education

10th தேசியம் காந்திய காலகட்டம்


1.    தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக காந்தியடிகள் எத்தனை ஆண்டுகள் போராடினார்? 20 ஆண்டுகள்
2.    மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய ஆண்டு எது? 1915
3.    மகாத்மா காந்தி அடிகள் சுதந்திர போராட்டத்திற்காக இந்தியாவில் அறிமுகம் செய்த புதிய வழிமுறை எவ்வாறு அழைக்கப்பட்டது? சத்யாகிரகம்
4.    காந்தியடிகள் எப்பொழுது எங்கு பிறந்தார்? 1869 அக்டோபர் 2 குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் 
5.    காந்தியடிகளின் தந்தை எங்கு பணிபுரிந்தார்? போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் திவான்
6.     காந்தியடிகளின் தாயார் பெயர் யாது? புத்லிபாய்
7.    காந்தியடிகள் சட்டம் பயில்வதற்காக எந்த ஆண்டு இங்கிலாந்து சென்றார்? 1888
8.    காந்தியடிகள் வழக்கறிஞர் பட்டம் பெற்ற ஆண்டு எது? 1891
9.    காந்தியடிகள் எங்கு வழக்குரைஞராக பணியாற்றினார்? பம்பாய்
10.    காந்தியடிகள் தென்ஆப்பிரிக்கா சென்ற ஆண்டு எது? 1893 ஏப்ரல்
 
