education

8th நீதித்துறை

நீதித்துறை
1.     பண்டைய இந்தியாவில் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தவை  எவை? ஸ்மிருதிகள்
2.     பண்டைய காலத்தில் நீதி மன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது? குலிகா
3.     எந்த அரச வம்ச ஆட்சி காலத்தில் உரிமையியல் நடைமுறை சட்டங்கள் தொகுக்கப்பட்டன? துக்ளக் ஆட்சி காலத்தில்
4.     துக்ளக் ஆட்சி காலத்தில் தொகுக்கப்பட்ட உரிமையியல் நடைமுறை சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? பைக்கா-இ- பெரோஸ் சாஹி
5.     அவுரங்கசீப் காலத்தில் உரிமை இயல் சட்டங்கள் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? பட்வா-இ-ஆலமகிர் 1670
6.     இந்தியாவில் உச்ச நீதிமன்றம் அமைய வழிவகை செய்த சட்டம் எது? ஒழுங்குமுறை சட்டம் 1773
7.     இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்றம் எங்கு தொடங்கப்பட்டது? வில்லியம் கோட்டை கொல்கத்தா
8.     ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்? எலிஜா இம்பே
9.     மதராஸில் எப்பொழுது உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது? 1801
10. பம்பாயில் எப்பொழுது உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது? 1824
11. பம்பாய் மற்றும் மதராஸில் எப்பொழுது உயர்நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன? 1862
12. எந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஊரக குடிமையியல் மற்றும் ஊரக குற்றவியல் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன? வாரன் ஹேஸ்டிங்ஸ்
13. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குடிமையியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது? சதர் திவானி அதாலத்
14. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது? சதர் நிஷாமத் அதாலத்
15. யாருடைய ஆட்சிக்காலத்தில் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன? காரன்வாலிஸ்
16. யாருடைய ஆட்சிக்காலத்தில் மாகாண மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் நீக்கப்பட்டன? வில்லியம் பெண்டிங்
17. இந்தியாவின் மிகப் பழமையான உயர்நீதிமன்றம் எது? கல்கத்தா உயர் நீதிமன்றம் 1862
18. நமது நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் எது? அலகாபாத் உயர்நீதிமன்றம்
19. சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிஷாமத் அதாலத் நீதிமன்றங்கள் எங்கே நிறுவப்பட்டன? அலகாபாத்
20. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய சட்டங்களை நெறிமுறை படுத்திய சட்ட ஆணையம் யாரால் அமைக்கப்பட்டது? மெக்காலே
21. எந்த ஆண்டு இந்திய தண்டனை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? 1860
22. இந்த ஆண்டு பிரிவு கவுன்சில் நீதி வரையறை ஒழிப்பு சட்டத்தின் மூலம் பிரிவு கவுன்சிலிங் நீதிவரை நீக்கப்பட்டது? 1949
23. இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப் பிரிவுகள் 124 முதல் 147 வரை
24. உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்தும் நடைமுறை மற்றும் வழிமுறைகளை கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 145
25. ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் அரசியல் தத்துவஞானி யார்? மாண்டெஸ்கியூ
26. அமர்வு நீதிமன்றங்கள் என்பது யாது? குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள்
27. நில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எது? வருவாய் நீதிமன்றங்கள்
28. வழக்குரைஞர்கள் இல்லாமல் விரைவான நீதியை வழங்க பரஸ்பர ஒப்புதல் மூலம் வழக்குகளை தீர்த்து வைக்கும் நீதிமன்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்)
29. இந்தியாவின் முதல் லோக் அதாலத் எங்கு எப்போது நடைபெற்றது? 1982 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள ஜூனாகத்
30. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட நீதிமன்றங்கள் எது? விரைவு நீதிமன்றங்கள் 2000 ஆம் ஆண்டு
31. இ- நீதிமன்றங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 2005
32. தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 1987
33. உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை பற்றி கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 32
34. உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 226
35. பஞ்சாப் ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகியவற்றுக்கான உயர் நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளன? சண்டிகர
 




Post a Comment

0 Comments