education

8th காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை

காலங்கள் தோறும் இந்திய பெண்களின் நிலை

1. எந்த ஆண்டு சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது? 1829
2. எந்த ஆண்டு விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது? 1856
3. விதவை மறுமணச் சட்டம் வருவதற்கு வழிவகுத்த சமூகப் போராளி யார்? ஈஸ்வர சந்திரன் வித்யாசாகர்
4. பண்டைய இந்தியாவில் சிந்து வெளி நாகரிகத்தில் எந்த கடவுளை வணங்கினார்?தாய் கடவுள்
5. சதி என்னும் பழக்கம் எந்த காலத்தில் பிரபலமானது?பின் வேத காலம்
6. சதி முறையினை ஒழிக்க முயன்ற ஆட்சியாளர் யார்? அக்பர்
7. இந்தியாவில் எந்த அரசு ஜவஹர் என்னும் பழக்கத்தை கடைபிடித்தனர்? ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திரர்கள்
8. தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர போர் வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்களின் கூட்டு தன்னார்வத் தற்கொலை எவ்வாறு அழைக்கப்பட்டது? ஜவ்ஹர்
9. கல்கத்தாவில் முதன்முதலில் எந்த ஆண்டு பெண் சிறார் சங்கம் அமைக்கப்பட்டது?  1819
10. 1849 ஆம் ஆண்டு கல்கத்தாவில்  பெதுன் பள்ளியை நிறுவியவர் யார்? பெதுன்

11. பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்த சார்லஸ் வுட் கல்வி அறிக்கை எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1854
12. சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தொடங்க பரிந்துரைத்த குழு எது? ஹண்டர் குழு 1882
13. எந்த ஆண்டு முதல் இந்திய பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க ஆரம்பித்தனர்? 1880
14. இந்திய மகளிர் பல்கலைக்கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது? பேராசிரியர் கார்வேவால் 1916
15. 1916இல் டெல்லியில் மருத்துவ கல்லூரியை தொடங்கிய பெண்மணி யார்? லேடி ஹார்டிங்
16. பெண்சிசுக் கொலையை தடைசெய்த ஆங்கிலேய சட்டங்கள் யாவை? வங்காள ஒழுங்காற்று சட்டம், 1802 ஒழுங்குமுறை சட்டம்,   1870 பெண் சிசுக்கொலை தடை சட்டம்
17. குழந்தைத் திருமணத்தை தடுப்பதுடன் திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகள் இன் ஒப்புதலை பெற்றோர்கள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட முகலாய பேரரசர்? அக்பர்
18. ராய் சாகிப் ஹர் பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1930
19. கிபி ஆயிரத்து 420 விஜய் நகருக்கு வருகை புரிந்த இத்தாலிய பயணி யார்?நிக்கோலோ கோண்டி
20. சதி ஒழிப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 1829  டிசம்பர் 4 வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சி காலத்தில்
21. தேவதாசி என்ற வார்த்தையின் பொருள் யாது?கடவுளின் சேவகர்
22. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்? டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்
23. மதராசு தேவதாசி சட்டம் எப்பொழுது நிறைவேற்றப்பட்டது? அக்டோபர் 9 1947
24. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி என கருதப்படுபவர் யார்?ராஜாராம் மோகன்ராய்
25. இந்து விதவை மறுமணச் சட்டம் எப்பொழுதும் நிறைவேற்றப்பட்டது?1856
26. தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடிய ஆரம்பகால போராளி யார்?கந்துகூரி வீரேசலிங்கம்
27. விவேக வர்த்தினி என்னும் பத்திரிகையை வெளியிட்டவர் யார்? கந்துகூரி வீரேசலிங்கம்
28. 1887 இல் இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கியவர் யார்? எம். ஜி. ரானடே 
29. 1905ஆம் ஆண்டு இந்திய ஊழியர் சங்கத்தை தொடங்கியவர் யார்? கோபால கிருஷ்ண கோகலே
30. பிரம்ம சமாஜம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1828
31. பிரார்த்தனை சமாஜம் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது? 1867
32. ஆரிய சமாஜம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1875
33. 1889 ஆம் ஆண்டு இந்து விதவைகள் சாரதா சதன் எனும் அமைப்பினை பம்பாயில் திறந்தவர் யார்? பண்டித ரமாபாய்
34. இந்தியாவில் முதன் முதலில் விதவைகளுக்கான கல்வி புகட்டியவர் யார்? பண்டித ரமாபாய்
35. பிரம்மஞான சபை இந்தியாவில் எங்கே தொடங்கப்பட்டது? சென்னை
36. தமிழக அரசு யாருடைய நினைவாக திருமண உதவி திட்டத்தை தொடங்கியுள்ளது? மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்
37. பெண் சிசுக்கொலை சட்டவிரோதமானது என அறிவித்த ஆங்கிலேய சட்டம் எது? வங்காள ஒழுங்குமுறை சட்டம் 1804
38. எந்த சட்டத்தின் மூலம் சிறுவர் சிறுமிகளுக்கான திருமண வயது உயர்த்தப்பட்டது? சாரதா சட்டம் 1930
39. தேவதாசி ஒழிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 1947
40. சம வேலைக்கு சம ஊதியம் என கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவு  39B( 9th polity page no 285)
41. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தேசிய கொள்கை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? தேசிய கல்வி கொள்கை 1986
42. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முக்கிய இடம் வகித்த திட்டம் எது?மகிலா சமக்யா
43. பெண்களுக்கான தேசிய ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? ஜனவரி 1992


  


Post a Comment

4 Comments

  1. Replies
    1. தங்களின் மேலான கருத்துக்கு நன்றிகள் பல. தவறுக்கு மன்னிக்கவும்.தவறு சரி செய்யப்பட்டு விட்டது மிக்க நன்றி.

      Delete
  2. 1,2,9,11,13,18,25,30,31,39 indha questions kku answer podala pls check

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. மேலும் இது போன்ற பல கருத்துக்களை உங்களிடம் இருந்து வரவேற்கிறோம்.போட்டித் தேர்வில் வெற்றி பெற DON TNPNCநிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

      Delete