- இந்தியாவில் தற்பொழுது எத்தனை யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் உள்ளன? 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள்
- அனைத்து மாநிலங்களுக்கான சீரான அமைப்பினைப் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? பகுதி-6 சட்டப்பிரிவு 152 முதல் 237 வரை
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு எப்போது நடைமுறைக்கு வந்தது? 1957 நவம்பர் 26 முன்னதாக நவம்பர் 17ஆம் நாள் ஏற்கப்பட்டது.
- மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் யார்? ஆளுநர்
- ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றிக் கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 154
- மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும் எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்ட பிரிவு 154 (1)
- ஆளுநரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள் ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது பதவி காலம் நீட்டிக்க படலாம்.
- ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க கூடாது? அவர் நியமிக்கப்படும் மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது குடியரசுத்தலைவர் ஓர் ஆணையின் மூலம் ஆளுநரின் ஊதியம் மற்றும் பணிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம் என கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 158 (3A)
- மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன? சர்க்காரியா குழு
- சர்க்காரியா குழு ஆளுநர் நியமனம் குறித்து மொத்தம் எத்தனை ஆலோசனைகளை வழங்கியுள்ளது? மூன்றுவித ஆலோசனைகள்
- ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட தேவையான தகுதிகளை பற்றிக் கூறும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 157 மற்றும் 158
- ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது எவ்வளவு? 35 வயது
- முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையில் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களை செயல்படுத்துகிறார் எனக்கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 163
- மாநில அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்? ஆளுநர்
- மாநில அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்பவர் யார்? குடியரசுத் தலைவர்
- மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்பவர் யார்? ஆளுநர்
- குடியரசு தலைவர் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்பவர் யார்? ஆளுநர்
- சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் ஒத்தி வைக்கவும் சட்டமன்றத்தை கலைக்கவும் உரிமை பெற்றவர் யார்? ஆளுநர்
- ஆளுநர் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினர் இலிருந்து எத்தனை உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்கிறார்? ஒரு உறுப்பினர்
- ஆளுநர் மாநில சட்ட மேலவையில் எத்தனை இடங்களை நியமனம் செய்கிறார்? ஆறில் ஒரு பங்கு உறுப்பினரை நியமனம் செய்கிறார்.
- மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்கலாம் என கூறும் சட்டப்பிரிவு எது? சட்ட பிரிவு 213
- ஆளுநர் பிறப்பிக்கும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்? ஆறு மாதத்திற்குள்
- மாநிலத்தின் ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமை யாருடையது? ஆளுநர்
- பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சிகளில் நிதி நிலையை ஆய்வு செய்ய ஆளுநர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கிறார்? ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
- மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர் யார்? ஆளுநர்
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்பவர் யார்? குடியரசுத் தலைவர் ஆளுநரின் ஆலோசனையின் பேரில்
- மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத பொழுது ஆளுநர் எந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கிறார்? எந்த கட்சியையும்ம் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
- ஆளுநருக்கான சிறப்புரிமைகளை வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 361 (1)
- மாநில ஆளுநருக்கு எதிராக எந்த நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகளை தொடர முடியும்?ஆளுநருக்கு எதிராக உரிமையியல் வழக்குகளைத் தொடர முடியாது.
- ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்த அல்லது கைது செய்யவும் அதிகாரம் பெற்ற நீதிமன்றம் எது? ஆளுநர் தனது பதவிக்காலத்தில் இருக்கும் பொழுது எந்த நீதிமன்றமும் கைது செய்ய உத்தரவிட முடியாது.
- ஆளுநருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை தொடர முடியுமா?முடியாதா? முடியாது.
- முதலமைச்சரை நியமனம் செய்பவர் யார்? மாநில ஆளுநர்.
- முதலமைச்சரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? நிர்ணயிக்கப்படவில்லை.
- தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் யார்? (சுதந்திர இந்தியாவில்)? திரு ஓமந்தூர் ராமசாமி
- காமராஜர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார்? ஒன்பது ஆண்டுகள் 1954 முதல் 1963 வரை
- தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்? திருமதி ஜானகி ராமச்சந்திரன் ஜனவரி 1988
- செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் எந்த ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார்? 1991
- மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் யார்? முதலமைச்சர்
- அமைச்சரவை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தி முடிவுகள் எடுப்பவர் யார்? முதலமைச்சர்
- மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு? ஆளுநர்
- மாநில அமைச்சரவை எதற்கு கூட்டாக பொறுப்பானது? மாநில சட்டமன்றத்திற்கு
- சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றால் எத்தனை மாத காலத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்? ஆறு மாத காலத்திற்குள்
- அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 163
- முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும் எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 163 (1)
- மாநில அமைச்சரவையில் அதிகபட்ச எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம் என அரசியல் அமைப்பு கூறுகிறது? முதல் அமைச்சர் உட்பட மொத்தம் அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு.
- மாநில அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு தாண்டக் கூடாது எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 164 (1A)
- ஈரவை சட்டமன்றம் கொண்டுள்ள மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு தருக. கர்நாடகம் மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா பீஹார்
- தமிழக அமைச்சரவையில் அதிகபட்ச அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 36 பேர்
- ஒரு மாநில சட்டமன்றத்தில் இருக்கவேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச எண்ணிக்கை எவ்வளவு? குறைந்தபட்சம் 60 பேர் அதிகபட்சம் 500 பேர்
- மாநில மேலவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை எவ்வளவு? 40-பேர்
- மாநில சட்ட மேலவையில் இருக்கவேண்டிய அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? மாநில சட்டப்பேரவையில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை? 235 பேர்(234+1)
- தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்? 234
- சபாநாயகர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும் பொழுது அவர் சட்டமன்ற உறுப்பினராக தனது பதவியை தொடர இயலுமா? இயலாது.
- சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் முன்பு எத்தனை நாட்களுக்கு முன்பு அவருக்கு அறிவிப்பு கொடுத்தல் வேண்டும்? 14 நாட்களுக்கு முன்பு
- சட்டமன்றம் கலக்கப்படும் பொழுது சபாநாயகர் தமது பதவியை தொடர இயலுமா? இயலாதா? இயலும் புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டம் வரை தொடர இயலும்.
- மாநில சட்ட மேலவையில் குறைந்தபட்ச எண்ணிக்கை 40 குறையாமலும் அதிகபட்சம் சட்டமன்றப் பேரவையில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமலும் இருக்க வேண்டும் எனக்கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 171 (1)
- விதான் பரிஷத் என்று அழைக்கப்படுவது எது? சட்டமேலவை
- சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு? 6 ஆண்டுகள்
- தமிழ்நாட்டில் எந்த ஆண்டு சட்ட மேலவை கலைக்கப்பட்டது? 1986 நவம்பர் 1
- ஒருவர் மாநில சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட கொண்டிருக்க வேண்டிய குறைந்த பட்ச வயது எவ்வளவு? 30 ஆண்டுகள்
- மாநில சட்ட மேலவைக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
- மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் பட்டதாரிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரி 12
- மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? 12 இல் ஒரு பங்கு உறுப்பினர்கள்
- மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்கள் சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
- மாநில சட்ட மேலவைக்கு எத்தனை உறுப்பினர்களை ஆளுநர் நேரடியாக நியமனம் செய்கிறார்? ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
- சட்டமேலவை உருவாக்கம் அல்லது நீக்கம் பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 169
- ஒரு மாநில சட்ட மேலவையை கலைக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் எத்தனை உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்? குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்
- மாநில சட்ட மேலவையை கலைக்கும் அதிகாரம் பெற்றது எது? நாடாளுமன்றம்
- பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும் அதிகாரம் யாருடையது மத்திய அரசு அல்லது மாநில அரசு? மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய அரசு சட்டம் இயற்றும் பொழுது அது செல்லாததாகிவிடும்.
- நிதி சார்ந்த நடவடிக்கைகளில் வாக்களிக்கும் அதிகாரம் எந்த அவையிடம் உள்ளது? கீழவையிடம் மட்டுமே உள்ளது.
- கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்கள் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? 1862
- இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு என்று ஒரு பொதுவான உயர்நீதி மன்றத்தை நிறுவி நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கிய சட்டத்திருத்தம் எது? ஏழாவது சட்டத்திருத்தம் 1956
- விக்டோரியா மகாராணி வழங்கிய காப்புரிமை கடிதம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது? 1862 ஜூன் 26
- உலகிலேயே மிகப்பெரிய நீதிமன்ற வளாகம் எங்கு அமைந்துள்ளது? லண்டன் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது பெரிய வளாகம் சென்னை
- ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் அசாம் நாகலாந்து மணிப்பூர் மிசோரம் மேகாலயா திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான உயர் நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது? கௌஹாத்தி அஸ்ஸாம்
- தனக்கென ஓர் உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ள யூனியன் பிரதேசம் எது? டெல்லி
- உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
- இந்தியாவில் தற்பொழுது மொத்தம் எத்தனை உயர் நீதிமன்றங்கள் உள்ளன? 25
- ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 216
- மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வளவு மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை விசாரிக்க இயலும்? ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை
- ராணுவ தீர்ப்பாயங்கள் இன் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளதா இல்லையா? இல்லை
- அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகள் வெளியிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 226
- கீழ் நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்றம் மீதும் ஆணை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கட்டளை உறுத்தும் நீதிப் பேராணை அல்லது மாண்டமாஸ்
- கீழ் நீதிமன்றங்கள் தனது அதிகார எல்லையை தாண்டி செயல்படாமல் தடுக்கும் நீதிப்பேராணை எது? தடை உறுத்தும் நீதிப் பேராணை
- புதுப் பதவிக்கு தவறாக வரும் ஒருவரை தடுக்கும் நீதிப்பேராணை எது? தகுதி வினவும் நீதிப்பேராணை
- பதிவேடுகளின் நீதிமன்றம் என்று அழைக்கப்படும் நீதிமன்றம் எது?உயர்நீதிமன்றம்
- மத்திய மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்ட அல்லது முரண்பட்ட தான் என்பதை ஆராய உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரம் எது? நீதிபுனராய்வு
- உயர் நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரம் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 226 மற்றும் 227
- உயர்நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரத்தை குறைத்த அல்லது தடை செய்த சட்டத்திருத்தம் எது? 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1976
- எந்த சட்டத்திருத்தம் குறைக்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் நீதிபுனராய்வு அதிகாரத்தை மீண்டும் வழங்கியது? 43 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1977
Choose the correct answer:
- மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
- மாநில சபாநாயகர் ஒரு மேற்கண்ட எதுவுமில்லை.
- கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரம் அல்ல? தூதரகம்.
- ஆங்கிலோ இந்தியன் வகுப்பினரிலிஇருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு நியமிப்பவர் யார்? ஆளுநர்.
- ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை? உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
- மாநில முதலமைச்சரை நியமிப்பவர் யார்? ஆளுநர்
- மாநில அமைச்சரவையின் தலைவர் யார்? முதலமைச்சர்
- சட்ட மேலவை என்பது நிரந்தர அவை ஆகும்.
- மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது எவ்வளவு? 30 வயது
- மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? உள்ளாட்சி அமைப்புகள் பட்டதாரிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- கீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருக்கவில்லை ?தமிழ்நாடு
- இந்தியாவில் முதன்முதலில் உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் யாவை? கல்கத்தா பம்பாய் மற்றும் சென்னை
- கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதிமன்றத்தை பெற்றுள்ளன? பஞ்சாப் மற்றும் ஹரியானா.
Fill in the blanks:
- ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்? குடியரசுத் தலைவர்
- சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் யார்? மக்கள்
- தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் யார்? திருமதி.சரோஜினி நாயுடு
- மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுபவர் யார்? ஆளுநர்
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றத்தை அமைக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கும் 7ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1956
- அரசு பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணிநீக்கம் செய்பவர் யார்? குடியரசுத் தலைவர்
Match the following:
- ஆளுநர் -மாநில அரசின் தலைவர்.
- முதலமைச்சர் -அரசாங்கத்தின் தலைவர்.
- அமைச்சரவை - சட்டமன்றத்திற்கு பொறுப்பானவர்கள்.
- மேலவை உறுப்பினர்- மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது.
- ஆயுதப் படையினர் -தீர்ப்பாயங்கள்.
0 Comments