education

பணம் சேமிப்பு மற்றும் முதலீடுகள்


1. பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது அதற்கான செலுத்து தொகையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதனையும் பணம் என்று கூறலாம் என்று கூறியவர் யார்? ராபர்ட்சன்
2. பணம் என்ற வார்த்தை எதில் இருந்து பெறப்பட்டது? மொனெட்டா ஜூனோ என்னும் ரோம் வார்த்தையில் இருந்து
3. இந்தியாவின் ரூபாய் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?சமஸ்கிருதம்
4. ரூபியா என்ற வார்த்தையின் பொருள் யாது? வெள்ளி நாணயம்
5. இந்தியாவில் சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் யார்? குஷான அரசர்கள்
6. டெல்லி சுல்தான்கள் தங்கம் வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்? டங்கா
7. டெல்லி சுல்தான்கள் மதிப்பு குறைந்த நாணயங்களை எவ்வாறு அழைத்தனர் ?ஜிட்டால்
8. ரூபியா என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்ட இந்தியாவின் முதல் அரசர் யார்? ஷெர்ஷா சூரி
9. ஆங்கிலேயர்களுக்கு முகாலய பண நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்தவர் யார்? முகாலய பேரரசு பாருக்ஷாயர்
10. ஆங்கிலேயர்கள் தங்கம் வெள்ளி செம்பு நாணயங்களை எவ்வாறு அழைத்தனர்? முறையே கரோலினா ஏஞ்சலினா மற்றும் கப்ரூன்
11. ஆங்கிலேயர்கள் வெண்கல நாணயத்தை எவ்வாறு அழைத்தனர் ?டின்னி
12. இந்திய ரூபாயின் குறியீட்டை வடிவமைத்தவர் யார்? விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு உதயகுமார் 2010 ஜூலை 15
13. பணம் என்பது ஒரு கடின கருத்தாகும் ஏனெனில் அது வேறுபட்ட துறைகளில் ஒன்றல்ல மூன்று பணிகளை குறிப்பிடுகிறது என்று கூறியவர் யார்?ஸ்டோவ்ஸ்கி
14. பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது எதுவெல்லாம் பணமாக கருதப்படுகிறதோ அவை பணமாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறியவர் யார்? சர் ஜான் ஹிக்ஸ்
15. எதையெல்லாம் செய்யவல்லது அதுவே பணம் எனக் கூறியவர் யார்? பேராசிரியர் வாக்கர்
16. விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை எவ்வாறு குறிக்கப்படுகிறது? பணவீக்கம்
17. விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதை எவ்வாறு குறிக்கப்படுகிறது? பணவாட்டம்
18. இந்தியாவில் பணமதிப்பிழப்பு சமீபத்தில் எப்பொழுது அறிவிக்கப்பட்டது? 2016 நவம்பர் 8
19. பண மோசடி நடவடிக்கை தடுப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 2002
20. ஊழல் தடுப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1988
21.   வெளிக்கொணர படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 2015
22. பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1988
23. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ?2016
 

Post a Comment

0 Comments