11.    காந்தியடிகள் முதன் முதலாக எங்கு நிறவெறியை இனவெறியை எதிர்கொண்டார்? தென்னாப்பிரிக்கா பீட்டர்பேமாரிட்ஸ்பர்க்
12.    பிரான்ஸ் பாலில் வசித்த இந்தியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தலைவரி எவ்வளவு? மூன்று பவுண்டுகள்
13.    கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது என்ற நூலை எழுதியவர் யார்? டால்ஸ்டாய்
14.    அண்டு தி லாஸ்ட் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? ஜான் ரஸ்கின்
15.    சட்டமறுப்பு என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? தாரோ
16.    காந்தியடிகளை மிகவும் ஈர்த்த எழுத்தாளர் யார்? ஜான் ரஸ்கின்
17.    காந்தியடிகள் பீனிக்ஸ் குடியிருப்பை நிறுவிய ஆண்டு எது? 1905
18.    காந்தியடிகள் டால்ஸ்டாய் பண்ணையை நிறுவிய ஆண்டு எது? 1910
19.    தென்னாப்பிரிக்காவில் ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ரத்து செய்ய காரணமாக இருந்த ஒப்பந்தம் எது? ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தம்
20.    காந்தியடிகள் யாரை தம்முடைய அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்? கோபால கிருஷ்ண கோகலே
21.    தீன் காதியா என்ற முறை எங்கு பின்பற்றப்பட்டது? சம்பரான் பீகார்
22.    இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் 23 பங்கு பகுதியில் பயிரிட வேண்டும் என்னும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? தீன் காதியா
23.    பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் செயற்கை சாயங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்? ஜெர்மானியர்
24.    இண்டிகோ என்பது யாது? நீலச் சாயம்
25.    காந்தியடிகளை சம்பரானக்கு வருகை புரிய கேட்டுக்கொண்ட விவசாயி யார்? ராஜ்குமார் சுக்லா
26.    நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்க செயல்முறை பாடத்தை கற்றுக் கொண்டதாக  காந்தியடிகள் எங்கு கூறினார்? சம்பரான்
27.    இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் யார்? ராஜேந்திர பிரசாத்
28.    சம்பரான் போராட்டத்தில் காந்தியடிகளுக்கு துணை நின்றவர் யார்? ராஜேந்திர பிரசாத் மற்றும் பிரஜ் கிஷோர் பிரசாத்
29.    சம்பரான் இல் துணைநிலை ஆளுநர் குழுவை உருவாக்கியவர் யார்? காந்தியடிகள்
30.    அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது? 1918
31.    கேதா சத்யாகிரகம் எந்த ஆண்டு ஏற்பட்டது? 1918
32.    பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையில் அடைப்பது என காவல்துறையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கிய சட்டம் எது? ரவுலட் சட்டம்
33.    காந்தியடிகள் ரவுலட் சட்டத்தை எவ்வாறு அழைத்தார்? கருப்புச் சட்டம்
34.    காந்தியடிகள் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை எப்பொழுது தொடங்கினார்? 1919 ஏப்ரல் 6
35.    ரௌலட் சட்டத்திற்கு எதிராக பஞ்சாபில் நடந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர்கள் யார்? டாக்டர் சைபுதீன் கிச்சுலு மற்றும் டாக்டர் சத்யபால்
36.    சீக்கியர்களின் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பைசாகி
37.    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தினம் எது? 1919 ஏப்ரல் 13
38.    ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஆங்கிலேய கொடூர தளபதி எவன்? ஜெனரல் ரெஜினால்ட் டயர்
39.    ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட புதிய சட்டம் எது? படைத்துறைச் சட்டம்
40.    ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் திருப்பிக் கொடுத்த படம் எது ? (Knight wood) வீரத்திருமகன்
41.    ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து காந்தியடிகள் திருப்பிக் கொடுத்த பதக்கம் எது? கெய்சர் இ ஹிந்த்
42.    முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த ஆண்டு எது? 1918
43.    உலகம் முழுவதும் இஸ்லாமிய மதத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் யார்? துருக்கியின் கலிபா
44.    துருக்கியின் கலீபாவுக்கு ஆதரவாக இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் எது? கிலாபத் இயக்கம்
45.    கிலாபத் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி
46.    1919 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்கம் மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர் யார்?காந்தியடிகள்
47.    1919 ஆம் ஆண்டு அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டில் அல்லாஹு அக்பர் வந்தே மாதரம் இந்து முஸ்லிம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்தவர் யார்? சௌகத் அலி
48.    1920 ஆம் ஆண்டு கிலாபத் இயக்க மாநாடு எங்கு நடைபெற்றது? அலகாபாத்
