டெல்லி சுல்தானியம்
டெல்லி சுல்தானியம்
- இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது? முகமது கோரி ( கிபி 12ஆம் நூற்றாண்டு)
- ராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் பாரசீகச் சொல் எது? பன்டகன்
- இந்தியாவில் அடிமை வம்சம் ஆட்சியை கொண்டு வந்தவர் யார்?குத்புதீன் ஐபக்
- அடிமை வம்சம் மரபு எவ்வாறு அழைக்கப்பட்டது? மம்லுக் மரபு
- குத்புதீன் ஐபக் தனது தலைநகரை லாகூரில் இருந்து எங்கு மாற்றினார்? டெல்லி
- டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் என்னும் மசூதியை கட்டியவர் யார்?குத்புதீன் ஐபக்
- இந்தியாவில் உள்ள மிகப் பழமையான மசூதி எது? டெல்லியில் குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித்
- குதுப்மினார் யாரால் கட்டப்பட்டது?குத்புதீன் ஐபக் அவர்களால் தொடங்கப்பட்ட இல்டுமிஷ் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டது
- சகல்கானி எனும் நாற்பதின்மர் குழுவை உருவாக்கியவர் யார்? இல்துமிஷ்
- ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது? இக்தா
- டெல்லி சுல்தானின் முதல் பெண் அரசி யார்? ரசியா
- நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் யார்? கியாசுதீன் பால்பன்
- பாரசீகத்தை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமீர்குஸ்ருவை ஆதரித்தவர் யார்?கியாசுதீன் பால்பன்
- கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? ஜலாலுதின் கில்ஜி
- அலாவுதீன் கில்ஜியின் தலைமை தளபதி யார்? மாலிக்கபூர்
- வாரங்கல் அரசர் பிரதாப ருத்ரன் வெற்றிகொண்டவர் யார்?ஜானாகான்
- தனது தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய டெல்லி சுல்தான் யார்? முகமது பின் துக்ளக்
- தேவகிரி எனும் பெயரை தௌலபாத் என மாற்றியவர் யார்? முகமது பின் துக்ளக்
- முகமது பின் துக்ளக் காலத்திலிருந்த மொரக்கா நாட்டுப் பயணி யார்?இபன் பதுதா
- தைமூர் படையெடுப்பு எந்த ஆண்டு நடைபெற்றது? கிபி 1398
- மத்திய ஆசியாவில் சார்க்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் யார்? தைமூர்
- சையது அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார்? கிசிர்கான்
- செய்யது அரச வம்சத்தின் கடைசி அரசர் யார்? அலாவுதீன் ஆலம் ஷா
- டெல்லியில் லோடி வம்சம் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்? பகலூல் லோடி
- ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?சிக்கந்தர் லோடி
- மோடி அரச வம்சத்தின் கடைசி அரசர் யார்? இப்ராஹிம் லோடி
- முதலாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? கிபி 1526
- இந்தியாவில் முகாலய பேரரசு நிறுவியவர் யார்? பாபர்
- முஸ்லிம்கள் ஆட்சியில் கல்வி நிலையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?மதரசாக்கள்
- இந்திய பாரசீக கட்டிடக்கலையின் பெயர் என்ன? இந்தோ சாராசானிக்
விஜயநகர பாமினி அரசுகள்
- விஜயநகரப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது? ஹரிஹரர் மற்றும் புக்கர்
- ஹரிஹரர் மற்றும் புக்கர்ஐ நாட்டை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியவர் யார்?வித்யாரண்யர்
- விஜயநகரத்தை ஆண்ட அரச வம்சங்கள் யாவை? சங்கமா சாளுவ துளுவ அரவிடு
- மதுரா விஜயம் எனும் நூலை எழுதியவர் யார்?கங்காதேவி
- சங்கம வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்?இரண்டாம் தேவராயர்
- இஸ்லாமிய வீரர்களை தமது படையில் சேர்த்துக் கொண்டார் விஜயநகர அரசர் யார்? இரண்டாம் தேவராயர்
- சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?இரண்டாம் விருபாக்ஷி ராயர்
- கிருஷ்ணதேவராயர் எந்த அரச வம்சத்தை சார்ந்தவர்? துளுவ வம்சம்
- ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில் ராமசாமி கோவில் விட்டலா சாமி கோவில் போன்ற கோவில்களை கட்டியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
- யாருடைய அவையில் அஷ்டதிக்கஜங்கள் இருந்தனர்? கிருஷ்ணதேவராயர். (விக்ரமாதித்தன் அவையில் நவரத்தினங்கள் இருந்தனர்).
