பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்
தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்
- பண்டைய சோழ அரசின் தலைநகரம் எது? உறையூர்
- பிற்கால சோழர்களின் தலைநகரம் எது?தஞ்சாவூர்
- பிற்கால சோழ வம்சத்தை உருவாக்கியவர் யார்? விஜயாலயன்
- கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியவர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
- ராஜராஜேஸ்வரம் என்றழைக்கப்படும் கோவில் எது? தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
- கங்கைகொண்டான் என்று அழைக்கப்படுபவர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
- தெற்கு சுமத்ரா தீவுகளில் வென்ற சோழ அரசர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
- பிற்காலச் சோழர்களின் விஜயாலயன் வழிவந்தோரின் கடைசி அரசர் யார்? அதிராஜேந்திரன்
- சாளுக்கிய சோழ வம்ச ஆட்சியை தொடங்கியவர் யார்? முதலாம் குலோத்துங்க சோழன்
- பாண்டியர் ஆட்சியை நிறுவியவர் யார்? முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
- பிற்காலப் பாண்டியப் பேரரசு எப்போது நிறுவப்பட்டது? கிபி 1279
- சோழர்களின் நிர்வாக பிரிவுகள் யாவை? பேரரசு} மண்டலம் }நாடு} கூற்றம்} கிராமம்
- கிராம ஆட்சி பற்றி விவரிக்கும் கல்வெட்டு எது? காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு
- சோழர்களின் ஆட்சியில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? காணிக்கடன்
- சோழ அரசில் சமணசமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? பள்ளிச் சந்தம்
- நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? வேளாளர்
- முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை எங்கு உள்ளது? கங்கைகொண்ட சோழபுரம்
- திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?நம்பியாண்டார் நம்பி
- எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவிய சோழ அரசர் யார்? முதலாம் ராஜேந்திரன்
- சோழர்களின் காலத்தில் இருந்த வணிக குழுக்கள் எவை? அஞ்சு வண்ணத்தார், மணி கிராமத்தார்
- மேற்கு ஆசியர்கள் அராபியர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வணிக குழுவிற்கு என்ன பெயர்? அஞ்சு வண்ணத்தார்
- சோழர்களின் ஆட்சியில் உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த வணிகக்குழு எது? மணி கிராமத்தார்
- தொடக்ககால பாண்டியர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகமாக விளங்கியது எது? கொற்கை
- கிபி ஆறாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் இடமிருந்து பாண்டிய அரசை மீட்டவர் யார்? கடுங்கோன்
- சமணர்களை துன்புறுத்திய பாண்டிய மன்னர் யார்? கூன்பாண்டியன் என்றழைக்கப்பட்ட அரிகேசரி மாறவர்மன்
- ஹரி கேசரி மாறவர்மன் சமண சமயத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்? திருஞானசம்பந்தர்
- முதலாம் வரகுணன் என்று அழைக்கப்பட்டவர் யார்? பராந்தக நெடுஞ்சடையன்
- வேள்விக்குடி செப்பேடுகள் இன் கொடையாளி யார்? முதலாம் வரகுண பாண்டியன்
- முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த பாண்டிய அரசன் யார் ?இரண்டாம் ராஜசிம்மன்
- வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ தமிழ்நாட்டில் இங்கு வருகை புரிந்தார்? காயல் துறைமுகம்
- செல்வ செழிப்பு மிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதி என்று பாண்டிய பேரரசை பாராட்டியவர் யார்? மார்க்கோபோலோ
- இரண்டாம் பாண்டிய பேரரசின் புகழ்பெற்ற அரசர் யார்? சடையவர்மன் சுந்தரபாண்டியன்
- கூடல் கோன் கூடல் காவலன் என்று போற்றப்பட்டவர் யார்? பாண்டிய மன்னர்கள்
- பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் குடியிருப்புக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம்
- பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நிலத்தின் உண்மையான உடமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பூமி புத்திரர் அல்லது வேளாளர்
- பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பிரதம மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? உத்திர மந்திரி
- பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அரசு செயலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது? எழுத்து மண்டபம்
- பாண்டியர்களின் நிர்வாகப் பிரிவுகள் யாவை? மண்டலம்} வளநாடு }நாடு }கூற்றம்
- பாண்டியப் பேரரசின் நாட்டை நிர்வகித்த அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? நாட்டார்
- பாண்டியர்களின் கிராம நிர்வாகத்தைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது? திருநெல்வேலி மானூர் கல்வெட்டு
- பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? குதிரை செட்டிகள்
- பாண்டியர்களின் துறைமுகங்களில் விருவிருப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது? காயல்பட்டினம் (தூத்துக்குடி)
- பாண்டியர்களின் ஆட்சியில் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? காசு கழஞ்சு பொன்
0 Comments