மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
1. மாநில அரசின் தலைவர் யார்? ஆளுநர்
2. ஆளுநரை நியமிப்பவர் யார்? குடியரசுத் தலைவர்
3. மாநில நிர்வாகத்தின் தலைவர் யார்? ஆளுநர்
4. ஆளுநரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள்
5. ஆளுநராக இருக்க வேண்டிய குறைந்தபட்ச வயது எவ்வளவு? 35 வயது
6. மாநில அரசின் தலைமை நிர்வாகி யார்? ஆளுநர்
7. மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர் யார்? ஆளுநர்
8. மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் யார்? ஆளுநர்
9. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்ட பிரிவு 356
10. மாநில சட்ட மேலவையில் எதனடிப்படையில் மாநில ஆளுநர் உறுப்பினர்களை நியமிக்கிறார்? பிரதிநிதித்துவம் அடிப்படையில் ஆறில் ஒரு பங்கு என்ற அளவிற்கு
11. மத்திய அரசின் முகவராக மாநிலத்தில் செயல்படுபவர் யார்? ஆளுநர்
12. மாநில அமைச்சரவையின் தலைவர் யார்? ஆளுநர்
13. ஒருவர் முதலமைச்சராக பதவி ஏற்கும் போது உறுப்பினராக இல்லாவிட்டால் எத்தனை மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? ஆறு மாதத்திற்குள்
14. மாநிலத்தின் தலைமை நிர்வாகி யார்? முதலமைச்சர
15. ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் எவை? உத்தரப் பிரதேசம் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா கர்நாடகா மகாராஷ்டிரா பீகார் ஜம்மு காஷ்மீர் 7 மாநிலங்கள்
16. ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையின் குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை? 40
17. ஒரு மாநிலத்தின் சட்ட மேலவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது? மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல்
18. சட்டமன்ற மேலவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் யார்? பஞ்சாயத்து மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்
19. சட்டமன்ற மேலவையில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை நியமிப்பவர் யார்? ஆளுநர்
20. சட்டமன்ற மேலவையில் பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் யார்? பட்டதாரிகள்
21. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவார்? இரண்டு ஆண்டுகள்
22. சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு? ஆறு ஆண்டுகள்
23. ஒருவர் சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 30 வயது
24. சட்டமன்றத் பேரவை தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச வயது எவ்வளவு? 25 வயது
25. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை? 500 உறுப்பினர்கள்
26. அரசியலமைப்பு சட்டப் பிரிவின்படி ஒரு மாநிலத்தில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது? 60 உறுப்பினர்கள்
27. மாநில ஆளுநர் சட்டமன்றத்திற்கு எத்தனை ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்?ஒன்று
28. தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன?234
29. தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் எத்தனை இடங்களை பெற்றிருக்க வேண்டும்? 118 இடங்கள்
30. மாநில சட்டமன்றம் ஆண்டிற்கு எத்தனை முறை கூடும்? இரண்டு அல்லது மூன்று முறை
31. மாநில அமைச்சரவை எதற்கு கடமைப்பட்டு உள்ளது? சட்டமன்றத்திற்கு கடமைப்பட்டுள்ளது
32. மாநில அரசாங்கத்தில் நிதி மசோதா எங்கு அறிமுகப்படுத்தப்படும்? சட்டமன்றம்
33. மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவும் அதிகரிக்கவும் குறைக்கவும் விலகிக் கொள்ளவும் எதனுடைய அனுமதி தேவை? சட்டமன்றம்
34. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இயலுமா? தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டும்
35. மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இயலுமா? அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கலாம்
36. அரசியலமைப்பு திருத்தம் சமயத்தில் சட்டமன்றம் பங்கேற்க இயலுமா? சில நேரங்களில் பங்கேற்கலாம்
37. ஒரு சட்டமன்ற தொகுதியின் மக்கள் தொகை எவ்வளவு? குறைந்த பட்சம் ஒரு லட்சம்
38. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச வயது என்ன? 25
39. சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? ஐந்து ஆண்டுகள்
40. சட்டமன்றத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார்? சபாநாயகர்
41. மாநில சபாநாயகர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? சட்டமன்ற உறுப்பினர்களால்
42. சபாநாயகர் இல்லாத நேரத்தில் சட்டமன்றக் கூட்டத்திற்கு தலைமை ஏற்பவர் யார்? துணை சபாநாயகர்
43. சட்டமன்றத்தில் முக்கிய பணி என்ன? மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது
44. மாநில சட்டமன்றம் எந்தெந்த பட்டியலில் உள்ள துறைகள் மீது சட்டம் இயற்ற முடியும்? மாநில பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல்( புத்தகத்தில் மத்திய பட்டியல் என்று உள்ளது P.no. 235)
45. நெருக்கடிநிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலுமா? இயலாது
46. மாநிலத்தின் நிதியை கட்டுப்படுத்துவது எது? சட்டமன்றம்
47. சட்டமன்ற மேலவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பவர் யார்? சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்
48. ஒரு மசோதா எப்பொழுது சட்டம் ஆகிறது? பாதிக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டம் ஆகிறது
49. ஆணின் திருமண வயது என்ன? 21
50. பெண்ணின் திருமண வயது என்ன ?18
51. சட்டமன்றப் பேரவை சட்டமன்ற மேலவை இரண்டில் எது? அதிகாரம் மிக்கது சட்டமன்றப் பேரவை
52. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாது?நிர்ணயிக்கப்படவில்லை
53. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்பவர் யார்? குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநரின் ஆலோசனைப்படி
54. உயர்நீதிமன்ற நீதிபதியின் அதிகபட்சம் எத்தனை வயது வரை பதவியில் இருக்கலாம் ?62 வயது வரை
55. மொத்தம் எத்தனை நீதி பேராணைகள் உள்ளன ?5
56. மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும் ஒத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர் யார்? சபாநாயகரா ஆளுநரா? ஆளுநர்
0 Comments