைமுகம்
55. தாகுயூக்-இ-ஹிந் என்ற நூலை எழுதியவர் யார்? அல்பருனி
56. ரேக்ளா பயணங்கள் என்ற நூலை எழுதியவர் யார்? அரேபியாவை சேர்ந்த இபன் பதூதா
57. தனது தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய முகாலய மன்னர் யார்? முகமது பின் துக்ளக்
58. கிபி 1420 இல் விஜய நகரத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி யார் ?இத்தாலியப் பயணி நிக்கோலா கோண்டி
59. கிபி 1522 விஜய நகரத்துக்கு வருகை புரிந்த போர்த்துகீசிய பயணி யார் ?டோமிங்கோ பயஸ்
60. கீர்த்தி 1443 விஜய நகரத்திற்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணி யார்? அப்துல் ரசாக்
61. மத்திய ஆசியாவின் மாபெரும் அரசனான செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம் எது ?ஹீரட்
தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்
1. பண்டைய சோழ அரசின் தலைநகரம் எது? உறையூர்
2. பிற்கால சோழர்களின் தலைநகரம் எது?தஞ்சாவூர்
3. பிற்கால சோழ வம்சத்தை உருவாக்கியவர் யார்? விஜயாலயன்
4. கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியவர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
5. ராஜராஜேஸ்வரம் என்றழைக்கப்படும் கோவில் எது? தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
6. கங்கைகொண்டான் என்று அழைக்கப்படுபவர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
7. தெற்கு சுமத்ரா தீவுகளில் வென்ற சோழ அரசர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
8. பிற்காலச் சோழர்களின் விஜயாலயன் வழிவந்தோரின் கடைசி அரசர் யார்? அதிராஜேந்திரன்
9. சாளுக்கிய சோழ வம்ச ஆட்சியை தொடங்கியவர் யார்? முதலாம் குலோத்துங்க சோழன்
10. பாண்டியர் ஆட்சியை நிறுவியவர் யார்? முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
11. பிற்காலப் பாண்டியப் பேரரசு எப்போது நிறுவப்பட்டது? கிபி 1279
12. சோழர்களின் நிர்வாக பிரிவுகள் யாவை? பேரரசு} மண்டலம் }நாடு} கூற்றம்} கிராமம்
13. கிராம ஆட்சி பற்றி விவரிக்கும் கல்வெட்டு எது? காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு
14. சோழர்களின் ஆட்சியில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? காணிக்கடன்
15. சோழ அரசில் சமணசமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? பள்ளிச் சந்தம்
16. நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? வேளாளர்
17. முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை எங்கு உள்ளது? கங்கைகொண்ட சோழபுரம்
18. திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?நம்பியாண்டார் நம்பி
19. எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவிய சோழ அரசர் யார்? முதலாம் ராஜேந்திரன்
20. சோழர்களின் காலத்தில் இருந்த வணிக குழுக்கள் எவை? அஞ்சு வண்ணத்தார், மணி கிராமத்தார்
21. மேற்கு ஆசியர்கள் அராபியர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வணிக குழுவிற்கு என்ன பெயர்? அஞ்சு வண்ணத்தார்
22. சோழர்களின் ஆட்சியில் உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த வணிகக்குழு எது? மணி கிராமத்தார்
23. தொடக்ககால பாண்டியர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகமாக விளங்கியது எது? கொற்கை
24. கிபி ஆறாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் இடமிருந்து பாண்டிய அரசை மீட்டவர் யார்? கடுங்கோன்
25. சமணர்களை துன்புறுத்திய பாண்டிய மன்னர் யார்? கூன்பாண்டியன் என்றழைக்கப்பட்ட அரிகேசரி மாறவர்மன்
26. ஹரி கேசரி மாறவர்மன் சமண சமயத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்? திருஞானசம்பந்தர்
27. முதலாம் வரகுணன் என்று அழைக்கப்பட்டவர் யார்? பராந்தக நெடுஞ்சடையன்
28. வேள்விக்குடி செப்பேடுகள் இன் கொடையாளி யார்? முதலாம் வரகுண பாண்டியன்
29. முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த பாண்டிய அரசன் யார் ?இரண்டாம் ராஜசிம்மன்
30. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ தமிழ்நாட்டில் இங்கு வருகை புரிந்தார்? காயல் துறைமுகம்
31. செல்வ செழிப்பு மிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதி என்று பாண்டிய பேரரசை பாராட்டியவர் யார்? மார்க்கோபோலோ
32. இரண்டாம் பாண்டிய பேரரசின் புகழ்பெற்ற அரசர் யார்? சடையவர்மன் சுந்தரபாண்டியன்
33. கூடல் கோன் கூடல் காவலன் என்று போற்றப்பட்டவர் யார்? பாண்டிய மன்னர்கள்
34. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் குடியிருப்புக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம்
35. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நிலத்தின் உண்மையான உடமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பூமி புத்திரர் அல்லது வேளாளர்
36. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பிரதம மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? உத்திர மந்திரி
37. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அரசு செயலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது? எழுத்து மண்டபம்
38. பாண்டியர்களின் நிர்வாகப் பிரிவுகள் யாவை? மண்டலம்} வளநாடு }நாடு }கூற்றம்
39. பாண்டியப் பேரரசின் நாட்டை நிர்வகித்த அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? நாட்டார்
40. பாண்டியர்களின் கிராம நிர்வாகத்தைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது? திருநெல்வேலி மானூர் கல்வெட்டு
41. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? குதிரை செட்டிகள்
42. பாண்டியர்களின் துறைமுகங்களில் விருவிருப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது? காயல்பட்டினம் (தூத்துக்குடி)
43. பாண்டியர்களின் ஆட்சியில் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? காசு கழஞ்சு பொன்
டெல்லி சுல்தானியம்
1. இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது? முகமது கோரி ( கிபி 12ஆம் நூற்றாண்டு)
2. ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் பாரசீகச் சொல் எது? பன்டகன்
3. இந்தியாவில் அடிமை வம்சம் ஆட்சியை கொண்டு வந்தவர் யார்?குத்புதீன் ஐபக்
4. அடிமை வம்சம் மரபு எவ்வாறு அழைக்கப்பட்டது? மம்லுக் மரபு
5. குத்புதீன் ஐபக் தனது தலைநகரை லாகூரில் இருந்து எங்கு மாற்றினார்? டெல்லி
6. டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் என்னும் மசூதியை கட்டியவர் யார்?குத்புதீன் ஐபக்
7. இந்தியாவில் உள்ள மிகப் பழமையான மசூதி எது? டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித்
8. குதுப்மினார் யாரால் கட்டப்பட்டது?குத்புதீன் ஐபக் அவர்களால் தொடங்கப்பட்ட இல்டுமிஷ் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது
9. சகல்கானி எனும் நாற்பதின்மர் குழுவை உருவாக்கியவர் யார்? இல்துமிஷ்
10. ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது? இக்தா
11. டெல்லி சுல்தானின் முதல் பெண் அரசி யார்? ரசியா
12. நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் யார்? கியாசுதீன் பால்பன்
13. பாரசீகத்தை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமீர்குஸ்ருவை ஆதரித்தவர் யார்?கியாசுதீன் பால்பன்
14. கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? ஜலாலுதின் கில்ஜி
15. அலாவுதீன் கில்ஜியின் தலைமை தளபதி யார்? மாலிக்கபூர்
16. வாரங்கல் அரசர் பிரதாப ருத்ரன் வெற்றிகொண்டவர் யார்?ஜானாகான்
17. தனது தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய டெல்லி சுல்தான் யார்? முகமது பின் துக்ளக்
18. தேவகிரி எனும் பெயரை தௌலபாத் என மாற்றியவர் யார்? முகமது பின் துக்ளக்
19. முகமது பின் துக்ளக் காலத்திலிருந்த மொரக்கா நாட்டுப் பயணி யார்?இபன் பதுதா
20. தைமூர் படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது? கிபி 1398
21. மத்திய ஆசியாவில் சார்க்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் யார்? தைமூர்
22. சையது அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? கிசிர்கான்
23. செய்யது அரச வம்சத்தின் கடைசி அரசர் யார்? அலாவுதீன் ஆலம் ஷா
24. டெல்லியில் லோடி வம்சம் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்? பகலூல் லோடி
25. ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?சிக்கந்தர் லோடி
26. மோடி அரச வம்சத்தின் கடைசி அரசர் யார்? இப்ராஹிம் லோடி
27. முதலாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? கிபி 1526
28. இந்தியாவில் முகாலய பேரரசு நிறுவியவர் யார்? பாபர்
29. முஸ்லிம்கள் ஆட்சியில் கல்வி நிலையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?மதரசாக்கள்
30. இந்திய பாரசீக கட்டிடக்கலையின் பெயர் என்ன? இந்தோ சாராசானிக்
விஜயநகர பாமினி அரசுகள்
1. விஜயநகரப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது? ஹரிஹரர் மற்றும் புக்கர்
2. ஹரிஹரர் மற்றும் புக்கர்ஐ நாட்டை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியவர் யார்?வித்யாரண்யர்
3. விஜயநகரத்தை ஆண்ட அரச வம்சங்கள் யாவை? சங்கமா சாளுவ துளுவ அரவிடு
4. மதுரா விஜயம் எனும் நூலை எழுதியவர் யார்?கங்காதேவி
5. சங்கம வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்?இரண்டாம் தேவராயர்
6. இஸ்லாமிய வீரர்களை தமது படையில் சேர்த்துக் கொண்டார் விஜயநகர அரசர் யார்? இரண்டாம் தேவராயர்
7. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?இரண்டாம் விருபாக்ஷி ராயர்
8. கிருஷ்ணதேவராயர் எந்த அரச வம்சத்தை சார்ந்தவர்? துளுவ வம்சம்
9. ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில் ராமசாமி கோவில் விட்டலா சாமி கோவில் போன்ற கோவில்களை கட்டியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
10. யாருடைய அவையில் அஷ்டதிக்கஜங்கள் இருந்தனர்? கிருஷ்ணதேவராயர். (விக்ரமாதித்தன் அவையில் நவரத்தினங்கள் இருந்தனர்).
