education

8th மக்களின் புரட்சி




1.     தமிழ்நாட்டில் முதன்முதலாக ஆங்கிலேயரை எதிர்த்து அவர் யார்? புலித்தேவர்
2.     மதுரையின் முதல் நாயக்க மன்னர் யார்? விஸ்வநாத நாயக்கர் 1529
3.     தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?விஸ்வநாத நாயக்கர்
4.     தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது? 72
5.     கிழக்கு பாளையங்கள் எந்த நாயக்க மன்னர் கட்டுப்பாட்டில் இருந்தது? கட்டபொம்மன்
6.     மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் யாருடைய கட்டுப்பாட்டின்கீழ் ஆட்சி செய்தனர்? புலித்தேவர்
7.     இந்தியாவில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டில் முன்னோடியாக இருந்தவர் யார்? புலித்தேவர்
8.     புலித்தேவர் எந்தப் பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்? நெற்கட்டும் செவல் திருநெல்வேலி
9.     இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவரை தோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார்? புலித்தேவர்
10. வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த பாளையத்தை ஆண்டு வந்தார்? பாஞ்சாலங்குறிச்சி
11. வீரபாண்டிய கட்டபொம்மனை வரி கட்டச் சொன்ன கலெக்டர் யார்? ராமநாதபுரம் கலெக்டர் காலின் ஜாக்சன்
12. வீரபாண்டிய கட்டபொம்மனின் அமைச்சர் யார்?சிவசுப்பிரமணியம்
13. ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களை ஒன்றிணைத்து தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கியவர் யார்? மருதுபாண்டியர்கள்
14. திருச்சிராப்பள்ளி அறிக்கை என்ற பிரகடனத்தை வெளியிட்ட அவர்கள் யார்? மருது சகோதரர்கள்
15. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் எது? கள்ளர் பட்டி
16. வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர யார்?புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான்
17.  வீரபாண்டிய கட்டபொம்மனை எதிர்த்துப் போரிட்ட ஆங்கிலேயர் யார்? பானர்மேன்
18. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு? 1799 கயத்தாறு எனும் இடத்தில்
19. வேலு நாச்சியார் என்பவர் யார்? சிவகங்கையின் ராணி
20. வேலு நாச்சியாரின் படைத் தளபதி யார்? குயிலி
21. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெண்ணரசி யார்? வேலு நாச்சியார்
22. தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர் யார்? வேலு நாச்சியார்
23. தமிழர்களால் வீர மங்கை என்று அழைக்கப்பட்டவர் யார்? வேலு நாச்சியார்
24. சிவகங்கை சிங்கம் என்று அழைக்கப்பட்டவர் யார்? சின்னமருது
25. மருது சகோதரர்களின் தலைநகரம் எது? சிறுவயல்
26. திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்றழைக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனம் யாரால் வெளியிடப்பட்டது? மருது சகோதரர்கள்
27. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? திருப்பத்தூர் கோட்டை ராமநாதபுரம்
28. வேல்ஸ் இளவரசர் தீவு என்று அழைக்கப்பட்ட தீவு எது? மலாயாவின் பினாங்கு தீவு
29. தீரன் சின்னமலை எங்கு பிறந்தார்? சென்னிமலைக்கு அருகில் உள்ள மேலப்பாளையம்
30. கொங்குநாடு என்பது எதனைக் குறிக்கும்? சேலம் கோயம்புத்தூர் கரூர் மற்றும் திண்டுக்கல்
31. தமிழ்நாட்டில் கொரில்லா போர் முறையில் ஆங்கிலப் படைகளை தோற்கடித்தார் மன்னர் யார்? தீரன் சின்னமலை
32. தீரன் சின்னமலையை எங்கு தூக்கிலிடப்பட்டார்? 1805 சங்ககிரி கோட்டை
33. 1803 இல் சென்னை மாகாண கவர்னராக இருந்தவர் யார்? வில்லியம் பெண்டிங்
34. 1806 ஆம் ஆண்டு வேலூர் கலகத்திற்கு உடனடி காரணமாக இருந்தது எது? அக்னியு தலைப்பாகை
35. வேலூர் கலகத்தை அடக்கியவர் யார்? கர்னல் கில்லஸ்பி
36. 1806 இல் நடந்த வேலூர் கலகத்தை 1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி என்று வர்ணித்தவர் யார்? வீடி சவார்க்கர்
37. 1857ம் ஆண்டு நடைபெற்ற பெரும் புரட்சி உடனடி காரணம் யாது? ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு ரக துப்பாக்கி
38. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி முதன் முதலாக தோன்றிய இடம்? பராக்பூர்
39. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி வெளிப்படையாக நடைபெற்ற முதல் இடம் எது? மீரட்
40. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் மையமாக விளங்கிய இடம் எது? டெல்லி
41. மத்திய இந்தியாவில் புரட்சியை வழி நடத்தியவர் யார்? ராணி லட்சுமி பாய்
42. மத்திய இந்தியாவில் ஜான்சிராணி தோற்கடித்தவர் யார்? ஹக்ரோஸ்
43. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்? கானிங் பிரபு
44. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி டெல்லியை மீட்ட ஆங்கிலேயர் யார்? நிக்கல்சன்
45. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் போது கான்பூரை கைப்பற்றிய ஆங்கிலேயர் யார்? சர் காலின் காம்பெல்
46. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சி  கான்பூரில் வழி    நடத்தியவர் யார்?  நானாஸாகிப்
47. 1857ஆம் ஆண்டு அயோத்தியில் பெரும் புரட்சியை வழி நடத்தியவர் யார்? பேகம் ஹஸ்ரத் மஹால்
48. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?1858
49. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்குப் பிறகு கவர்னர் ஜெனரல் எவ்வாறு அழைக்கப்பட்டார்? வைசிராய்
50. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர் என விவரித்தவர் யார்? வீ.டி. சவார்க்கர்
51. 1857ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் தலைவர்களில் மிகச் சிறந்தவர் யார்? ராணி லட்சுமி பாய்

 
 

Post a Comment

0 Comments