- தலைக்கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கிபி 1565
- ராட்சச தங்கடி என்று அழைக்கப்பட்டது எது?தலைக்கோட்டை போர்
- தலைக்கோட்டை போர் யாருடைய ஆட்சியின் போது ஏற்பட்டது? துளுவ அரசர் ராமராயர்
- அரவீடு வம்சத்தை தொடங்கியவர் யார்? திருமலை தேவராயர்
- அரவிடு வம்சத்தின் தலைநகரம் எது? பெனுகொண்டா
- விஜயநகர அரசு இறுதியாக எப்போது வீழ்ச்சியுற்றது? கிபி 1646
- விஜயநகரப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகள் யாவை? மண்டலம் (மாநிலம்) நாடு(மாவட்டம்) ஸ்தலம் கிராமம்
- விஜயநகர பேரரசில் மண்டலத்தின் ஆளுநர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?மண்டலேஸ்வரா
- விஜயநகரப் பேரரசில் கிராம தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?கௌடா
- விஜயநகரப் பேரரசின் தங்க நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது? வராகன்
- விஜயநகரப் பேரரசு காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பாரசீக பயணி யார்? அப்துர்ரஸ்ஸாக்
- விஜயநகரப் பேரரசில் தொழில்சார் அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கில்டுகள்
- ஆமுக்த மால்யதா இன்னும் காவியத்தை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
- ஜாம்பவதி கல்யாணம் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
- பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை எழுதியவர் யார்? தெனாலி ராமகிருஷ்ணா
- தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது எது? ஆமுக்த மால்யதா
- ஆமுக்த மால்யதா என்பதன் பொருள் என்ன? தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்
- பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? ஹசன் கங்கு(அலாதீன் ஆஸான்)
- ஹசன் கங்கு பாமினி ஆட்சி காலத்தில் மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தராப்
- ஷாநாமா என்னும் நூலை எழுதியவர் யார்? பிர்தௌசி
- பாமினி அரசில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் இருந்தனர்? 8
- பாமினி அரசு அரசருக்கு அடுத்த நிலையில் செயல்பட்டவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வக்கீல் சுல்தான
- பாமினி அரசு நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? அமீர் ஜூம்லா
- பாமினி அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வசீர் இ அசாரப்
- பாமினி அரசு காவல்துறை தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கொத்தவால்
- பாமினி அரசு தலைமை நீதிபதி சமயம் மற்றும் அறக்கொடைகள் அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?சதார்-இ-ஜஹான்
- பாமினி பேரரசு எத்தனை சுல்தானாக பிரிந்தது? 5 அவை பீடார் பிஜபூர் அகமதுநகர் கோல்கொண்டா பீரார்
- விஜய நகர கட்டடக் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது? குதிரை
- சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்? இரண்டாம் விருபாக்ஷ ராயர்
- மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்? குமார கம்பண்ணா
- பாமினி அரசியல் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராக விளங்கியவர் யார்? சுல்தான் பெரோஸ்
- பாமினி வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் ஆட்சி செய்தனர்? 18
- பாமினி பேரரசு தலைநகரம் எது?பீடார்
- துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்? நரச நாயக்கர்
- தென்னிந்திய கோவில்களுக்கு நுழைவுவாயில் கோபுரங்களை கட்டிக்கொடுத்த விஜயநகர பேரரசர் யார்? கிருஷ்ணதேவராயர்
- கிருஷ்ணதேவராயர் அவையிலிருந்த அஷ்டதிக்கஜங்கள் சிறந்தவர் யார்?அல்லசாணி பெத்தண்ணா
0 Comments