education

8th குடிமக்களும் குடியுரிமையும்


1.     குடியுரிமை எத்தனை வகைப்படும்? இரண்டு வகைப்படும் இயற்கை குடியுரிமை இயல்பு குடியுரிமை
2.     பிறப்பால் பெறக்கூடிய குடியுரிமை எந்தவகை குடியுரிமை? இயற்கை குடியுரிமை
3.     விண்ணப்பித்து பெறும் குடியுரிமை எந்த வகை குடியுரிமை? இயல்பு குடியுரிமை
4.     இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1955
5.     இந்தியாவில் குடியுரிமை பெற எத்தனை வழிமுறைகளை இந்திய அரசியலமைப்பு பரிந்துரைக்கிறது? 5
6.     எந்த ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவில் பிறப்பவர் இந்திய குடிமகனாக அங்கீகரிக்கப் படுகிறார்? 2004 டிசம்பர் 3
7.     எந்த ஆண்டிற்குப் பின்னர் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால் குடியுரிமை அளிக்கப்படுகிறது? 1987 ஜூலை 1
8.     எந்த ஆண்டில் முதல் எந்த ஆண்டு வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்? 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை
9.     எந்த ஆண்டு முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்? 2004 டிசம்பர் 3
10. இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் பதிவு மூலம் குடியுரிமை பெற இயலும்? ஏழு ஆண்டுகள்
11. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் எதன் மூலம் குடியுரிமை பெற இயலும்? பதிவு செய்தல் மூலம்
12. எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாகவே தடுக்கும் பொருட்டு வழங்கப்படும் குடியுரிமை எது?  இயல்பு குடியுரிமை
13. வெளிநாட்டு குடியுரிமையை ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவருக்கு வழங்கப்படும் குடியுரிமை எது?  இயல்பு குடியுரிமை
14. நல்ல பண்புகளையும் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் போதிய அறிவைப் பெற்ற ஒருவருக்கு வழங்கப்படும் குடியுரிமை என்ன? இயல்பு குடியுரிமை
15. எந்த ஆண்டு முதல் பாண்டிச்சேரி மக்கள் இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டனர்? 1962
16.    இந்திய அரசியலமைப்பு குடியுரிமை இழப்பு பற்றி எத்தனை வழிமுறைகளை கொண்டுள்ளது? 3
17. இந்திய குடியுரிமை இழத்தல் பற்றிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?இரண்டாவது பகுதி சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை
18. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு ஒற்றை குடியுரிமையை வழங்குகிறதா அல்லது இரட்டைக்குடியுரிமை? ஒற்றை குடியுரிமை
19. இரட்டை குடியுரிமை வழங்கும் நாடுகள் எவை? அமெரிக்கா சுவிட்சர்லாந்து
20. இந்திய நாட்டின் முதல் குடிமகன் யார்? குடியரசு தலைவர்
21. இந்திய பூர்வீக குடியினர் எனும் அந்தஸ்து எந்த ஆண்டிலிருந்து நீக்கப்பட்டது? 2015 ஜனவரி 9
22. இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது? 42வது அரசியலமைப்பு திருத்த சட்டம் இது குட்டி அரசியலமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது
23.   வெளிநாடு வாழ் இந்தியர் தினம் அல்லது பிரவாசி பாரதிய தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி 9ஆம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது.
 

Post a Comment

0 Comments