49.    ஒத்துழையாமை இயக்கம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1920 ஆகஸ்ட் 1
50.    இந்திய தேசிய காங்கிரஸ் எப்பொழுது ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கியது? 1920 கல்கத்தா மாநாடு(சிறப்பு மாநாடு)
51.    1920 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது? நாக்பூர்
52.    1920 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் சிறப்பு மாநாடு எங்கு நடைபெற்றது? கல்கத்தா
53.    1920 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்? சேலம் விஜயராகவாச்சாரியார்
54.    வரிகொடா இயக்கம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1922 பிப்ரவரி பர்தோலியில்
55.    காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக திரும்ப பெற காரணமாக அமைந்த நிகழ்வு எது? சௌரி சௌரா
56.    சவுரி சவுரா துயரச் சம்பவம் எங்கு நடைபெற்றது? கோரக்பூர் உத்திரபிரதேசம் 1922 பிப்ரவரி 5
57.    சுயராஜ்ய கட்சியை தொடங்கியவர் யார்? மோதிலால் நேரு மற்றும் சிஆர் தாஸ் 1923
58.    சிஆர் தாஸ் மறைந்த ஆண்டு எது? 1925
59.    இந்தியாவில் இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது? 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
60.    மாகாண சுயாட்சி எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது? 1935
61.    "உங்கள் மாவட்டங்களுக்கு செல்லுங்கள் கதர் இந்து முஸ்லிம் ஒற்றுமை தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றிய செய்திகளை பரப்புங்கள் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களை சுய ராஜ்ஜியத்தின் உண்மையான வீரர்களாக மாற்றுங்கள்" -இக்கூற்று யாருடையது? காந்தியடிகள்
62.    இந்து மகா சபைக்கு தலைமை தாங்கியவர் யார்? பண்டித மதன் மோகன் மாளவியா
63.    சைமன் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு எது? 1927 நவம்பர் 8
64.    சைமன் குழுவில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்? ஏழு பேர்
65.    சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த தலைவர் யார்? லாலா லஜபதி ராய்
66.    இந்தியாவில் அனைத்து கட்சி மாநாடு முதன்முதலாக எப்பொழுது நடைபெற்றது? 1928
67.    நேரு அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு எது? 1928
68.    இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்க கோரிய அறிக்கை எது? நேரு அறிக்கை
69.    14 அம்ச தீர்மானத்தை முன்மொழிந்தவர் யார்? முகமது அலி ஜின்னா
70.    இந்து முஸ்லிம் ஒற்றுமையின் தூதராக வர்ணிக்கப்பட்டவர் யார்? முகமது அலி ஜின்னா
71.    1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்? ஜவஹர்லால் நேரு
72.    1929ஆம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் முக்கிய நோக்கம் யாது? பூரண சுதந்திரம்
73.    1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் போது சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்ட நாள் எது? 1930 ஜனவரி 26
74.    உப்பு சத்தியாகிரகத்தின் போது இந்தியாவின் வைசிராயாக இருந்தவர் யார்?இர்வின் 
75.    காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகத்தை தொடங்கிய நாள் எது? 1930 மார்ச் 12
76.    காந்தியடிகள் தொடங்கிய உப்பு சத்தியாகிரகத்தில் காந்தியடிகளுடன் எத்தனை பேர் பங்கேற்றனர்? 78 பேர்
77.    உப்பு சத்தியாகிரகம் தொடங்கப்பட்ட இடம் எது? சபர்மதி ஆசிரமம் முதல் தண்டி கடற்கரை வரை
78.    காந்தியடிகள் தண்டி கடற்கரையை சென்று உப்பு எடுத்த நாள் எது? 1930 ஏப்ரல் 5
79.    தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்? ராஜகோபாலாச்சாரியார் திருச்சி முதல் வேதாரண்யம் வரை
80.     வடமேற்கு எல்லை மாகாணத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை தாங்கியவர் யார்? கான் அப்துல் காபர் கான்
81.    குடைகிடமட்கார் என்றழைக்கப்பட்ட செஞ்சட்டைகள் இயக்கத்தை நடத்தியவர் யார்? கான் அப்துல் காபர் கான்
82.    முதலாவது வனச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1865
83.    இந்திய வழங்கல் சட்டம் எப்போது ஏற்படுத்தப்பட்டது? 1878
84.    ராம்பா பகுதியில் வனவாசிகளின் நலனுக்காக போராடியவர் யார்? சீதாராம ராஜு
85.    உப்புச் சத்தியாகிரக போராட்டத்திற்காக கைது செய்யப்பட்ட காந்தி எங்கு சிறை வைக்கப்பட்டார்? எரவாடா சிறை
86.    இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய போராட்டமாக கருதப்படுவது எது? உப்பு சத்தியாகிரக போராட்டம்
87.    முதலாவது வட்டமேசை மாநாடு எப்பொழுது நடந்த நடைபெற்றது? 1930
88.    முதலாவது வட்டமேசை மாநாட்டில் மாகாண சுயாட்சி யுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையை அறிவித்தவர் யார்? பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு
89.    காந்தி-இர்வின் ஒப்பந்தம் எப்பொழுது ஏற்பட்டது? 1931 மார்ச் 5
90.    இரண்டாவது வட்டமேசை மாநாடு எப்போது நடைபெற்றது? 1931 செப்டம்பர் 7
91.    இந்தியாவில் படைத்துறை சட்டம் எப்பொழுது அமல்படுத்தப்பட்டது? 1932
92.    மூன்றாவது வட்டமேசை மாநாடு எப்போது நடைபெற்றது? 1932
93.    காந்தியடிகள் எந்த வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்? இரண்டாவது வட்டமேசை மாநாடு
94.    வகுப்புவாரி பிரதிநிதித்துவபிரதிநிதித்துவம் அறிவித்தவர் யார்? ராம்சே மெக்டொனால்ட் 1932
95.    பூனா ஒப்பந்தம் யாருக்கிடையே ஏற்பட்டது? காந்தி மற்றும் அம்பேத்கர் 1932
96.    பூனா ஒப்பந்தத்தின் படி மத்திய சட்டப்பேரவையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான எத்தனை சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன? 18%
97.    காந்தியடிகளின் சத்தியாகிரக ஆசிரமம் எங்கு இருந்தது? வார்தா
98.    ஹரிஜன சேவை சங்கத்தை அமைத்தவர் யார்? காந்தியடிகள்
99.    கோவில் நுழைவு நாள் எப்பொழுது அனுசரிக்கப்பட்டது? 1933 ஜனவரி 8
100.    ரஷ்ய புரட்சி ஏற்பட்ட ஆண்டு எது? 1917
101.    இந்திய பொதுவுடமைக் கட்சி எப்போது நிறுவப்பட்டது? 1920 உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட் என்னும் இடத்தில்
102.    1925 ஆம் ஆண்டு அகில இந்திய பொதுவுடமை மாநாடு எங்கு நடைபெற்றது? கான்பூர்
103.    அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1928
104.    மீரட் சதி வழக்கு எந்த ஆண்டு நடைபெற்றது? 1929
105.    இந்துஸ்தான் குடியரசு ராணுவம் எங்கு எப்போது உருவாக்கப்பட்டது? 1924 கான்பூரில்
106.    இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பை நிறுவியவர் யார்? பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு 1928 
107.    லாலா லஜபதி ராயின் உயிரிழப்புக்கு காரணமான காலங்களில் காவல்துறை அதிகாரி யார்? சாண்டர்ஸ்
108.    1929 மத்திய சட்டப்பேரவையில் புகை குண்டு வீசியவர்கள் யார்? பகத்சிங் மற்றும் பிகே தத்
109.    "இன்குலாப் ஜிந்தாபாத்"  "பாட்டாளி வர்க்கம் வாழ்க" ஆகியன யாருடைய புகழ்பெற்ற முழக்கங்கள் ஆகும்? பகத்சிங்
110.    1930இல் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதான தாக்குதலை மேற்கொண்டவர் யார்?சூரியா சென்
111.    சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய பொதுவுடமைக் கட்சி எப்பொழுது தடை செய்யப்பட்டது? 1934
112.    காங்கிரஸ் சோசியலிச கட்சி எப்பொழுது யாரால் உருவாக்கப்பட்டது? 1934  பிரகாஷ் நாராயணன் ஆச்சார்யா நரேந்திர தேவ் மற்றும் மினுமசானி
113.    "ஒருசிலர் அதிகாரத்திற்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது. ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறச் செய்வதே சுயராஜ்யம் ஆகும்" என்று கூறியவர் யார்? காந்தியடிகள்
114.    இந்திய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது? 1935
115.    1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் போது இந்தியாவில் மொத்தம் எத்தனை வாகனங்கள் இருந்தன? 11 மாகாணங்கள் மற்றும் ஆறு தலைமை ஆணையரக மாகாணங்கள்
116.    பர்மாவை இந்தியாவில் இருந்து பிரித்த சட்டம் எது? 1935 இந்திய அரசு சட்டம்
117.    இந்திய அரசு சட்டம் எப்பொழுது அமல்படுத்தப்பட்டது? 1937
118.    1937-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிட்டு வென்றது? 11 மாகாணங்களில் போட்டியிட்டு ஏழு மாகாணங்களில் வெற்றி பெற்றது.
119.    1937 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் முஸ்லிம் லீக் உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற இடம் எது? அசாம் பள்ளத்தாக்கு
120.    1957ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் எத்தனை இடங்களில் ஆட்சி அமைத்தது? எட்டு இடங்கள்
121.    இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட ஆண்டு எது? 1939
122.    காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி விலகிய நாளை மீட்பு நாள் என்று அறிவித்தவர் யார்? முகமது அலி ஜின்னா
123.    முகமது அலி ஜின்னா முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஆண்டு எது? 1940
124.    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான ஆண்டு எது? 1939
125.    1939 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காந்தியடிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் யார்? பட்டாபி சீதாராமையா
126.    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கிய கட்சி எது? பார்வர்ட் பிளாக்
127.    இரண்டாம் உலகப்போரின்போது நாஜிகள் சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்தியதை பொதுவுடமைவாதிகள் எவ்வாறு அழைத்தனர்? மக்களின் போர்
