1. வேதம் என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள் யாது? அறிவு
2. வித் என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள் யாது? அறிதல்
3. தட்சசீலம் தற்பொழுது எங்கு அமைந்துள்ளது? வட மேற்கு பாகிஸ்தான்
4. தட்சசீலம் எப்பொழுது உலக பாரம்பரிய தளமாக என அறிவிக்கப்பட்டது? 1980
5. தட்சசீல பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்தவர் யார்? அலெக்சாண்டர் கன்னிங்காம்
6. நாளந்தா பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?ராஜகிரகம் பீகார்
7. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த காலம் வரை செயல்பட்டது? கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரை
8. முஸ்லிம்கள் ஆட்சியில் தொடக்க பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன ?மக்தப்
9. முஸ்லிம்கள் ஆட்சியில் இடைநிலைப் பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? மதரசா
10. டெல்லியில் மதரஸாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் யார்? இல்துமிஸ்
11. அறிவியல் பாடங்களில் கற்றலை ஊக்குவித்த ஜெய்ப்பூரை சேர்ந்த மன்னர் யார்? ராஜா ஜெய்சிங்
12. கியாசுதீன் மதரசா எங்கு அமைந்துள்ளது? டெல்லி
13. மவுலானா சத்ருதின் மதரசா எங்கு அமைந்துள்ளது? ஷாஜகானாபாத்
14. ஸ்ரீரங்கத்தில் அகோபில மடம் நிறுவியவர் யார்? ஸ்ரீ ராமானுஜர்
15. இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கிய முதல் ஐரோப்பியர் யார்? போர்ச்சுகீசியர்கள்
16. இயேசு சங்கத்தின் உறுப்பினரான பிரான்சிஸ் சேவியர் எங்கு பல்கலைகழகம் தொடங்கினார்? கொச்சி
17. கிருத்துவ அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப் பரப்பு அமைப்பு எது? ஜான் கிர்னாண்டரின் இவாஞ்சலிஸ்டிக்
18. 1812ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் இலவசப் பள்ளிகளை நிறுவியவர் யார்? டாக்டர் சி எஸ் ஜான்
19. திருவிதாங்கூரில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கல்லூரியை தொடங்கியவர் யார்?சீகன்பால்கு மற்றும் ப்ளூட்சோ
20. கல்கத்தாவில் பிஷப் கல்லூரியை தொடங்கியவர் யார்? பிஷப் மிடில்டன்
21. வட்டார மொழி கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தவர் யார்? மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டன்
22. மும்பையில் எல்பின்ஸ்டன் கல்லூரி எப்பொழுது தொடங்கப்பட்டது? 1827
23. இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்த ஆங்கிலேய சட்டம் எது? பட்டய சட்டம் 1813
24. இந்தியாவில் ஆங்கில வழிக்கல்வி எப்பொழுது யாரால் கொண்டுவரப்பட்டது? 1835 இல் மெக்காலே என்பவனால்
25. சர் சார்லஸ் உட் கல்வி அறிக்கை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?1854
26. தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த ஹண்டர் கல்வி குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?1882
27. இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம் என்று அழைக்கப்பட்டது எது? சார்லஸ் உட்ஸ் கல்வி அறிக்கை
28. உலகளாவிய பொருளாதார பெருமந்தம் ஏற்ப்பட்ட ஆண்டு எது? 1929
29. கல்வி மேம்பாட்டிற்கான சார்ஜாண்ட் கல்வி அறிக்கை எப்பொழுது உருவாக்கப்பட்டது? 1944
30. வார்தா கல்வித் திட்டம் யாரால் எப்போது உருவாக்கப்பட்டது? 1937இல் மகாத்மா காந்தியடிகள் அவர்களால்
31. பல்கலைக்கழக கல்வி குறித்த ராதாகிருஷ்ணன் கல்விக்குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1948
32. பல்கலைக்கழக மானியக் குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 1948
33. இடைநிலைக் கல்வி குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?1952 -1953
34. கோத்தாரி கல்வி குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?1964
35. நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 என்ற கல்வி அமைப்பை பரிந்துரை செய்த குழு எது? கோத்தாரி குழு
36. 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வியை அறிமுகப்படுத்திய குழு எது? கோத்தாரி கல்வி குழு
37. சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கல்வி கொள்கை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1968
