- அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலாக எந்த நாட்டில் தோன்றியது? அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- அமைச்சரவைத் தூதுக்குழு திட்டம் எந்த வருடம் ஏற்படுத்தப்பட்டது? 1946
- இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்? 389 உறுப்பினர்கள் (மாகாண பிரதி நிதிகள் 292 பேர் சுதேச அரசுகள் 93 பேர் பலுசிஸ்தான் சார்பில் ஒருவர் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூன்று பேர்)
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது? 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள்
- அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? டாக்டர். சச்சிதானந்த சின்கா
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? H C.முகர்ஜி
- அரசியல் நிர்ணய சபையின் மொத்தம் எத்தனை நாட்கள் நடைபெற்றது? 11 அமர்வுகளாக 166 நாட்கள் நடைபெற்றது
- அரசியல் நிர்ணய சபையில் கூட்டத்தின்போது மொத்தம் எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன? 2473 திருத்தங்கள்
- இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவுகளை விளக்குக? முகவுரை 22 பாகங்கள் 395 சட்டப்பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகள் (1950ல்)
- இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ம் நாள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது? 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் கைப்பட எழுதியவர் யார்? பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா
- அரசியலமைப்பின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது எது? முகவுரை
- ஜவகர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1947 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் நாள்
- முகவுரை எப்பொழுது திருத்தப்பட்டது? 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 1976ம் ஆண்டு
- 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் யாவை? சமதர்மம் மதச்சார்பின்மை ஒருமைப்பாடு
- பிரஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது? 1789 ஆம் ஆண்டு
- குடியுரிமையைப் பற்றி விளக்கும் இந்திய அரசியலமைப்பு பாகம் மற்றும் பிரிவு எது? பாகம்-2 சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை
- குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1955
- குடியுரிமை சட்டம் இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? ஒன்பது முறை கடைசியாக 2019ஆம் ஆண்டு
- காமன்வெல்த் குடியுரிமை எந்த ஆண்டு நீக்கப்பட்டது? 2003ஆம் ஆண்டு
- இந்திய குடிமகன் ஒருவர் எத்தனை வழிகளில் குடியுரிமையை பெற இயலும்? 5 வழிகள்
- ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற செய்ய வேண்டியது என்ன? இயல்பு உரிமை கோரி இந்திய அரசிற்கு விண்ணப்பிப்பதின் மூலம் பெறலாம்
- அடிப்படை உரிமைகளை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? பகுதி-3 சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை
- இந்திய அரசியல் அமைப்பில் தற்போது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளன? 6
- இந்தியாவின் மகா சாசனம் என அழைக்கப்படுவது எது? இந்திய அரசியலமைப்பின் பகுதி 3
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனக் கூறும் அரசியலமைப்பு பிரிவு எது? சட்டப்பிரிவு 14
- தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 17
- பொது வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு அளித்தல் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 16
- மதம் இனம் சாதி பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதை தடைசெய்யும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 15
- ராணுவம் மற்றும் கல்விசார் பட்டங்களை தவிர மற்ற பட்டங்கள் ஒழிப்பு பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டபிரிவு 18
- குழந்தை தொழிலாளர் முறையை தடுப்பது பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 24
- கொத்தடிமை ஒழிப்பு முறை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்ட பிரிவு 23
- எந்த ஆண்டு அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது? 1978 ஆம் ஆண்டு 44 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி
- சொத்துரிமை தற்போது எந்த சட்டப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளது? இந்திய அரசியலமைப்பின் பகுதி 12 பிரிவு 300A
- பேச்சுரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவு 19
- தொடக்க கல்வி பெறும் உரிமையை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 21A
- சமத்துவ உரிமை பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 14 முதல் 18 வரை
- சுதந்திர உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் எது? சட்டப்பிரிவு 19 முதல் சட்டப்பிரிவு 22 வரை
- சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவுகள் எது?சட்டப்பிரிவு 23மற்றும் சட்ட பிரிவு 24
- சமயச் சார்பு உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 25 முதல் 28 வரை
- கல்வி கலாச்சார உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 29 மற்றும் 30
- அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்வு காணும் உரிமை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 32
