சமத்துவம் பெறுதல்
1. மக்களுக்கு எதிரான எதிர்மறையான செயல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?பாகுபாடு
2. மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? முன்முடிவு அல்லது பாரபட்சம்
3. ஏதோ ஒன்றைப் பற்றிய தவறான கருத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஒத்த கருத்து
4. தென்னாப்பிரிக்காவில் இன நிற வெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்டவர் யார்? நெல்சன் மண்டேலா
5. இந்திய அரசியலமைப்பின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்? டாக்டர் அம்பேத்கார்
6. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?டாக்டர் அம்பேத்கர்
7. டாக்டர் அம்பேத்கருக்கு எப்பொழுது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?1990
8. எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக மதம் இனம் சாதி பாலினம் பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறும் சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு15(1)
9. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் எழுத்தறிவு விகிதத்தில் முன்னணி வகிக்கும் மாவட்டங்கள் யாவை? கன்னியாகுமரி(91.75%)
சென்னை(90.18%) தூத்துக்குடி(86.16%)
10. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதத்தில் குறைவாக உள்ள தமிழக மாவட்டங்கள் யாவை?தர்மபுரி(68.54%) அரியலூர்
(71.34%) கிருஷ்ணகிரி(71.46%)
11. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பு படி பாலின விகிதத்தில் பெண்கள் அதிகம் உள்ள மாவட்டங்கள் எது? நீலகிரி (1041) தஞ்சாவூர்(1031)
நாகப்பட்டினம்(1025) தூத்துக்குடி(1024)
12. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி பாலின விகிதத்தில் பெண்கள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை? தர்மபுரி(946)
சேலம்(954) கிருஷ்ணகிரி(956)
13. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் அரசியலமைப்பு பிரிவு எது? சட்டப்பிரிவு 14
14. இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் யார்? டாக்டர் ஏபிஜே அப்துல்
கலாம்
15. மக்களின் குடியரசு தலைவர் என்று நினைவு கூறப்படுபவர் யார்? டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
16. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுக்கு எப்பொழுது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது? 1997
17. இந்தியா 20 20 அக்னி சிறகுகள் எழுச்சி தீபங்கள் த லுமினஸ் பார்க் மிஷன் இந்தியா போன்ற நூல்களை எழுதியவர் யார்? டாக்டர் ஏபிஜே அப்துல்
கலாம்
18. இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று போற்றப்படுபவர் யார்? டாக்டர் ஏபிஜே அப்துல்
கலாம்
19. 2016ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் யார்? திரு மாரியப்பன்
20. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் யார்? விஸ்வநாதன் ஆனந்த்
1988
21. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர் யார்? விஸ்வநாதன் ஆனந்த் 1991-92
22. திரு விஸ்வநாதன் ஆனந்த் எத்தனை முறை உலக சாம்பியன் பட்டம் வென்றார்? ஐந்து முறை
23. தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது? சட்டப்பிரிவு 17
0 Comments