மனித உரிமைகள்
1. மகாத்மா காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் தொடர்வண்டியில் இருந்து கீழே தள்ளப்பட்ட இடம் எது? பீட்டர்ஸ்பர்க் 1893
2. மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? டிசம்பர் 10
3. ஐநா சபை தினம் கொண்டாடப்பட்ட நாள் எது? அக்டோபர் 24
4. ஐநா சபை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1945 அக்டோபர் 24
5. தென்னாபிரிக்காவில் அபார்தீட் எனப்படும் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடியவர் யார்? நெல்சன் மண்டேலா
6. எந்த ஆண்டு தென்ஆப்பிரிக்க தலைவர் கிளார்க் அவர்களால் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்? 1990
7. நெல்சன் மண்டேலாவின் கட்சி எது?ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்
8. நெல்சன் மண்டேலா எந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் தலைவராக வெற்றி பெற்றார்? 1994
9. உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 1948 டிசம்பர் 10
10. உலகளாவிய மனித உரிமை பேரவையில் மொத்தம் எத்தனை உறுப்புகள் உள்ளன? 30
11. அரசாங்கம் அமைக் கவும் நிர்வாகம் செய்யவும் பயன்படுத்தப்படும் உரிமை எவ்வாறு அழைக்கப்படுகிறது? அரசியல் உரிமை
12. ஒவ்வொரு மனிதனுக்கும் என தேசிய நிற பால் வயது சமயம் போன்ற பாகுபாடுகள் இன்றி அரசியல் சட்டத்தால் தரப்படும் உரிமை எவ்வாறு அழைக்கப்படுகிறது? குடிமை உரிமை
13. இந்திய அரசியலமைப்பு கூறும் அடிப்படை உரிமைகள் எத்தனை? 6
14. சமத்துவ உரிமை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 14 முதல் 18 வரை
15. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 14 இங்கிலாந்து
16. நமது அரசியலமைப்பு எத்தனை வகையான சுதந்திரங்களை நமக்கு அளிக்கிறது? ஆறு வகையான சுதந்திரங்கள்
17. சுதந்திர உரிமை பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவு 19 முதல் 22 வரை
18. பேச்சுரிமை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவு 19 (1) (a)
19. சொத்துரிமை 19 (1) (f) எந்த ஆண்டு அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது? 1978 44 வது சட்ட திருத்தம்
20. சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 23 முதல் 24 வரை
21. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சுரங்கங்கள் அல்லது மற்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் எனக் கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவு 24
22. ஒரு செயலை செய்யவும் அல்லது செயலை தடுக்கவோ நீதிமன்றத்தால் அல்லது வேறு சட்ட அமைப்பினால் வழங்கப்படும் எழுத்துப்பூர்வமான உத்தரவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? நீதிப் பேராணை
23. இந்திய அரசியலமைப்பில் எப்பொழுது அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன? 42-வது சட்டத்திருத்தம் 1976
24. இந்திய அரசியலமைப்பில் மொத்தம் எத்தனை அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன? 11
25. 11வது அடிப்படை கடமை பரிந்துரைத்த குழு எது? L.M. சிங்வி குழு
26. மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்கள் பராமரிப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 2007
27. தேசிய மனித உரிமைகள் ஆணையம் எப்பொழுது அமைக்கப்பட்டது? 1993 அக்டோபர் 12
28. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் சட்டம் எது? பிரிவு 21 மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993
29. மாநில மனித உரிமை ஆணையத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் ?மூன்று பேர்(1+2)
30. ஐநா சபை எந்த ஆண்டு குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது? 1989 நவம்பர் 20
31. 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவு 21A
32. இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? 2009
33. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்க ஏற்படுத்தப்பட்ட சட்டம் எது? போக்சோ சட்டம் 2012
34. POCSO - Protection of Children from sexual offence
35. 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது? 2018 ஏப்ரல்
36. குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் 24 மணி நேர கட்டணமில்லா அவசர தொலைத்தொடர்பு சேவை எண் எது? 1098
37. பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற குழந்தை உரிமைகள் அமைப்பின் நிறுவனர் யார்? கைலாஷ் சத்யார்த்தி
38. 14 வயது நிறைவடையும் வரை இலவச மற்றும் கட்டாய கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு எது|? சட்டப்பிரிவு 45
39. தமிழ்நாடு இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம் எப்பொழுது நிறைவேற்றப்பட்டது? 1989
40. மூதாதையரின் சொத்துக்களில் பெண்களுக்கும் சம உரிமை வழங்கிய சட்டம் எது? தமிழ்நாடு இந்து வாரிசுரிமை திருத்த சட்டம் 1989
41. மூதாதையரின் பிரிக்கப்படாத சொத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமை அளித்த மத்திய அரசு திருத்த சட்டம் எது? இந்து வாரிசுரிமை சட்டம் 2005
42. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது? 69% பிற்படுத்தப்பட்டோர் 26.5 சதவீதம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் 3.5% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவீதம் ஆதிதிராவிடர் 18% ST-1%
43. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எத்தனை சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது? 30%
44. தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது? 4%
45. தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு எத்தனை சதவீத முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது? 20%
46. இந்தியாவில் தகவல் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 2005 அக்டோபர் 12
47. தகவல் உரிமை சட்டத்தின் படி கேட்கப்படும் தகவல்கள் எத்தனை நாட்களுக்குள் வழங்கப்படல் வேண்டும்? 30 நாட்களுக்குள்
48. கேரள அரசு வணிகவியல் நிறுவன சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது? 2018 ஜூலை
49. சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்யும் சட்டப்பிரிவு எது?சட்டப்பிரிவு 39B
50. ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும் போது ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது என்று கூறியவர் யார்? ஜான் எஃப் கென்னடி
Choose the correct answer:
- இன ஒதுக்கல் என்னும் கொள்கை மூலம் பாதிக்கப்பட்ட நாடு எது? தென் ஆப்பிரிக்கா
- ஒரு அரசாங்கத்தை உருவாக்க மற்றும் நிர்வாகத்தில் பங்கு பெறுவது எந்தவகை உரிமையாகும்? அரசியல் உரிமை
- ஒரு 10 வயது பையன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் எந்த உரிமையை பயன்படுத்தி அவனை மீட் பாய்? குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவல்களைப் பெறுவதற்கான கால வரம்பு யாது? 30 நாட்கள்
- பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை. i)மாநில மனித உரிமை ஆணையம் 1997 இல் நிறுவப்பட்டது.ii)மாநில மனித உரிமை ஆணையம் ஒரு உரிமையியல் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களை பெற்றுள்ளது. iII) மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரம் மாநில எல்லைக்கு உட்பட்டு செயல்படும் iv)மாநில மனித உரிமைகள் ஆணையம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்கிறது.
- கூற்று:உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை காரணம்: நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும். கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
- ஐநா சபையின் படி எத்தனை வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்? 18 வயது
- 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் யார்? இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா
Fill in the blanks:
- உலகளாவிய மனித உரிமை பிரகடனம் எத்தனை பிரிவுகளைக் கொண்டுள்ளது? 30
- அடிப்படை கடமைகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எத்தனையாவது சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது? 42-வது சட்டத்திருத்தம் 1976
- தேசிய மனித உரிமை ஆணையம் எப்பொழுது அமைக்கப்பட்டது? 1993 அக்டோபர் 12
- பெண்களுக்கான மூதாதையர் சொத்து உரிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் எது?தமிழ்நாடு
Match the following:
- வாக்களிக்கும் உரிமை -அரசியல் உரிமை
- சங்கம் அமைக்கும் உரிமை -சுதந்திர உரிமை
- பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை -பண்பாட்டு உரிமை
- இந்து வாரிசுரிமைச் சட்டம்- 2005
- குழந்தை தொழிலாளர்- சுரண்டலுக்கு எதிரான உரிமை
0 Comments