- குடிமக்களின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய முதல் எழுதப்பட்ட ஆவணம் எது? கிபி 1715 இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜான் என்பவரால் வெளியிடப்பட்ட உரிமைகள் பட்டயம் அல்லது மகாசாசனம்
- நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீதிப்பேராணை
- அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 32
- இந்திய அரசியல் அமைப்பு எத்தனை விதமான நீதிப்பேராணை களை விளக்குகிறது? 5 நீதிப் பேராணைகள்
- டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களால் எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது? சட்டப்பிரிவு 32
- சட்டத்திற்குப் புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாக்கும் நீதிப்பேராணை எது? ஆட்கொணர் நீதிப்பேராணை அல்லது ஹேபியஸ் கார்பஸ்
- மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணியினை சம்பந்தப்பட்ட துறையில் இருந்து நிறைவேற்றிக் கொள்ள பயன்படும் நீதிப்பேராணை எது? கட்டளை உறுத்தும் நீதிப் பேராணை அல்லது மாண்டமஸ்
- ஒரு கீழ் நீதிமன்றம் தனது சட்ட எல்லைகளைத் தாண்டி செயல்படுவதை தடுக்கும் நீதிப்பேராணை எது? தடையுறுத்தும் நீதிப்பேராணை
- உயர் நீதிமன்றம் ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்ப செய்ய கீழ் நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை எது? ஆவண கேட்பு பேராணை
- சட்டத்திற்குப் புறம்பாக தகாத முறையில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுவதை தடைசெய்யும் நீதிப்பேராணை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தகுதி முறை வினவும் நீதிப்பேராணை
- அவசர நிலை பிரகடனம் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 352
- அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்படும் பொழுது தாமாகவே செயலிழக்கும் சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவு 19ன் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரம்
- எந்த ஒரு சூழ்நிலையிலும் தடை செய்ய இயலாத அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 20 மற்றும் 21 இன் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள்
- அரசின் நெறிமுறை உறுத்தும் கோட்பாடுகள் பற்றி குறிப்பிடும் அரசியலமைப்பு பகுதி எது? பகுதி-4 சட்டப்பிரிவு 36 முதல் 51 வரை
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? மூன்று பிரிவுகள்
- டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என்று குறிப்பிடப்படும் பகுதி எது? பகுதி 4 அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
- 86 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 2002
- எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி பிரிவு 45 திருத்தப்பட்டு பிரிவு 21Aவின் கீழ் தொடக்க கல்வி அடிப்படை உரிமையாக சேர்க்கப்பட்டது? 86 வது சட்டத்திருத்தம் 2002
- மாநில அரசுகள் முன்பருவ மழலையர் கல்வியை 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்தும் சட்டத்திருத்தம் எது? 86 ஆவது சட்ட திருத்தம் 2002
- அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டது? அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது? அயர்லாந்து
- 1976ஆம் ஆண்டுஅடிப்படை கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்யப்பட்ட கமிட்டி எது? ஸ்வரண் சிங் கமிட்டி
- அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது? 42 வது சட்டத்திருத்தம் 1976
- 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட பகுதி எது? பகுதி-4 51A
- இந்திய அரசியலமைப்பு கூறும் அடிப்படை கடமைகள் மொத்தம் எத்தனை? 11 (11 வது அடிப்படை கடமை 2002ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது)
- மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வினை பற்றிக் கூறும் அட்டவணை எது? ஏழாவது அட்டவணை
- தற்பொழுது மத்திய அரசு பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 100 துறைகள்
- தற்பொழுது மாநில அரசு பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 61 துறைகள்
- தற்பொழுது பொதுப்பட்டியலில் மொத்தம் எத்தனை துறைகள் உள்ளன? 52 துறைகள்
- 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி மொத்தம் எத்தனை துறைகள் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாறியது? 5 துறைகள்
- 1969ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு எது? டாக்டர் டிவி ராஜமன்னார் குழு
- மத்திய மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி விளக்கும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 268 முதல் 293வரை பகுதி 12
- சர்க்காரியா குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? 1983
- மாநிலங்களுக்கு இடையிலான குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? எந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது? 1990
- சர்க்காரியா குழு பரிந்துரைத்த பரிந்துரைகள் மொத்தம் எத்தனை? அவற்றில் எத்தனை மத்திய அரசு செயல்படுத்தியது? 247 பரிந்துரைகள் 180 பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்கப்பட்டது
- அலுவலக மொழிகள் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 343 முதல் 351 வரை பகுதி 17
