- 1829 ஆம் ஆண்டு சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட சட்டம் இயற்றியவர் யார்?தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங்
- பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்? ராஜாராம் மோகன்ராய் 1828 கல்கத்தா
- ரவீந்திரநாத் தாகூரின் தந்தை பெயர் என்ன? தேவேந்திரநாத் தாகூர்
- கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இணைந்த ஆண்டு எது? 1857
- எந்த ஆண்டு பிரம்மசமாஜம் இடையே பிளவு ஏற்பட்டது? 1886
- தேவேந்திரநாத் தாகூரின் பிரம்ம சமாஜம் எவ்வாறு அழைக்கப்பட்டது? ஆதி பிரம்ம சமாஜம்
- நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாக கருதப்படுபவர் யார்?ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- விதவைகள் மறுமணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1856
- விதவைகள் மறுமணச் சட்டம் கொண்டு வர முக்கிய காரணமாக இருந்த இந்திய சமூக சீர்திருத்தவாதி யார்? ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- இந்தியாவில் முதல் முறையாக எப்பொழுது திருமண வயது சட்டம் இயற்றப்பட்டது? 1860
- பிரார்த்தனை சமாஜம் எப்பொழுது எங்கு நிறுவப்பட்டது?1867 பம்பாய்
- பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர் யார்? ஆத்மாராம் பாண்டுரங் ஆத்மார்த்தமாக பிரார்த்தனை பண்ணனும்
- பிரார்த்தனை சமாஜத்தின் மிக முக்கிய உறுப்பினர்கள் யார்? ஆர் சி பண்டர்கர் மற்றும் நீதிபதி எம் ஜி ரானடே
- விதவை மறுமண சங்கம் எப்பொழுது நிறுவப்பட்டது? 1861
- புனே சர்வஜன சபா எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?1870
- தக்காண கல்வி கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது ?1884
- விதவை மறுமணச் சங்கம் புனே சர்வஜனிக் சபா தக்காண கல்வி கழகம் ஆகியவற்றை நிறுவியவர் யார்? மகாதேவ் கோவிந்த ரானடே
- குலாம்கிரி என்ற சொல்லின் பொருள் என்ன? அடிமைத்தனம்
- குலாம் கிரி என்ற நூலை எழுதியவர் யார்? ஜோதிபா பூலே
- ஆரிய சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1875
- ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார் ?சுவாமி தயானந்த சரஸ்வதி
- சத்யார்த்தபிரகாஷ் என்னும் நூலை எழுதியவர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி
- வேதங்களுக்கு திரும்புவோம் என்பது யாருடைய புகழ்பெற்ற முழக்கமாகும் ?சுவாமி தயானந்த சரஸ்வதி
- ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிருத்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற சுவாமி தயானந்த சரஸ்வதியால் ஏற்படுத்தப்பட்ட இயக்கம் எது? சுத்தி இயக்கம்
- ஆரிய சமாஜம் பிளவுபட்ட ஆண்டு எது? 1893
- ஆரிய சமாஜம் பிளவுபட காரணம் யாது? தூய்மை கோட்பாடு குறித்த கருத்து வேறுபாட்டால்
- 1900 ஆம் ஆண்டு குருகுல பள்ளிகளை நிறுவிய ஆரிய சமாஜ தலைவர் யார்? சுவாமி ஸ்ரத்தானந்தா
- பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் காலம் எது? 1836 முதல் 1886 வரை
- அனைத்து மதங்களும் உண்மையானவை அவை அனைத்தும் இறைவனைக் காண்பதற்கான வெவ்வேறு வழிகள் என்று கூறியவர் யார்? பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்
- ஜீவன் என்பதே சிவன் அதாவது வாழ்கின்ற அனைத்து உயிர்களுமே இறைவன் என்று கூறியவர் யார்? பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்
- மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவை என்று கூறியவர் யார்? பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்
- பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மேலான கருத்துக்களையும் தத்துவங்களையும் உலகம் முழுவதும் பரப்பியவர் யார்? சுவாமி விவேகானந்தர்
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் நிறுவியவர் யார்? சுவாமி விவேகானந்தர்
- மக்களுக்கு கல்வியறிவு மருத்துவ உதவி இயற்கை சீற்றங்களின் போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஏழை எளிய மக்களின் நலனுக்காக பாடுபடுவது போன்ற எண்ணற்ற உதவிகளை செய்து வரும் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட மகத்தான நிறுவனம் எது? ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்
- சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் யாது? நரேந்திரநாத் தத்தா
- சுவாமி விவேகானந்தரின் காலம் யாது? 1863 ஜனவரி 12 முதல் 1902 ஜூலை 4 இரவு 9.02 வரை வரை
- மனித குலத்திற்கு தொண்டு செய்தல் என்னும் நடைமுறை வேதாந்தத்தை மக்களிடையே பரப்பியவர் யார்? சுவாமி விவேகானந்தர்
- இந்து சமூகத்திற்கு புத்துயிர் அளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்த சிங்கமாக கருதப்படுபவர் யார்? சுவாமி விவேகானந்தர்
- தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்த இந்திய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய மாபெரும் மனிதர் யார்? சுவாமி விவேகானந்தர்
- 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாடு எங்கு நடைபெற்றது? சிகாகோ
- 1893 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்தியாவின் பெருமையை உலகறிய செய்த மாவீரர் யார்? சுவாமி விவேகானந்தர்
- வங்கப் பிரிவினையை தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது? சுவாமி விவேகானந்தரின் அற்புதமான கருத்துக்கள்
- ஏறத்தாழ 125 ஆண்டுகளாக எந்த ஒரு ஊழல் புகார் மற்றும் நிர்வாகக் குறைபாடு இல்லாமல் மக்கள் பணியே இறைவனின் பணி என்று செயல்படும் ஒரே இந்திய நிறுவனம் எது? சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்
- பிரம்மஞான சபையை நிறுவியவர் யார்? எச் பி பிளாவட்ஸ்கி அம்மையார் மற்றும் கர்னல் எச் எஸ் ஆல்காட்
- பிரம்ம ஞான சபை எப்பொழுது எங்கு நிறுவப்பட்டது? 1875 ஆம் ஆண்டு நியூ நியூயார்க்
- இந்தியாவில் பிரம்மஞான சபை எங்கு எப்போது ஏற்படுத்தப்பட்டது? 1886 இல் அடையாறு சென்னை
- இந்தியாவில் பௌத்தமதம் புத்துயிர் பெற முக்கிய பங்காற்றிய நிறுவனம் எது? பிரம்ம ஞான சபை
- நியூ இந்தியா மற்றும் காமன்வீல் ஆகிய செய்தித்தாள்களை நிறுவியவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்
- 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை நிறுவியவர் யார்? ஜோதிபா பூலே புனேவில் நிறுவினார்
- சத்திய சோதக் சமாஜ் உண்மையை நாடுவோர் சங்கம் எனும் அமைப்பை நிறுவியவர் யார்? ஜோதிபா பூலே
- இந்தியாவில் முதன்முதலாக ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதிகளை நிறுவியவர் யார்? ஜோதிபா பூலே
- நாராயணகுரு எங்கு பிறந்தார்?1854 கேரளா
- ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை உருவாக்கியவர் யார்? நாராயண குரு
- அருவிபுரம் கோவிலை கட்டியவர் யார் ?நாராயண குரு
- நாராயண குருவை பின்பற்றிய முக்கிய சீடர்கள் யார்? குமாரன் ஆசான் மற்றும் டாக்டர் பால்பு
- அய்யன்காளி எங்கு பிறந்தார்? 1863 திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூர்
- 1907இல் சாது ஜன பரிபாலன சங்கம் ஏழை மக்கள் பாதுகாப்பு சங்கம் எனும் அமைப்பை நிறுவியவர் யார்?அய்யன்காளி
- புலையர் சமூக மக்களின் கல்விக்காக நிதி திரட்ட ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது? சாது ஜன பரிபாலன சங்கம்
