தேசிய சின்னங்கள்
1. தமிழ்நாட்டில் மயில்கள் சரணாலயம் எங்கு உள்ளது?விராலிமலை புதுக்கோட்டை மாவட்டம்
2. இந்தியாவின் நீளமான நதி எது? கங்கை ஆறு 2525 கிலோமீட்டர்( எளிதாக 25 25 என நினைவில் கொள்ளலாம்)
3. பிரம்மபுத்திரா ஆற்றின் நீளம் எவ்வளவு?3848 கிலோமீட்டர் (எளிதாக 38 48 என நினைவில் கொள்ளலாம்)
4. உலகிலேயே கூடு கட்டி முட்டையிடும் பாம்பு எது? ராஜநாகம்
5. ஆலமரம் எப்பொழுது இந்தியாவின் தேசியச் சின்னமானது? 1950
6. தாமரை எப்பொழுது இந்தியாவின் தேசியச் சின்னமானது? 1950
7. மயில் எப்பொழுது இந்தியாவின் தேசியச் சின்னமானது? 1963
8. புலி எப்பொழுது இந்தியாவின் தேசியச் சின்னமானது? 1973
9. கங்கை ஆறு எப்பொழுது இந்தியாவின் தேசியச் சின்னமானது? 2008
10. யானை எப்பொழுது இந்தியாவின் தேசியச் சின்னமானது? 2010
11. ஆற்று ஓங்கில் அல்லது டால்பின் எப்பொழுது இந்தியாவின் தேசியச் சின்னமானது? 2010
12. லாக்டோ பேசில்லஸ் எப்பொழுது இந்தியாவின் தேசிய சின்னம் ஆனது? 2012
13. தோழமை பாக்டீரியா என்று அழைக்கப்படுவது எது? லாக்டோ பேசில்லஸ்
14. மாம்பழம் எப்பொழுது இந்தியாவின் தேசியச் சின்னமானது? 1950
15. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது? வரையாடு
16. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?மரகதப்புறா
17. தமிழ்நாட்டின் மாநில மலர் எது?செங்காந்தள் மலர்
18. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?பனைமரம்
19. இந்திய தேசிய கொடியின் நீள அகலம் எவ்வளவு? 3:2
20. இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்? ஆந்திராவை சேர்ந்த பிங்காலி வெங்கையா
21. இந்தியாவின் முதல் தேசியக்கொடி எங்கு தயாரிக்கப்பட்டது? குடியாத்தம் வேலூர் மாவட்டம்
22. நான்முக சிங்கம் எப்பொழுது இந்தியாவின் தேசிய சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1950 ஜனவரி 26
23. சத்தியமேவ ஜெயதே என்ற சொல்லின் பொருள் யாது? வாய்மையே வெல்லும்
24. தேசிய கீதம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1950 ஜனவரி 24
25. இந்திய தேசிய கீதம் முதன்முதலாக எங்கு எப்பொழுது பாடப்பட்டது 1911 கல்கத்தா காங்கிரஸ் மாநாடு
26. தேசிய கீதம் எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்? 52 வினாடிகள்
27. வந்தே மாதரம் என்ற பாடலை எழுதியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி
28. வந்தே மாதரம் என்னும் பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது? ஆனந்த மடம்
29. இந்தியா எனது தாய்நாடு எனத்தொடங்கும் தேசிய உறுதிமொழியை எழுதியவர் யார்? பிதிமாறி வெங்கட சுப்பராவ் தெலுங்கில் எழுதினார்.
30. இந்தியாவின் அதிகாரப்பூர்வ பணத்தின் பெயர் என்ன? ரூபாய்
31. பதினாறாம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்திற்கு என்ன பெயர்? ருபியா
32. இந்திய ரூபாய்க்கான சின்னத்தை வடிவமைத்தவர் யார்? டி உதயகுமார் 2010
33. சக ஆண்டு எப்பொழுது தொடங்கியது? கிபி 78 கனிஷ்கர் காலத்தில்
34. சக ஆண்டு எப்பொழுது தொடங்குகிறது? மார்ச் 22
35. தேசிய நாட்காட்டி எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1957 மார்ச் 22
36. யாருடைய தலைமையில் நாட்காட்டி சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது? மேக்நாத் சாகா
37. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
38. ஆடுவோமே பள்ளு பாடுவோமே பாடலை அகில இந்திய வானொலியில் பாடிய பாடகி யார்? டி கே பட்டம்மாள்
39. பாசறைக்கு திரும்புதல் இன்னும் விழா எப்பொழுது நடைபெறும்? ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29
40. சர்வதேச அகிம்சை தினம் அக்டோபர் 2 ஐநா சபையால் எப்பொழுதுஎப்போது முதல் கொண்டாடப்படுகிறது? 2007
41. இந்திய தேசிய கொடியின் நடுவில் உள்ள சக்கரத்தின் நிறம் எது? நீலமா நீலமா கருநீலமா கருநீலம்
42. வந்தே மாதரம் பாடல் முதன் முதலாக எப்பொழுது பாடப்பட்டது? 1896 ரவீந்திரநாத் தாகூர் அவர்களால்
43. குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றுபவர் யார்? குடியரசுத் தலைவர்
44. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுபவர் யார்? பிரதமர்
45. இந்திய அரசின் தேசிய சின்னத்தில் நான்முக சிங்கத்தின் கீழ் காணப்படும் 4 விலங்குகள் யாவை? யானை குதிரை காளை சிங்கம்
46. அசோகர் கால சாரநாத் தூணின் உச்சியில் இருந்த நான்முக சிங்கம் தற்போது எங்கு உள்ளது? சாரநாத் அருங்காட்சியகம்
0 Comments