வர்த்தகத்தில் இருந்து
பேரரசு வரை
1. இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தவர் யார்? போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமா கிபி 1498
2. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கிபி 1757 ஜூன் 23
3. இருட்டறை துயர சம்பவம் எப்பொழுது நடைபெற்றது? கிபி 1756
4. அலிநகர் உடன்படிக்கை யாருக்குயாருக்கிடையேஇடையே ஏற்படுத்தப்பட்டது? சிராஜ் உத் தௌலா மற்றும் ராபர்ட் கிளைவ்
5. பக்சார் போர் எந்த ஆண்டு ஏற்பட்டது? 1764
6. வங்காளத்தின் தலைநகரை முர்சிதாபாத் இலிருந்து மாங்கீர்க்கு மாற்றிய வங்காளம் மன்னர் யார்? மீர்காசிம்
7. சுங்க வரி விலக்கு ஆணை எவ்வாறு அழைக்கப்பட்டது? தஸ்தக்
8. பக்சார் போர் யாருக்கிடையே நடைபெற்றது? ஆங்கிலத் தளபதி ஹெக்டர் மன்றோ மற்றும் வங்காள நவாப் மீர் காசிம்
9. பக்சார் போர் முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது? அலகாபாத் உடன்படிக்கை 1765
10. முதல் கர்நாடகப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1746- 1748
11. இரண்டாம் கர்நாடகப் போர் எப்பொழுது நடைபெற்றது? 1749 முதல் 1754 வரை
12. மூன்றாம் கர்நாடகப் போர் எப்பொழுது நடைபெற்றது? 1756 முதல் 1763 வரை
13. முதல் கர்நாடகப் போருக்கான காரணம் யாது? ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமை போர்
14. அடையார் போர் எப்பொழுது ஏற்பட்டது? 1746 கர்நாடக நவாப் அன்வர்தீன் மற்றும் பிரஞ்சு படை க்கு இடையே
15. முதல் கர்நாடகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது? அய் லா சாப்பெல் உடன்படிக்கை 1748
16. இரண்டாம் கர்நாடகப் போர் ஏற்பட காரணம் யாது? கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை பிரச்சனை
17. ஆம்பூர் போர் எப்பொழுது ஏற்பட்டது? 1749 கர்நாடக நவாப் அன்வர்தீன் மற்றும் பிரெஞ்சு கவர்னர் டியூப்ளே சந்தாசாகிப் முசாபர் ஜங்க இடையே நடைபெற்றது
18. ஆற்காடு போர் எப்பொழுது நடைபெற்றது? 1751
19. இரண்டாம் கர்நாடகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது? பாண்டிச்சேரி உடன்படிக்கை 1755
20. மூன்றாம் கர்நாடகப் போர்கள் காரணம் யாது? ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டு போர்
21. வந்தவாசி போர் எப்போது நடைபெற்றது? 1760 அயர் கூட் தலைமையிலான ஆங்கில ஏற்படும் பிரஞ்சு படைக்கும் இடையே நடைபெற்றது
22. ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது? பாரிசு உடன்படிக்கை 1763
23. முதல் மைசூர் போர் எப்பொழுது நடைபெற்றது? 1767 முதல் 1769 வரை
24. முதல் மைசூர் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது? மதராஸ் உடன்படிக்கை 1769
25. இரண்டாம் மைசூர் போர் எப்பொழுது ஏற்பட்டது? 1780 முதல் 1784 வரை
26. போர்ட்டோ நோவா என்றழைக்கப்பட்ட பகுதி எது? பரங்கிப்பேட்டை
27. இரண்டாம் மைசூர் போர் யாருக்கிடையே நடைபெற்றது? ஹைதர் அலி மற்றும் ஆங்கில படைத் தளபதி அயர்கூட இடையே
28. இரண்டாம் மைசூர் போர் முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது?மங்களூர் உடன்படிக்கை 1784
29. மூன்றாம் மைசூர் போர் எப்பொழுது ஏற்பட்டது? 1790 முதல் 1792 வரை
30. மூன்றாம் மைசூர் போர் முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது? ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை 1792
31. பாரமஹால் என்று அழைக்கப்பட்ட பகுதி எது? கோயம்புத்தூர் மற்றும் சேலம்
32. நான்காம் மைசூர் போர் எப்பொழுது நடைபெற்றது? 1799
33. முதல் மராத்திய போர் எப்பொழுது நடைபெற்றது? 1775 முதல் 1782 வரை
34. இரண்டாம் மராத்திய போர் எப்பொழுது நடைபெற்றது? 1803 முதல் 1805 வரை
35. மூன்றாவது மராத்திய போர் எப்பொழுது நடைபெற்றது? 1817 முதல் 1818 வரை
36. முதல் மராத்திய போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது?சால்பை உடன்படிக்கை 1782
37. பஸ்லின் உடன்படிக்கை எப்பொழுது ஏற்பட்டது? 1802
38. மராத்தியர் இன் கடைசி பேஷ்வா யார்?இரண்டாம் பாஜிராவ்
