education

விஜயநகர பாமினி அரசுகள்

விஜயநகர பாமினி அரசுகள்


1. விஜயநகரப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது? ஹரிஹரர் மற்றும் புக்கர்
2. ஹரிஹரர் மற்றும் புக்கர்ஐ நாட்டை முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியவர் யார்?வித்யாரண்யர்
3. விஜயநகரத்தை ஆண்ட அரச வம்சங்கள் யாவை? சங்கமா சாளுவ துளுவ அரவிடு
4. மதுரா விஜயம் எனும் நூலை எழுதியவர் யார்?கங்காதேவி
5. சங்கம வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்?இரண்டாம் தேவராயர்
6. இஸ்லாமிய வீரர்களை தமது படையில் சேர்த்துக் கொண்டார் விஜயநகர அரசர் யார்? இரண்டாம் தேவராயர்
7. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?இரண்டாம் விருபாக்ஷி ராயர்
8. கிருஷ்ணதேவராயர் எந்த அரச வம்சத்தை சார்ந்தவர்? துளுவ வம்சம்
9. ஹம்பியில் கிருஷ்ணசாமி கோவில் ராமசாமி கோவில் விட்டலா சாமி கோவில் போன்ற கோவில்களை கட்டியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
10. யாருடைய அவையில் அஷ்டதிக்கஜங்கள் இருந்தனர்? கிருஷ்ணதேவராயர்.   (விக்ரமாதித்தன் அவையில் நவரத்தினங்கள் இருந்தனர்).
11. தலைக்கோட்டை போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கிபி  1565
12. ராட்சச தங்கடி என்று அழைக்கப்பட்டது எது?தலைக்கோட்டை போர்
13. தலைக்கோட்டை போர் யாருடைய ஆட்சியின் போது ஏற்பட்டது? துளுவ அரசர் ராமராயர்
14. அரவீடு வம்சத்தை தொடங்கியவர் யார்? திருமலை தேவராயர்
15. அரவிடு வம்சத்தின் தலைநகரம் எது? பெனுகொண்டா
16. விஜயநகர அரசு இறுதியாக எப்போது வீழ்ச்சியுற்றது? கிபி 1646
17. விஜயநகரப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகள் யாவை? மண்டலம் (மாநிலம்) நாடு(மாவட்டம்) ஸ்தலம் கிராமம்
18. விஜயநகர பேரரசில் மண்டலத்தின் ஆளுநர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?மண்டலேஸ்வரா
19. விஜயநகரப் பேரரசில் கிராம தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?கௌடா
20. விஜயநகரப் பேரரசின் தங்க நாணயம் எவ்வாறு அழைக்கப்பட்டது? வராகன்
21. விஜயநகரப் பேரரசு காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பாரசீக பயணி யார்? அப்துர்ரஸ்ஸாக்
22. விஜயநகரப் பேரரசில் தொழில்சார் அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கில்டுகள்
23. ஆமுக்த மால்யதா இன்னும் காவியத்தை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
24. ஜாம்பவதி கல்யாணம் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்? கிருஷ்ணதேவராயர்
25. பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை எழுதியவர் யார்? தெனாலி ராமகிருஷ்ணா
26. தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது எது? ஆமுக்த மால்யதா
27. ஆமுக்த மால்யதா என்பதன் பொருள் என்ன? தான் அணிந்த பின்னர் கொடுப்பவர்
28. பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? ஹசன் கங்கு(அலாதீன் ஆஸான்)
29. ஹசன் கங்கு பாமினி ஆட்சி காலத்தில் மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? தராப்
30. ஷாநாமா என்னும் நூலை எழுதியவர் யார்? பிர்தௌசி
31. பாமினி அரசில் மொத்தம் எத்தனை அமைச்சர்கள் இருந்தனர்? 8
32. பாமினி அரசு அரசருக்கு அடுத்த நிலையில் செயல்பட்டவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வக்கீல் சுல்தான
33. பாமினி அரசு நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? அமீர் ஜூம்லா
34. பாமினி அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வசீர் இ அசாரப்
35. பாமினி அரசு காவல்துறை தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? கொத்தவால்
36. பாமினி அரசு தலைமை நீதிபதி சமயம் மற்றும் அறக்கொடைகள் அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?சதார்-இ-ஜஹான்
37. பாமினி பேரரசு எத்தனை சுல்தானாக பிரிந்தது? 5 அவை பீடார் பிஜபூர் அகமதுநகர் கோல்கொண்டா பீரார்
38. விஜய நகர கட்டடக் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது? குதிரை
39. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்? இரண்டாம் விருபாக்ஷ ராயர்
40. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்? குமார கம்பண்ணா
41. பாமினி அரசியல் சிறந்த மொழி அறிஞராகவும் கவிஞராக விளங்கியவர் யார்? சுல்தான் பெரோஸ்
42. பாமினி வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் ஆட்சி செய்தனர்? 18
43. பாமினி பேரரசு தலைநகரம் எது?பீடார்
44. துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்? நரச நாயக்கர்
45. தென்னிந்திய கோவில்களுக்கு நுழைவுவாயில் கோபுரங்களை கட்டிக்கொடுத்த விஜயநகர பேரரசர் யார்? கிருஷ்ணதேவராயர்
46. கிருஷ்ணதேவராயர் அவையிலிருந்த அஷ்டதிக்கஜங்கள் சிறந்தவர் யார்?அல்லசாணி பெத்தண்ணா

Post a Comment

4 Comments

  1. Replies
    1. Thank u for ur valuable comment...If have any suggestion please refer to me.

      Delete
    2. Sir intha Mari +1+2kum ko2nga sir

      Delete
    3. Yes. We are working on it. You will get very soon...

      Delete