128.    இரண்டாம் உலகப்போரின் ஐ பொதுவுடமைவாதிகள் எவ்வாறு அழைத்தனர்? ஏகாதிபத்தியப் போர்
129.    பொதுவுடமை கட்சியின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்ட ஆண்டு எது? 1942
130.    1933 இல் பஞ்சாப் காஷ்மீர் வடமேற்கு எல்லை மாகாணம் சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களை இணைத்து பாகிஸ்தானை உருவாக்கும் எண்ணத்தை வெளிப் படுத்தியவர் யார்? கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவன் ரஹ்மத் அலி
131.    இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தவர் யார்? ஆங்கிலேய அரச பிரதிநிதி லின்லித்கோ
132.    தனிநபர் சத்தியாக்கிரகத்தை தொடங்கியவர் யார்? ஆச்சார்ய வினோபாபாவே 940 அக்டோபர் 17
133.    ஆகஸ்ட் நன்கொடை வழங்கப்பட்ட ஆண்டு எது? 1940
134.    கிரிப்ஸ் தூதுக்குழு குழு அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1942
135.    திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை என காந்தியடிகள் எதை அழைத்தார்? கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கை
136.    வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1942 ஆகஸ்டு 8
137.    நாம் நமது முயற்சியின் விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம் அல்லது நாம் நமது அடிமைத்தனத்தை காண உயிருடன் இருக்க மாட்டோம் என்று கூறியவர் யார்? காந்தியடிகள்
138.    செய் அல்லது செத்துமடி என்ற புகழ்பெற்ற வாசகத்தை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கூறியவர் யார்? காந்தியடிகள்
139.    காங்கிரஸ் வானொலியை நிறுவியவர் யார்? உஷா மேத்தா
140.    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆப்கானிஸ்தான் சென்ற ஆண்டு எது? 1941
141.    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பான் சென்ற ஆண்டு எது? 1943
142.    மலாயா மற்றும் பர்மாவில் இருந்த ஜப்பானியர்களின் ஆதரவோடு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் யார்? ஜெனரல் மோகன் சிங்
143.    இந்திய தேசிய ராணுவம் எவ்வாறு அழைக்கப்பட்டது? ஆசாத் ஹிந்த் பாஜ்
144.     இந்திய தேசிய ராணுவத்தில் மொத்தம் எத்தனை பிரிவுகள் இருந்தன? மூன்று பிரிவுகள் காந்தி பிரிகேட், ராணி லட்சுமிபாய் பிரிகேட், நேரு பிரிக்கேட்
145.    நேதாஜி அவர்கள் சுதந்திர இந்தியாவின் தற்கால அரசாங்கத்தை எங்கு நிறுவினார்? சிங்கப்பூர்
146.    டெல்லி சலோ என்ற முழக்கத்தை வெளியிட்டவர் யார்? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
147.    பம்பாய் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி  எப்பொழுது ஏற்பட்டது? 1946
148.    வேவல் திட்டம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? 1945 ஜூன் 14
149.    அரச பிரதிநிதியின் செயற்குழுவில் இந்துக்களும் முஸ்லிம்களும் சம எண்ணிக்கையில் இடம்பெற ஒரு இடைக்கால அரசுக்கு வகை செய்யப்பட்ட திட்டம் எது? வேவல் திட்டம்
150.     சிம்லா மாநாடு நடைபெற்ற ஆண்டு எது? 1945
151.    அமைச்சரவைத் தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1946
152.    அமைச்சரவை தூதுக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் யாவர்? ஏவி அலெக்சாண்டர் பெதிக் லாரன்ஸ் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்
153.    நேரடி நடவடிக்கை நாள் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? 1946 ஆகஸ்ட் 16
154.    நேரடி நடவடிக்கை நாள் அறிவித்தவர் யார்? முகமது அலி ஜின்னா
155.    நேரடி நடவடிக்கை நாள் மூலமாக உருவாக்கப்பட்ட போராட்டத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இடம் எது? நவகாளி
156.    ஜவகர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப் பட்ட ஆண்டு எது? 1946 செப்டம்பர்
157.    1946 ஆம் ஆண்டு இடைக்கால அரசின் நிதி உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்? லியாகத் அலிகான்
158.    1946 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி எது? தொழிற்கட்சி.கிளமெண்ட் அட்லி பிரதமராக பொறுப்பேற்றார்.
159.    இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் அரச பிரதிநிதியாக இருந்தவர் யார்? மவுண்ட்பேட்டன் பிரபு
160.    மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் எது? 1947 ஜூன் 3
161.    இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லை இடையே ஆன எல்லைக்கோடுகளை அமைக்கும் பணி யாரிடம் ஒப்படைக்கப்பட்டது? ராட்கிளிஃப் பிரவுன்
162.    பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலை சட்டத்தை இயற்றிய நாள் எது? 1947 ஜூலை 18
163.    இந்தியா விடுதலை அடைந்த நாள் எது? 1947 ஆகஸ்ட் 15