39. இந்தியாவின் தலைமை ஆளுநராக காரன்வாலிஸ் நியமிக்கப்பட்ட ஆண்டு? 1786
40. அரசு ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியை அறிமுகப்படுத்திய கவர்னர் ஜெனரல் யார்? வெல்லெஸ்லி
41. போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சட்டம் எது? பட்டய சட்டம் 1833
42. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு இந்திய ஆட்சிப்பணி சட்டம் இயற்றப்பட்டது? 1861
43. ஐசிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் யார்? சத்தியேந்திர நாத் தாகூர் 1863
44. அரசுப் பணியை பற்றி ஆராய்வதற்காக யாருடைய தலைமையில் 1912ஆம் ஆண்டு ஒரு அரசு ஆணையம் ராயல் கமிஷன் நிறுவப்பட்டது? இஸ்லிங்டன் பிரபு
45. 1912 இல் நிறுவப்பட்ட ராயல் கமிஷனில் உறுப்பினராக இருந்த இந்தியர்கள் யார்? கோபால கிருஷ்ண கோகலே அப்துர் ரஹீம்
46. இந்திய ஆட்சிப் பணியில் 33% இந்தியர்கள் தேர்வு செய்யவேண்டும் என்று படிப்படியாக இவற்றை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்த குழு எது? மாண்டேகு செம்ஸ்போர்டு 1918
47. 1923 இல் ஏற்படுத்தப்பட்ட ராயல் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? லீ பிரபு
48. மத்தியில் கூட்டாட்சி அரசு பணியாளர் தேர்வாணையம் மாகாணங்களில் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக வழிவகை செய்த சட்டம் எது? 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்
49. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ராணுவத்தில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்பதவி எது? சுபேதார்
50. இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் யார்?காரன்வாலிஸ் பிரபு 1791
51. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சௌகிதார்கள்
52. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இரட்டை ஆட்சி முறை எப்பொழுது ஒழிக்கப்பட்டது? 1772
53. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிவில் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது? திவானி அதாலத்
54. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குற்றவியல் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது? பௌஜ்தாரி அதாலத்
55. கல்கத்தாவில் எப்பொழுது உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது? 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறை சட்டத்தின் படி
56. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தின் முதல் கிளை எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 1801 மதராஸில்
57. 1832 வங்காளத்தில் ஜூரி முறையை கொண்டு வந்தவர் யார்? வில்லியம் பெண்டிங் பிரபு
58. வங்காளத்தில் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி யார்? எலிசா இன்பே
59. மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி யார்? திருவாரூர் முத்துசாமி
60. துணைப்படை திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? வெல்லஸ்லி பிரபு 1798
61. இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு என்பதை இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு என்று மாற்றியவர் யார்? பிரபு
62. துணைப்படை திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் நாடு எது? ஹைதராபாத் அடுத்து தஞ்சாவூர் அயோத்தி போன்ஸ்லே....
63. ஆங்கிலேய பேரரசை விரிவுபடுத்துவதற்காக வாரிசு இழப்பு கொள்கை அறிமுகப்படுத்தியவர் யார்? டல்ஹவுசி பிரபு 1848
64. வாரிசு இழப்பு கொள்கை மூலம் இணைத்து கொள்ளப்பட்ட நாடுகள் யாவை? சதாரா 1848
65. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடித்தளம் அமைத்த போர் எது? பிளாசிப் போர் 1757
66. 1857ம் ஆண்டு பெரும் புரட்சி முக்கிய காரணமாக அமைந்த ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கை எது? வாரிசு இழப்பு கொள்கை
2 Comments
57 question kku answer illa
ReplyDeleteபெண்டிங் பிரபு
ReplyDelete