education

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

தமிழ்நாட்டில் கலையும் கட்டிடக்கலையும்
1.     தமிழ்நாட்டில் கோவில் கட்டடக் கலை எத்தனை கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? ஐந்து கட்டங்களாக அவை பல்லவர் காலம் முற்கால சோழர்கள் காலம் பிற்காலச் சோழர் காலம் விஜயநகர நாயக்கர் காலம் நவீன காலம்
2.     குடைவரை கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழ்ந்த மன்னர் யார்?மகேந்திரவர்மன்
3.     மண்டகப்பட்டு குடைவரைக் கோவிலை உருவாக்கிய மன்னர் யார்? பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
4.     ஏழு கோவில்கள் என அழைக்கப்படுவது எது? மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோவில்கள்
5.     மகாபலிபுரம் கடற்கரை கோவில்கள் யாரால் எழுப்பப்பட்டவை? பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன்
6.      தென்னிந்தியாவின் மிகப் பழமையான கட்டுமான கோவில்கள் எது? மாமல்லபுரம் கடற்கரை கோவில்
7.     இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
8.     காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்? நரசிம்மவர்மன்
9.     காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் யாரால் கட்டப்பட்டது? இரண்டாம் நந்திவர்மன்
10.   மாமல்லபுரம் கடற்கரை கோவில் எப்பொழுது உலக பாரம்பரிய சின்னங்களில் UNESCOவால் அங்கீகரிக்கப்பட்டது?1984
11. கழுகுமலை ஒற்றைக்கல் கோவில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது? பாண்டியர்கள் ஆட்சி காலத்தில்
12.  முற்கால பாண்டியர்களின் ஓவியங்கள் எங்கு காணப்படுகின்றன? சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டம், திருமலைபுரம் திருநெல்வேலி மாவட்டம்
13. பிற்காலச் சோழர்களின் கட்டிட கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எது? தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்
14. தஞ்சை பெரிய கோவில் யாரால் கட்டப்பட்டது? முதலாம் ராஜராஜ சோழன்
15.   தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தின் உயரம் என்ன? 216 அடி
16. தட்சிண மேரு என்று அழைக்கப்படும் கோவில் எது? தஞ்சை பெரிய கோவில்
17. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் உயரம் என்ன? 55 மீட்டர்
18. கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரம் கோவிலை கட்டியவர் யார்? இரண்டாம் ராஜராஜன்
19. பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் கல்வெட்டில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்? தேசி விநாயகம் 
20. இசைத்தூண்கள் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டவை? விஜயநகரப் பேரரசுக் காலத்தில்
21. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டதாகும்? நாயக்கர் காலத்தில்
22.   நாங்குநேரி வானமாமலையார் கோவில் ரவி மண்டபம் ஆகியவை யாருடைய கால கட்டடக் கலை ஆகும்? நாயக்கர் கால கட்டடக் கலை
23. உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரம் எங்கு உள்ளது? ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் பிரகாரம்
24. பொலிவு மிக்க கோபுரங்கள் அழகாக புகழ் பெற்றவர்கள் யார்? பிற்காலச் சோழர்கள்
25. கோவில் கட்டிட கலையில் மண்டபங்களில் சிறந்து விளங்கியவர்கள் யார்? விஜயநகர பேரரசர்கள்
26. கோயில் கட்டிட கலையில் பேரழகு மிக்க விமானங்களை கட்டியவர்கள் யார்?முற்காலச் சோழர்கள்
27. பாறைகளில் சிற்பங்களைப் உடைப்பது யாருடைய காலத்தில்? பல்லவர்கள் காலத்தில்
28. ஜலகண்டேஸ்வரர் கோவில் எங்கு உள்ளது? வேலூர்
29. ஆதிநாதர் கோவில் எங்கு உள்ளது? ஆழ்வார்திருநகரி
30. அழகிய நம்பி கோவில் எங்கு உள்ளது? திருக்குருங்குடி
31. நெல்லையப்பர் கோவில் எங்கு அமைந்துள்ளது? திருநெல்வேலி

Post a Comment

0 Comments