11. தலைக்கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கிபி 1565
12. ராட்சச தங்கடி என்று அழைக்கப்பட்டது எது?தலைக்கோட்டை போர்
13. தலைக்கோட்டை போர் யாருடைய ஆட்சியின் போது ஏற்பட்டது? துளுவ அரசர் ராமராயர்
14. அரவீடு வம்சத்தை தொடங்கியவர் யார்? திருமலை தேவராயர்
15. அரவிடு வம்சத்தின் தலைநகரம் எது? பெனுகொண்டா
16. விஜயநகர அரசு இறுதியாக எப்போது வீழ்ச்சியுற்றது? கிபி 1646
17. விஜயநகரப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகள் யாவை? மண்டலம் (மாநிலம்) நாடு(மாவட்டம்) ஸ்தலம் கிராமம்
18. விஜயநகர பேரரசில் மண்டலத்தின் ஆளுநர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?மண்டலேஸ்வரா
19. விஜயநகரப் பேரரசில் கிராம தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?கௌடா
20. விஜயநகரப் பேரரசின் தங்க நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது? வராகன்
21. விஜயநகரப் பேரரசு காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பாரசீக பயணி யார்? அப்துர்ரஸ்ஸாக்
22. விஜயநகரப் பேரரசில் தொழில்சார் அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கில்டுகள்
23. ஆமுக்த மால்யதா இன்னும் காவியத்தை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
24. ஜாம்பவதி கல்யாணம் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
25. பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை எழுதியவர் யார்? தெனாலி ராமகிருஷ்ணா
26. தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது எது? ஆமுக்த மால்யதா
27. ஆமுக்த மால்யதா என்பதன் பொருள் என்ன? தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்
28. பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? ஹசன் கங்கு(அலாதீன் ஆஸான்)
29. ஹசன் கங்கு பாமினி ஆட்சி காலத்தில் மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தராப்
30. ஷாநாமா என்னும் நூலை எழுதியவர் யார்? பிர்தௌசி
31. பாமினி அரசில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் இருந்தனர்? 8
32. பாமினி அரசு அரசருக்கு அடுத்த நிலையில் செயல்பட்டவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வக்கீல் சுல்தான
33. பாமினி அரசு நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? அமீர் ஜூம்லா
34. பாமினி அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வசீர் இ அசாரப்
35. பாமினி அரசு காவல்துறை தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கொத்தவால்
36. பாமினி அரசு தலைமை நீதிபதி சமயம் மற்றும் அறக்கொடைகள் அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?சதார்-இ-ஜஹான்
37. பாமினி பேரரசு எத்தனை சுல்தானாக பிரிந்தது? 5 அவை பீடார் பிஜபூர் அகமதுநகர் கோல்கொண்டா பீரார்
38. விஜய நகர கட்டடக் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது? குதிரை
39. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்? இரண்டாம் விருபாக்ஷ ராயர்
40. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்? குமார கம்பண்ணா
41. பாமினி அரசியல் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராக விளங்கியவர் யார்? சுல்தான் பெரோஸ்
42. பாமினி வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் ஆட்சி செய்தனர்? 18
43. பாமினி பேரரசு தலைநகரம் எது?பீடார்
44. துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்? நரச நாயக்கர்
45. தென்னிந்திய கோவில்களுக்கு நுழைவுவாயில் கோபுரங்களை கட்டிக்கொடுத்த விஜயநகர பேரரசர் யார்? கிருஷ்ணதேவராயர்
46. கிருஷ்ணதேவராயர் அவையிலிருந்த அஷ்டதிக்கஜங்கள் சிறந்தவர் யார்?அல்லசாணி பெத்தண்ணா
முகாலய பேரரசு
1. ஷெர்ஷா எந்த வம்சத்தை சார்ந்தவர்? சூர் வம்சம்
2. இந்தியாவில் முகாலய ஆட்சி நடைபெற்ற காலம் எது? கி பி 1526 முதல் கிபி 1707 வரை
