தென்னிந்திய அரசுகள்
தென்னிந்திய அரசுகள்
- அய்கோல் கல்வெட்டு யாருடையது? இரண்டாம் புலிகேசி
- பல்லவர்கள் பற்றிய குறிப்பு காணப்படும் செப்பேடு எது?காசக்குடி செப்பேடுகள்
- பல்லவ அரசு உருவாக்கப்பட்ட ஆண்டு ?கிபி 550
- வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்? சிம்மவிஷ்ணு
- இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
- கடைசி பல்லவ மன்னர் யார்?அபராஜிதன்
- முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதி யார்? சிறுதொண்ட நாயனார் என்றழைக்கப்பட்ட பரஞ்சோதி
- மகேந்திரவர்ம பல்லவன் யாரால் சைவ சமயத்தை தழுவினார்? அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர்
- மகேந்திர பாணி எனும் கட்டடக் கலையை அறிமுகம் செய்து வைத்தவர் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
- மத்தவிலாச பிரகசனம் என்னும் சமஸ்கிருத நாடக நூலை எழுதியவர் யார்? மகேந்திரவர்ம பல்லவன்
- மத்த விலாச பிரகசனம் என்பதன் பொருள் என்ன? குடிகாரர்களின் மகிழ்ச்சி
- மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம் எது? வாதாபி
- மகேந்திரவர்ம பல்லவனின் தோற்கடித்த சாளுக்கிய அரசன் யார்? இரண்டாம் புலிகேசி
- இரண்டாம் புலிகேசியை கொன்ற பல்லவ மன்னர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
- வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
- சீன அரசுக்கு தூதுக் குழுக்களை அனுப்பிய பல்லவ மன்னர் யார்?ராஜசிம்மன்
- காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்? இரண்டாம் நரசிம்மவர்மன்
- அவனி சிம்மன் என்று அழைக்கப்பட்டவர் யார்? சிம்மவிஷ்ணு
- சங்கீரண ஜதி ,மத்தவிலாசன் ,குணபாலன் , சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்ட பல்லவ மன்னர் யார்?முதலாம் மகேந்திரவர்மன்
- மாமல்லன் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
- வாதாபி கொண்டான் என்று அழைக்கப்பட்டவர் யார்? முதலாம் நரசிம்மவர்மன்
- எந்த ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது? 1984
- பாறை குடைவரை கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது? மகேந்திரவர்மன் பாணி
- ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் எந்த பல்லவ மன்னன் பெயரில் அழைக்கப்படுகிறது? மாமல்லன் பாணி
- கட்டுமான கோவில்கள் எந்த பல்லவ மன்னன் பெயரால் அழைக்கப்படுகிறது? ராஜசிம்மன் பாணி நந்திவர்மன் பாணி
- ராஜசிம்ம ஸ்வரம் என்று அழைக்கப்படும் கோவில் எது? காஞ்சி கைலாசநாதர் கோவில்
- நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர் யார்? வாத்ஸ்யாயர்
- தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வாக கருதப்படுவது எது? தட்சிணசித்திரம்
- தட்சிணசித்திரம் எனும் ஓவிய நூல் யாருடைய ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டது? முதலாம் மகேந்திரவர்மன்
- முதலாம் நரசிம்மவர்மனின் அவையிலிருந்த சமஸ்கிருத அறிஞர் யார்? தண்டி
- தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்? தண்டி
- சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் யார்? பாரவி
- கீர்தார்ஜுனியம் என்னும் வடமொழி காப்பியத்தை இயற்றியவர் யார்? பாரவி
- பல்லவர் காலத்தில் இயற்றப்பட்ட பக்தி இலக்கியங்கள் யாவை? தேவாரம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம்
- இரண்டாம் நந்திவர்மன் ஆள் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப்புலவர் யார்?பெருந்தேவனார்
- மகாபாரதத்தை பாரத வெண்பா என்னும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? பெருந்தேவனார்
- பல்லவர் கால இசை கல்வெட்டுக்கள் எங்கு உள்ளது? குடுமியான்மலை மற்றும் திருமயம்
- முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் யார்? ருத்ராச்சாரியர்
- மேலைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது? கல்யாணி
- கீழைச் சாளுக்கியர்கள் தலைநகரம் எது? வெங்கி
- வாதாபி குகைக் கல்வெட்டு யாருடையது? மங்களேசன்
- அய்கோல் கல்வெட்டு எங்கு உள்ளது ?பாகல்கோட் கர்நாடக
- இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவர் யார் ?ரவி கீர்த்தி
- ஐகோல் கல்வெட்டு யாரால் எழுதப்பட்டது? ரவி கீர்த்தி
- வாதாபி சாளுக்கியர்களின் மிகவும் புகழ் பெற்ற அரசர் யார்? இரண்டாம் புலிகேசி
- பாரசீகம் என்றழைக்கப்பட்ட நாடு எது? ஈரான்
- பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரு யாருடைய அவைக்கு தூதுக் குழுவை அனுப்பினார்? இரண்டாம் புலிகேசி
- முதலாம் கீழை சாளுக்கிய அரசன் யார் ?|விஷ்ணுவர்தன்
- திராவிட மற்றும் நாகார கட்டடப் பணிகளின் கலப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறத? வெசார பாணி
- வெசார பாணி கட்டடக்கலை யாருடைய ஆட்சிக்காலத்தில் சிறப்புற்றது |?சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தில்
- விருபாக்ஷா பட்டடக்கல் கோவில் எங்கு உள்ளது? பிஜபூர்
- வாதாபி விஷ்ணு கோவில் யாரால் கட்டப்பட்டது? சாளுக்கிய மன்னன் மங்க ளேசன்
- ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி எது? வாகடகர்
- அஜந்தா குகை ஓவியங்கள் யாரால் வரையப்பட்டவை? சாளுக்கியர்
- இராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்? தந்தி துர்கா
- எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார?தந்தி துர்கர்
- ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர் யார்?அமோகவர்சர்
- அமோகவர்சரை சமண சமயத்திற்கு மாற்றியவர் யார்? ஜினசேனர்
- தக்கோலம் போரில் சோழர்களை வென்றவர் யார்? மூன்றாம் கிருஷ்ணர்
- ராமேஸ்வரத்தில் கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டியவர் யார்? மூன்றாம் கிருஷ்ணர்
- ராஷ்டிரகூட அரசின் கடைசி அரசர் யார்?மூன்றாம் கோவிந்தன்
- கன்னட மொழியின் முதல் கவிதை நூல் எது? கவிராஜ மார்க்கம்
- கவிராஜ மார்க்கம் எனும் நூலை எழுதியவர் யார்? அமோகவர்சர்
- கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் யார்? ஆதிகவி பம்பா, ஸ்ரீ பொன்னா,ரன்னா
- ஆதி புராணம் விக்ரமார்ஜுன விஜயம் ஆகிய நூல்களை எழுதியவர் யார் ?ஆதிகவி பம்பா
- முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவர் இன் வாழ்க்கையை விவரிக்கும் நூல் எது? ஆதி புராணம்
- எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்? தந்திதுர்கா
- எலிபண்டா தீவு எங்கு உள்ளது ?மும்பை
0 Comments