இந்திய அரசமைப்பு சட்டம்
1. முழு சுதந்திர நாள் அல்லது பூர்ண சுயராஜ்யம் கொண்டாடப்பட்ட நாள் எது?1930 ஜனவரி 26
2. 1929 ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?லாகூர்
3. பூர்ண சுயராஜ்யம் என்ற முழக்கம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது? லாகூர் காங்கிரஸ் மாநாடு 1929
4. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்? 389
5. இந்திய அரசியல் நிர்ணய சபை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?1946
6. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்
7. இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை பெண் உறுப்பினர்கள் இருந்தனர்? 15 பேர்
8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவு குழுவில் எத்தனை பேர் ?இருந்தனர் எட்டு பேர்
9. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் அம்பேத்கர்
10. இந்திய அரசியல் சபையின் வரைவு குழுவின் ஆலோசகராக இருந்தவர் யார்?பிஎன் ராவ்
11. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவு குழுவின் கூட்டம் முதன்முதலில் எப்போது நடைபெற்றது? 1946 டிசம்பர் 9ல்
12. இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? டாக்டர் அம்பேத்கர்
13. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கு எத்தனை நாடுகளில் இருந்த அரசமைப்புச் சட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன? 60 நாடுகள்
14. அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்பு எத்தனை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன? சுமார் 2000
15. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்க எவ்வளவு காலம் ஆனது? 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாட்கள்
16. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது தயாரானது? 1949 நவம்பர் 26
17. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு எவ்வளவு ரூபாய் செலவானது? சுமார் 64 லட்சம் ரூபாய்
18. அடிப்படை உரிமைகள் மொத்தம் எத்தனை? ஆறு அடிப்படை உரிமைகள்
19. நமது அரசியல் சட்டம் உருவானபோது மொத்தம் எத்தனை உறுப்புகள் இருந்தன? 395 உறுப்புகள் 22 பகுதிகள் 8 அட்டவணைகள்
20. நமது அரசியலமைப்புச் சட்டத்தில் தற்பொழுது எத்தனை உறுப்புகள் உள்ளன? 448 உறுப்புகள் 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள்
21. இந்திய அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் எது ?நவம்பர் 26
0 Comments