3. முகாலய மன்னர்களை ஆட்சிக்கால படி வரிசைப்படுத்துக? பாபர் ஹுமாயின் அக்பர் ஜஹாங்கீர் ஷாஜகான் அவுரங்கசீப்
4. இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்? முகமது பாபர்
5. பாபரின் இயற்பெயர் யாது? ஜாகிருதின் முகமது
6. ஜாகிருதின் என்ற சொல்லின் பொருள் யாது? நம்பிக்கையை காப்பவர்
7. இப்ராஹிம் லோடி பதவியை விட்டு நீக்க தௌலாத்கான்லோடி யாருடைய உதவியை நாடினார்? பாபர்
8. முதலாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? கிபி 1526
9. முதலாம் பானிபட் போர் யாருக்கிடையே நடைபெற்றது? பாபர் மற்றும் இப்ராஹிம் லோடி
10. கன்வா போர் எப்போது நடைபெற்றது? கிபி 1527 பாபர் மற்றும் ராணா சங்கா இடையில்
11. சந்தேரி போர் எப்பொழுது நடைபெற்றது? கிபி 1528
12. பாபரின் சுயசரிதையின் பெயர் என்ன? துசிக்-இ-பாபரி
13. ஆக்ராவில் சூர் வம்ச ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்? ஷெர்ஷா
14. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? கிபி 1556 பைராம் கான் மற்றும் ஹெமு இடையே
15. அக்பர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் அகமதுநகர் அரசின் பகர ஆட்சியாளராக இருந்தவர் யார்? ராணி சந்த் பீவி
16. ஹால்டிகாட் போர் எப்பொழுது நடைபெற்றது? கிபி 1576 அக்பர் மற்றும் ராணா பிரதாப் இடையே
17. முகாலய பேரரசு தொடக்ககால தலைநகரம் எது? ஆக்ரா
18. அக்பரின் நினைவிடம் எங்கு உள்ளது? சிக்கந்தரா ஆக்ரா
19. முஸ்லிம்கள் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸியா வரியை நீக்கியவர் யார்? அக்பர்
20. அக்பர் காலத்தில் வாழ்ந்த சீக்கிய குரு யார்? குரு ராம் தாஸ்
21. பதேபூர் சிக்ரி என்னும் நகரை உருவாக்கியவர் யார்? அக்பர்
22. ஜஹாங்கிர் அரசவைக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர் யார்? சர் தாமஸ் ரோ
23. ஆங்கிலேயரின் முதல் வணிக மையம் எது? சூரத்
24. ஷாஜகான் என்ற சொல்லின் பொருள் என்ன? உலகத்தின் அரசர்
25. சிவாஜியின் தந்தை பெயர் என்ன? ஷாஜி பான்ஸ்லே
26. முகாலய மாமன்னர்களின் கடைசி அரசர் யார்? அவுரங்கசீப்
27. ஆலம்கீர் (உலகை கைப்பற்றியவர் )என்று அழைக்கப்பட்டவர் யார்? அவுரங்கசீப்
28. காமரூபம் என்றழைக்கப்பட்டது எது? அசாம்
29. சிவாஜி எந்த ஆண்டு மராத்திய நாட்டின் பேரரசர் ஆனார்? கிபி 1674
30. பிரெஞ்சுக்காரர்களின் முதல் வணிக மையம் எங்கு நிறுவப்பட்டது? பாண்டிச்சேரி
31. முகாலய பேரரசு பிரதம மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? வக்கீல்
32. முகாலய பேரரசு வருவாய் துறை மற்றும் செலவுகள் அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வஜீர் அல்லது திவான்
33. முகாலய பேரரசு ராணுவத் துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? மீரபாக்ஷி
34. முகாலய பேரரசு அரண்மனை நிர்வாகத்தை கவனித்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? மீரசமான்
35. முகாலய பேரரசு தலைமை நீதிபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்? குவாஜி
36. முகாலய பேரரசு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? சதா -உஸ் -சுதுர்
37. முகலாயப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகள் யாவை? சுபா சர்க்கார் பர்கானா கிராமம்
38. முகாலய பேரரசு மாகாணங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? சுபேதார்
39. முகலாயப் பேரரசில் நகரங்களும் பெருநகரங்களில் யாரால் நிர்வகிக்கப்பட்டது? கொத்தவால்
40. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்? அக்பர்
41. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்? ராஜா தோடர்மால்
42. ஜப்தி முறை யாரால் கொண்டுவரப்பட்டது? ராஜா தோடர்மால் அவர்களால் அக்பர் காலத்தில்
43. முகலாயர் காலத்தில் மாவட்ட அளவிலான வரி வசூல் அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? அமில் குஜார்
44. முகலாயர் காலத்தில் ஜமீன்தார் கலால் வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சுயயூர்கள்.
