அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
1. அதிகாரம் சிறு சிறப்புரிமைகள் பெற்ற ஆளும் வர்க்கத்தினரிடம் காணப்படுவது எந்த வகையான ஆட்சி? உயர்குடி ஆட்சி எடுத்துக்காட்டு இங்கிலாந்து ஸ்பெயின்
2. ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? முடியாட்சி எடுத்துக்காட்டு பூட்டான் ஓமன் கத்தார்
3. முழு அதிகாரம் கொண்ட ஒரு நபரால் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தனிநபர் ஆட்சி அல்லது சர்வாதிகாரம்
4. மக்களின் சிறிய குழு ஒன்று ஒரு நாட்டையோ அல்லது அமைப்பையோ கட்டுப்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? சிறு குழு ஆட்சி
5. சிறு குழு ஆட்சி நடைபெறும் நாடுகளுக்கு எடுத்துக்காட்டு தருக? சீனா வடகொரியா வெனிசுலா
6. மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ அல்லது கடவுளின் பெயரால் மதகுருமார்கள் அமைக்கப்படும் அரசாங்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மதகுருமார்களின் ஆட்சி எடுத்துக்காட்டு வாட்டிகன்
7. மக்களிடமும் அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமோ உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? குடியரசு
8. குடியரசு என்னும் சொல் முதன் முதலில் எங்கு வடிவமைக்கப்பட்டது? ரோம் கி-மு 500
9. இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1949 நவம்பர் 26
10. ஒரு உண்மையான மக்கள் ஆட்சியை 20 பேர் குழுவாக அமர்ந்து கொண்டு செயல்படுத்த முடியாது இது கீழ் நிலையிலுள்ள ஒவ்வொரு கிராம மக்களாலும் செயல்படுத்தபடுவதாகும் என்று கூறியவர் யார்? மகாத்மா காந்தி
11. 2500 ஆண்டுகளுக்கு முன்பு மக்களாட்சி முறை தோன்றிய நாடு எது? ஏதென்ஸ்
12. வேதகாலத்தில் உள்ளாட்சி அமைப்பின் அடிப்படை அலகாக இருந்தது எது? கிராம குழுக்கள்
13. பண்டைய காலத்தில் கிராம குழுக்கள் செயல்பட்டன என்பதை கூறும் நூல் எது? அர்த்தசாஸ்திரம் சாணக்கியர்
14. எந்த அரசர் காலத்தில் தமிழ்நாட்டில் குடவோலை முறை நடைமுறையில் இருந்தது? முதலாம் குலோத்துங்க சோழன்
16. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
17. இந்திய மக்களாட்சியின் அடிப்படை ஐந்து கொள்கைகள் எது? இறையாண்மை சமதர்மம் மதச்சார்பின்மை மக்களாட்சி மற்றும் குடியரசு
18. தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியவர் யார்? எட்வின் லூட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர்(1921-1927)
19. இந்திய குடியரசு தலைவர் நாடாளுமன்றத்துக்கு எத்தனை பேரை நியமனம் செய்கிறார்? 14 பேர் மக்களவைக்கு 2மாநிலங்கள் அவைக்கு 12
20. இந்திய குடியரசு தலைவர் நாடாளுமன்றத்திற்கு எத்தனை ஆங்கிலோ இந்தியர்களை நியமனம் செய்கிறார்? 2
21. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை
22. 1951ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தம் எத்தனை இடங்களில் காங்கிரஸ் வென்றது? 489 இடங்களில் 364 இடங்கள்
23. சுதந்திர இந்தியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் யார்? ஜவஹர்லால் நேரு
24. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது ? 1920
25. ஆங்கிலேய ஆட்சியின்போது மத்திய சட்டசபை எவ்வாறு அழைக்கப்பட்டது? இம்பீரியல் கவுன்ஸில்
Book Back questions:
1. ஒரு நபரோ அரசரோ அல்லது அரசு ஆட்சி செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? முடியாட்சி
2. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? தனிநபர் ஆட்சி
3. முன்னாள் சோவியத் யூனியன் எந்த வகையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு ஆகும்?சிறு குழு ஆட்சி
4. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும் வாடிகன் மற்ற அனைத்து நாடுகளும் மக்களாட்சி நாடுகள்
5. ஆபிரகாம் லிங்கன் எந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்? அமெரிக்க ஐக்கிய நாடுகள்
6. குடவோலை முறையை பின்பற்றியவர்கள் யார்?சோழர்கள் முதலாம் குலோத்துங்க சோழன் உத்திரமேரூர் கல்வெட்டு
7. பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்ட பகுதி எது? பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்
8. எந்த மொழியிலிருந்து டெமாக்ரசி என்ற வார்த்தை பெறப்பட்டது? கிரேக்கம் இதன் பொருள் மக்களின் அதிகாரம் என்பதாகும்
9. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள் யார்? நாடாளுமன்றம்
10. கீழ்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினை கொண்டுள்ளது?அமெரிக்க ஐக்கிய நாடுகள்
11. உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது? இந்தியா
12. கூற்று நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது காரணம் மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள் கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது.
13. கூற்று இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது காரணம் இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. மேலும் கூற்று காரணத்தை விளக்குகிறது.
14. வாக்குரிமையின் பொருள் என்பது என்ன? வாக்களிப்பதற்கான உரிமை
15. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது என்பது எந்த வகை சமத்துவம்ஆகும்? சமூக சமத்துவம்
16. பிரதமரை நியமிப்பவர் யார்? குடியரசு தலைவர்
17. குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்? 12 உறுப்பினர்கள்
18. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு எது ? 1951 1952
Fill in the Blanks:
1. இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு எது? 1949 நவம்பர் 26
2. இரண்டு வகையான மக்களாட்சி நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சி ஆகும்
3. நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சுவிட்சர்லாந்து
4. இந்தியா மறைமுக மக்களாட்சி முறையை கொண்டு உள்ள நாடாகும்
5. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்
6. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1920
7. இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் எட்வின் லூட்யன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆவார்.
Match The Following:
1. தனிநபர் ஆட்சி -வடகொரியா
2. வாக்குரிமை -18
3. சாணக்கியர் -அர்த்த சாஸ்திரம்
4. மதகுருமார்கள் ஆட்சி -வாடிகன்
To get pdf file E-mail dontnpsc@gmail.com
0 Comments