- முதலாவது மொழி குழு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது? 1955
- அலுவலக மொழி சட்டம் எந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது? 1963
- இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தற்போது எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன? 22 மொழிகள்
- செம்மொழிகள் என்னும் புதிய வகைபாடு எந்த ஆண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது? 2004
- இந்தியாவில் தற்போது எத்தனை செம்மொழிகள் உள்ளன? ஆறு செம்மொழிகள்
- தமிழ் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது? 2004
- முதன்முதலாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட மொழி எது? தமிழ்
- சமஸ்கிருதம் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது? 2005
- தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் மொழி ஆகிய மொழிகள் எந்த ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது? தெலுங்கு 2008 கன்னடம் 2008 மலையாளம் 2013 ஒடியா 2014
- இந்தியாவில் மொத்தம் எத்தனை முறை அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது? மூன்றுமுறை 1962 1971 1975
- அவசர நிலைச் சட்டம் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் இருக்கமுடியும்? மூன்று ஆண்டுகள்
- தேசிய அவசர நிலை பிரகடனம் எந்த சட்டப் பிரிவின் கீழ் அமல்படுத்தப்படுகிறது? சட்டப்பிரிவு 352
- மாநில அவசரநிலை சட்டம் எந்த சட்டப் பிரிவின் கீழ் அமல்படுத்தப்படும்? சட்டப் பிரிவு 356
- இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதல் முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது? பஞ்சாப் 1951
- நிதி சார்ந்த அவசர நிலை பிரகடனம் எந்த சட்டப் பிரிவின் கீழ் வருகிறது? சட்டப்பிரிவு 360
- இந்தியாவில் தற்போது வரை மொத்தம் எத்தனை நிதி சார்ந்த அவசர நிலை பிரகடனம் செயல்படுத்தப்பட்டது? ஒருமுறை கூட இல்லை
- அரசியலமைப்பு சட்டத் திருத்தம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 368 பகுதி XX
- அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செய்ய 368 ஆவது சட்டப்பிரிவு எத்தனை வகைகளை விளக்குகிறது? மூன்று வகைகள்
- சிறிய அரசியலமைப்பு என அழைக்கப்படுவது எது? 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்
- 2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட செயல்பாட்டிற்கான தேசிய சீராய்வு ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? M.N.வெங்கடாசலயா
- அரசின் பல்வேறு நிலைகள் அவற்றிற்கு இடையேயான தொடர்பு மற்றும் பங்களிப்புகள் குறித்து ஆராய 2007 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு எது? M&M பூஞ்சி தலைமையிலான குழு
Choose the correct answer:
- கீழ்க்காணும் வரிசையில் முகவுரை பற்றிய சரியான தொடர் எது? ஈ)இறையாண்மை சமதர்ம சமயச் சார்பற்ற ஜனநாயக குடியரசு
- இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது? ஒரு முறை
- இந்திய அரசியல் அமைப்பு தனது குடிமக்களுக்கு எந்த வகை குடியுரிமையை வழங்குகிறது? ஒற்றை குடியுரிமை
- ஒரு வெளிநாட்டவர் கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற லாம் ?மேற்கண்ட அனைத்தும்
- மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி.சொத்துரிமை மற்ற அனைத்தும் அடிப்படை உரிமைகள்
- கீழ்க்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.? பெற்றோர்களின் பூர்வீக சொத்துக்கள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லுதல்
- இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் எதை அணுகி தங்களது அடிப்படை உரிமைகளை பெறலாம்? இந்திய உச்சநீதிமன்றம்
- பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விவரிக்கப்பட்டது?அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு காணும் உரிமை
- அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட முடியும்? தேசிய அவசர நிலையின் போது குடியரசுத் தலைவரின் ஆணையால்
- நமது அடிப்படை கடமைகளை எந்த நாட்டின் அரசியல் அமைப்பில் இடமிருந்து பெற்றோம்? ரஷ்யா அரசியலமைப்பு
- வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்தப்படுகின்றன?சமதர்ம காந்திய மற்றும் தாராள கொள்கைகள்
- எந்தப் பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும் ?சட்டப்பிரிவு 360
- எந்த குழுக்கள் மத்திய மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்ய அமைக்கப்பட்டது? சர்க்காரியா குழு மற்றும் ராஜமன்னார் குழு
Fill in the blanks:
- முதன்முதலில் அரசியலமைப்பு என்னும் கொள்கை எந்த நாட்டில் தோன்றியது? அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்? டாக்டர் சச்சிதானந்த சின்கா
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு எது? 1946 ஆம் ஆண்டு நவம்பர் 26
- சட்டப்பிரிவு 32 மொத்தம் எத்தனை நீதிப் பேராணைகள் குறிப்பிடப்படுகின்றன? 5 நீதிப் பேராணைகள்
- இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் எந்த பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ளன? பகுதி-IV A, சட்டபிரிவு 51A
Match the following:
- குடியுரிமை சட்டம் - 1955
- முகவுரை -ஜவகர்லால் நேரு
- சிறிய அரசியலமைப்பு -42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்
- செம்மொழி -தமிழ்
- தேசிய அவசர நிலை -1962
0 Comments