38. இந்திய அரசால் எப்பொழுது புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது? 1986
39. தொடக்கப் பள்ளிகளை தேசிய அளவில் மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது? கரும்பலகை திட்டம்
40. எந்த ஆண்டு கல்வித்துறை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது? 1976
41. அனைவருக்கும் கல்வி இயக்கம் சர்வ சிக்ஷ அபியான் (SSA) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?2000 -2001
42. கல்வி உரிமைச் சட்டம் (RTE)எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 2009
43. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது? பதினோராம் ஐந்தாண்டு திட்ட காலத்தில்
44. 15 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் மாணவர்களுக்கு தரமான எளிதில் கிடைக்கக் கூடிய எளிய அணுகுமுறையுடன் அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் இடைநிலைக் கல்வியை அளிப்பது எந்த திட்டம்? அனைவருக்கும் இடைநிலை கல்வி RMSA
45. சமமான வாய்ப்புகள் மற்றும் சமமான கற்றல் விளைவுகளை அளவிடுதல் ஆகிய பள்ளியின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பரந்த குறிக்கோளை அடைய ஏற்படுத்தப்பட்ட திட்டம் எது? சமக்ர சிக்ஷா
46. பண்டைய தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? கணக்காயர்
47. பல்லவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கடிகை நிலையங்கள்
48. காஞ்சி நகரமானது கற்றலின் மையமாக விளங்கியதை கூறிய வெளிநாட்டு பயணி யார்? யுவான்சுவாங்
49. தமிழிலக்கிய வரலாற்றில் மிகவும் அறிவார்ந்த மற்றும் புதுமைகளை புகுத்திய காலம் என்று போற்றப்படுவது யாருடைய காலம்? சோழர் காலம்
50. சோழர் காலத்தில் இருந்த புகழ்பெற்ற வேத கல்லூரி எது? ராஜராஜன் சதுர்வேதி மங்கலம்
51. நூலகத்தை பற்றிய குறிப்பு காணப்படும் சோழர்கால கல்வெட்டு எது? திருவிடை காளை கல்வெட்டு
52. மருத்துவப் பள்ளி பற்றிய குறிப்பு காணப்படும் சோழர்கால கல்வெட்டு எது? வீரராஜேந்திர சோழனின் திருவாடுதுறை கல்வெட்டு
53. பாண்டியர்களின் காலத்தில் கல்வி நிலையங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? கடிகை சாலை மற்றும் வித்யா சாதனம்
54. பாண்டியர்கள் காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சாலபோகம்
55. எந்த மன்னர்கள் ஆட்சியில் திண்ணைப் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது?நாயக்கர்கள் ஆட்சியில்
56. எந்த மன்னர் காலத்தில் பெர்னாண்டஸ் மதுரைக்கு வருகை புரிந்தார்? வீரப்ப நாயக்கர்
57. தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை நிறுவியவர் யார்?இரண்டாம் சரபோஜி
58. தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக் கூடத்தை அமைத்தவர் யார்?இரண்டாம் சரபோஜி
59. மதராஸ் மாகாணத்தில் மேற்கத்திய கல்வியை அறிமுகப் படுத்தியதில் மிகப்பெரிய பங்காற்றியவர் யார்?ஆளுநர் சர் தாமஸ் மன்றோ
60. எந்த ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் பணிகள் நிறுவப்பட்டன? ஆளுநர் சர் தாமஸ் மன்றோ
61. சென்னை பல்கலைக்கழகம் எப்போது நிறுவப்பட்டது ?1857
62. உள்ளூர் வாரியச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது ?1882
63. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1929
64. எந்த ஆண்டு காந்திகிராம கிராமிய கல்லூரி ஏற்படுத்தப்பட்டது? 1975
65. எந்த ஆண்டு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது?1956
66. தமிழ்நாட்டில் சத்துணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?1982
67. தேசிய கல்வி கொள்கை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1992
68. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகம்? சென்னைப் பல்கலைக்கழகம்
69. அண்ணாமலை பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது? 1929
70. காந்திகிராம கிராமிய கல்லூரி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1975
71. 1986 இல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை எந்த ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது? 1992
72. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் யார்? சாணக்கியர்
1 Comments
I love this way of study...
ReplyDelete