- முஸ்லிம்களுக்காக முதன் முதலாக அறிவியல் கழகத்தை நிறுவியவர் யார்? சர் சையத் அகமத் கான்
- சர் சையது அகமது கான் அறிவியல் நூல்களை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? உருது மொழி
- சர் சையது அகமது கான் எந்த ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதிய ஆங்கில ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்? 1875
- சர் சையது அகமது கான் நடத்திய இயக்கம் எது? அலிகார் இயக்கம்
- முகமது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி எப்பொழுது பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது? 1920
- பழமைவாத முஸ்லிம் உலேமாக்களால் ஏற்படுத்தப்பட்ட மீட்பு இயக்கம் எது? தியோபந்த் இயக்கம்
- 1866 உத்தரப்பிரதேசத்தில் உள்ள சஹரன்பூர் பள்ளியை நிறுவியவர் யார்? முகமது குவாசிம் நானோ தேவி மற்றும் ரக்ஷித் அகமத் கங்கோத்ரி
- தி யுனைட்டட் பேட்டரியாடிக் அசோசியேஷன் எனும் அமைப்பை நிறுவியவர் யார்? சையது அகமது கான்
- ஈரானிலிருந்து பத்தாம் நூற்றாண்டில் குடி பெயர்ந்து வந்த ஜோராஷ்டிரியர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? பார்சி இனத்தவர்
- பார்சி சீர்திருத்த இயக்கம் யாரால் எங்கு எப்போது நிறுவப்பட்டது? 1851 இல் பம்பாயில் பர்துன்ஜி நவரோஜி என்பவரால் நிறுவப்பட்டது
- ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா என்னும் சபையை நிறுவியவர் யார்?பர்துன்ஜி நௌரோஜி
- குழந்தை திருமண பழக்கத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும் என இயக்கம் நடத்திய பம்பாய் பார்சி சமூகத்தை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி யார்? பெர்ரம் மல்பாரி
- பெரோசா மேத்தா, தீன்ஷா வாச்சா போன்றோர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள்? பார்சி சீர்திருத்த இயக்கம்
- பார்சி சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் எது? ராஸ்ட் கோப்தார்( உண்மை விளம்பி)
- சீக்கியரின் சீர்திருத்த இயக்கங்கள் யாவை? நிரங்கரி மற்றும் நாம்தாரி
- நிரங்கரி என்னும் இயக்கத்தை நிறுவியவர் யார்? பாபா தயாள் தாஸ்
- நிரங்கரி என்னும் சொல்லின் பொருள் யாது? உருவமற்றது
- நாம்தாரி இன்னும் இயக்கத்தை உருவாக்கியவர் யார்? பாபா ராம் சிங்
- சீக்கியர்கள் இடையே வாளுக்கு பதிலாக லத்தியை வைக்கும் பழக்கத்தை முன்னெடுத்தவர் யார்? பாபா ராம் சிங்
- சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுக்க அமிர்தசரஸில் நிறுவப்பட்ட அமைப்பு எது? சிங் சபா
- ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு என உருவாக்கப்பட்ட கல்லூரி எது? கால்சா கல்லூரி
- அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாக கருதப்படுவது எது? சிங் சபா
- சுவாமி ராமலிங்க அடிகள் அவர்களின் காலம் யாது? 1823 முதல் 1874 வரை
- சுவாமி ராமலிங்க அடிகள் பிறந்த இடம் எது? சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூரில்
- துயரப்படும் உயிரினங்களை பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் நெஞ்ச காரர்கள் அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும் கூறியவர் யார்? ராமலிங்க சுவாமிகள்
- ராமலிங்க அடிகளார் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு எது? 1856
- சத்திய தருமசாலை எந்த ஆண்டு வடலூரில் நிறுவப்பட்டது? 1867
- வள்ளலாரின் பாடல்கள் பழமைவாத சைவர்களால் எவ்வாறு அழைக்கப்பட்டது? மருட்பா
- வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார்? கன்னியாகுமரிக்கு அருகில் சாமிதோப்பு என்றழைக்கப்படும் சாஸ்தா கோவில் விளை
- வைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர் யாது? முடிசூடும் பெருமாள் பின்னர் முத்துக்குட்டி
- ஆங்கில ஆட்சியை வெள்ளை பிசாசுகளின் ஆட்சி என்றும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியை கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் விமர்சித்தவர் யார்? வைகுண்ட சுவாமிகள்
- பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்கு சமத்துவ சமாஜம் எனும் அமைப்பை நிறுவியவர் யார்? வைகுண்ட சுவாமிகள்
- தமிழ்நாட்டில் அனைத்து சாதி மக்களும் சேர்ந்து உண்ணும் சமபந்தி விருந்து நடத்தியவர் யார்? வைகுண்ட சுவாமிகள்
- யாருடைய சமய வழிபாட்டு முறை அய்யா வழி என்று அழைக்கப்பட்டது? வைகுண்ட சுவாமிகள்
- வைகுண்ட சுவாமிகள் இயற்றிய நூல் எது? அகிலத்திரட்டு
- அயோத்திதாச பண்டிதர் எங்கு பிறந்தார்? சென்னை
- அத்வைத ஆனந்த சபா எனும் அமைப்பை நிறுவியவர் யார்? அயோத்திதாசர்
- திராவிடர் கழகம் எனும் அமைப்பை நிறுவியவர் யார்? ஜான் திரவியம் மற்றும் அயோத்திதாச பண்டிதர்
- திராவிட பாண்டியன் இன்னும் இதழ் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1885 இல் அயோத்திதாச பண்டிதர் ஆல்
- திராவிட மகாஜன சபை என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்? அயோத்திதாச பண்டிதர்
- திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது? நீலகிரி
- ஒரு பைசா தமிழன் என்ற வார இதழைத் தொடங்கியவர் யார்? 1907 அயோத்திதாச பண்டிதர்
- திராவிட மகாஜன சபை என்னும் சபை எப்பொழுது நிறுவப்பட்டது? 1891
- சாக்கிய பௌத்த சங்கம் என்னும் அமைப்பை சென்னையில் நிறுவியவர் யார்? அயோத்திதாச பண்டிதர்
Choose the correct answer:
- எந்த ஆண்டு உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது? 1829
- தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது? ஆரிய சமாஜம் 1875
- யாருடைய பணியும் இயக்கமும் 1856 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது? ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
- ராஸ்ட் கோப்தார் (உண்மை விளம்பி) முழக்கம் பார்சி இயக்கம்
- நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்? பாபா ராம் சிங்
- சுவாமி சிரத்தானந்தா என்பவர் யார்? ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
- விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்? எம் ஜி ரானடே
- சத்யார்த்த பிரகாஷ் என்னும் நூலின் ஆசிரியர் யார்? தயானந்த சரஸ்வதி
Fill in the blanks:
- சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் யார்? வள்ளலார்
- புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் யார்? எம் ஜி ரானடே
- சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர் யார்? ஜோதிபா பூலே
- குலாம் கிரி நூலை எழுதியவர் யார் ஜோதிபாபூலே
- சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல் எந்த நேர்மறை கொள்கைகளை பட்டியலிடுகிறது? ஒரு கடவுள் வழிபாடு உருவ வழிபாட்டை நிராகரித்தல் பிராமணர் மேலாதிக்கம் சடங்குகள்
- ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் யாரால் நிறுவப்பட்டது ?சுவாமி விவேகானந்தர் 1897 மே1 கல்கத்தாவிற்கு அருகில் உள்ள பேலூர் என்னுமிடத்தில்
- அகாலி இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படுவது எது ?சிங்சபா
- கேரளாவில் சாதிய கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வந்த இயக்கம் எது ?அய்யன் காளியின் இயக்கங்கள்
- ஒரு பைசா தமிழன் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்? அயோத்திதாச பண்டிதர்
0 Comments