45. அக்பர் உருவாக்கிய மதம் எவ்வாறு அழைக்கப்பட்டது? தீன் இலாகி தெய்வ மதம்
46. இந்துக்களின் மீது ஜிஸ்யா வரியை விதித்த முகாலய மன்னர் யார்?அவுரங்கசீப்
47. பாரசீக கட்டடக் கலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார்? பாபர்
48. ஹூமாயூன் ஆள் டெல்லியில் கட்டப்பட்ட அரண்மனையின் பெயர் என்ன? தீன்-இ-பானா
49. பீகாரில் சதாரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள கல்லறை மாடம் யாரால் கட்டப்பட்டது? ஷெர்ஷா
50. அக்பரின் கல்லறை எங்கு உள்ளது?சிக்கந்தரா
51. புலந்தர்வாசா நுழைவுவாயில் யாரால் கட்டப்பட்டது? அக்பர்
52. பஞ்ச் மஹால் எனும் பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்கு கட்டடம் யாரால் கட்டப்பட்டது? அக்பர்
53. ரங் மஹால் சலிம் சிஸ்டி கல்லறை திவான் இ காஸ் திவான் இ ஆம் ஆகிய கட்டடங்களை கட்டியவர் யார்? அக்பர்
54. முகாலய பேரரசின் புகழ் யாருடைய காலத்தில் உச்ச நிலையை எட்டியது? ஷாஜகான்
55. டெல்லியில் உள்ள மிகப்பெரிய ஜும்மா மசூதி யாரால் கட்டப்பட்டது? ஷாஜகான்
56. ஆக்ராவில் உள்ள முத்து மசூதி யாரால் கட்டப்பட்டது? ஷாஜகான்
57. மயிலாசனம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது? ஷாஜகான்
58. தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? யமுனை நதிக்கரையில்
59. பிபிகா மக்பாரா என்னும் அவுரங்காபாத்தில் கட்டப்பட்ட கல்லறை யாரால் கட்டப்பட்டது?ஆஜாம் ஷா அவுரங்கசீப்பின் மகன்
60. லால் குயிலா என்றழைக்கப்படும் கோட்டை எது? டெல்லியில் உள்ள செங்கோட்டை
61. டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்? ஷாஜகான்
62. ராணா பிரதாப் சிங்கின் குதிரையின் பெயர் என்ன? சேத்தக்
Book Back Questions:
1. இந்தியாவில் பாரசீக கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? பாபர்
2. அக்பர் ராணா பிரதாப்பை எந்த போரில் தோற்கடித்தார்? ஹால்டிகட்
3. ஷேர் ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?ஹீமாயூன்
4. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?அக்பர்
5. அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்? ராஜா தோடர்மால்
Fill in the Blanks:
1. ராணா பிரதாப் இன் குதிரையின் பெயர் என்ன?சேத்தக்
2. பதேபூர் சிக்ரி யிலுள்ள எந்த அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்? இபாதத் கானா
3. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி யார்? சலீம் சிஷ்டி
4. ஜப்தி என்னும் முறை யாருடைய ஆட்சிக்காலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது? ஷாஜகான்
5. மத வல்லுனர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரியில்லா நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சுயயூர்கள்
Match the Following:
1. பாபர் -சந்தேரி
2. துர்காவதி -மத்திய மாகாணம்
3. ராணி சந்த் பீபி -அகமது நகர்
4. தீன் இலாகி -அக்பர்
5. ராஜா மான்சிங்- அஸ்டதிகிகஜம்
0 Comments