Choose the correct answer:

1.    அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்? சாய் புதின் கிச்லு
2.    இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது? கல்கத்தா சிறப்பு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3.    விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றுள் எந்த நாள் அறிவிக்கப்பட்டது? 1930 ஜனவரி 26
4.    முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1865
5.    1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது? கோவில் நுழைவு நாள்
6.    மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது? இந்திய அரசு சட்டம் 1935
7.    காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்தவர் யார்? சுபாஷ் சந்திரபோஸ்
8.     1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கிருந்து வந்தார்?


Fill in the blanks:

1.    காந்தியடிகள் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் இருந்து எந்த ரயில் நிலையத்தில் கீழே இறக்கப்பட்டார்? பீட்டர்மரிட்ஸ்பர்க்
2.    காந்தியடிகளின் அரசியல் குரு யார்? கோபால கிருஷ்ண கோகலே
3.    கிலாபத் இயக்கத்திற்கு தலைமை ஏற்றவர் யார்? காந்தியடிகள்
4.    இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் எந்த ஆண்டு இரட்டை ஆட்சியை அறிமுகம் செய்தது? 1919
5.    வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர் யார்? கான் அப்துல் காபர் கான்
6.    சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் ராம்சே மெக்டொனால்டு திட்டம் எது? வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
7.    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை தலைமறைவாக செயல்படுத்தியவர் யார்? உஷா மேத்தா
8.    பாகிஸ்தான் என்ற வார்த்தை பதத்தை உருவாக்கியவர் யார்? ரஹமத் அலி


Match the following:

1.    ரவுலட் சட்டம் கருப்புச் சட்டம் 
2.    ஒத்துழையாமை இயக்கம் பட்டங்களை திரும்ப ஒப்படைத்தல் 
3.    1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம்   இரட்டையாட்சி 
5.    இந்திய பொதுவுடமைக் கட்சி எம் என் ராய் 
6.    16 ஆகஸ்ட் 1947 நேரடி நடவடிக்கை நாள்












ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள உங்களுக்கு தெரியுமா அரசியலமைப்பு பாடப் பகுதியிலிருந்து டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
 









Post a Comment

0 Comments