- பரப்பளவில் உலகில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடு? ஏழாவது பெரிய நாடு
- ஆசிய கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடு எது? இந்தியா
- இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு? 32,87,263 சதுர கிலோ மீட்டர்
- புவியின் மொத்த பரப்பளவில் இந்தியாவின் பங்கு எவ்வளவு? 2.4 சதவீதம்
- இந்தியாவின் மொத்த நில எல்லை எவ்வளவு? 15200 கிமீ
- இந்தியாவின் மேற்கே அமைந்துள்ள எல்லை நாடு எது? பாகிஸ்தான்
- இந்தியாவின் வடமேற்கு எல்லை எது? ஆப்கானிஸ்தான்
- இந்தியாவின் வடக்கு எல்லைகளாக அமைந்துள்ள நாடு எது? சீனா நேபாளம் பூடான்
- இந்தியாவின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ள நாடு எது? வங்காளதேசம் மற்றும் மியான்மர்
- இந்தியா எந்த நாட்டுடன் மிக அதிகமாக நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது? வங்காளதேசம் 4156 கிலோமீட்டர்
- இந்தியா எந்த நாடு உடன் மிகக் குறுகிய எல்லையை கொண்டுள்ளது? 106 கிலோ மீட்டர் ஆப்கானிஸ்தான்
- இந்திய கடற்கரையின் நீளம் எவ்வளவு? 6100 கிலோமீட்டர்
- இந்திய கடற்கரையின் மொத்த நீளம் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து எவ்வளவு? 7516.6 km
- இந்தியாவையும் இலங்கையையும் பிடிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி எது? பாக் நீர் சந்தி
- ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய அனைத்து வேறுபாடுகளையும் கொண்டுள்ளதால் இந்தியா எவ்வாறு அழைக்கப்படுகிறது? துணை கண்டம்
- இந்தியாவின் அட்ச தீர்க்க பரவல் யாது? 8°4 வட அட்சம் முதல் 37°6 வட அட்சம் வரையிலும் 68°7 கிழக்கு தீர்க்கம் முதல் 97°25 கிழக்கு தீர்க்கம் வரை
- அட்ச தீர்க்க பரவல் படி இந்தியா முழுமையும் எந்த அரைக்கோளத்தில் அமைந்துள்ளது? வடகிழக்கு அரைக்கோளம்
- இந்தியாவின் மேற்கிலிருந்து கிழக்கு எல்லைவரை மொத்தம் எத்தனை தீர்க்க கோடுகளை கொண்டுள்ளது? 30 தீர்க்க கோடுகள்
- புவியானது 1° தீர்க்க கோட்டை கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு? 4 நிமிடம்
- இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கும் அருணாச்சல பிரதேசத்திற்கு இடையே உள்ள தீர்க்கக்கோடு வித்தியாசம் எவ்வளவு? 29° 18' மற்றும் தல நேர வேறுபாடு 1 மணி நேரம் 57 நிமிடம் 12 வினாடிகள்
- இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை82° 30'எதன் வழியாக செல்கிறது? மிர்சாபூர் அலகாபாத்
- இந்திய திட்ட நேரத்திற்கும் கிரீன்விச் நேரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வளவு? 5 மணி நேரம் 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது.
- இந்தியாவின் தென்கோடி பகுதி என்று அழைக்கப்படுவது எது? இந்திரா முனை இது பிக்மெலியன் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்திரா முனை எங்கு அமைந்துள்ளது? அந்தமான் நிக்கோபார் தீவு கூட்டத்தில் 6°45'வட அச்சத்தில்
- இந்தியாவின் வடமுனை எது? இந்திரா கோல் ஜம்மு காஷ்மீர்
- இந்தியாவின் வடக்கு தெற்கு எவ்வளவு நீளம் கொண்டது? 3214 கிலோமீட்டர்
- இந்தியாவின் கிழக்கு-மேற்கு எவ்வளவு நீளம் கொண்டது? 2933 கிலோமீட்டர்
- இந்தியாவின் மையத்தின் வழியே செல்லும் 23°30'வட அட்ச ரேகை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கடகரேகை
- இந்தியாவில் தற்பொழுது எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன? 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள்
- ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் எது? அமராவதி
- ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் எந்த ஆண்டு வரை ஹைதராபாத் நகரம் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது? 2024
- இந்தியாவின் இயற்கை அமைப்பு எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? ஆறு பெரும் பிரிவுகள்
- இமயமலையின் மொத்த நீளம் எவ்வளவு? 2500 கிலோ மீட்டர் மேற்கில் சிந்து பள்ளத்தாக்கு கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
- உலகின் கூரை என்று அழைக்கப்படுவது எது? பாமீர் முடிச்சு
- மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமய மலையையும் இணைக்கும் பகுதி எது? பாமீர் முடிச்சு
- இமயமலை எந்த வடிவத்தில் அமைந்துள்ளது? வில் போன்ற வடிவம்
- இமாலயா என்ற சொல்லின் பொருள் யாது? பனி உறைவிடம்
- இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர் எது? ஆரவல்லி மலைத்தொடர்
- திபெத்தியன் இமயமலை என்று அழைக்கப்படுவது எது? ட்ரான்ஸ் இமயமலை அல்லது மேற்கு இமயமலைகள்
- எந்த இமயமலை இல் கடலடி உயிரின படிமங்கள் கொண்ட டெர்சியரிகிரானைட் பாறைகள் உள்ளன? மேற்கு இமயமலைகள்
- சாஸ்கர் லடாக் கைலாஷ் காரகோரம் போன்ற மலைத்தொடர்கள் எந்த இமயமலையில் அமைந்துள்ளன? மேற்கு இமயமலைகள்
- பெரிய இமய மலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹிமாத்ரி
- சிறிய இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஹிமாச்சல்
- எவரெஸ்ட் சிகரம் எந்த நாட்டில் அமைந்துள்ளது? நேபாளம்
- எவரெஸ்ட் சிகரம் எந்த இமயமலையில் அமைந்துள்ளது? ஹிமாத்ரி அல்லது பெரிய இமயமலை
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு? 8848 மீட்டர்
- பெரிய இமய மலையில் காணப்படும் பனியாறுகள் யாவை? கங்கோத்ரி மற்றும் சியாச்சின்
- உலகின் இரண்டாவது உயரமான சிகரம் எது? காட்வின் ஆஸ்டின் K2
- இந்தியாவின் மிக உயரமான சிகரம் எது? காட்வின் ஆஸ்டின் 8611 மீட்டர்
- உலகிலேயே அதிக சிகரங்களை கொண்ட மலைத்தொடர் எது? இமய மலைத்தொடர்
- சிம்லா முசௌரி நைனிடால் அல்மோரா ராணி கட் மற்றும் டார்ஜிலிங் போன்ற கோடை வாழிடங்கள் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன? இமாச்சல் அல்லது சிறிய இமயமலைகள்
- காரகோரம் கணவாய் எங்கு அமைந்துள்ளது? ஜம்மு காஷ்மீர்
- ஜொஷிலா கணவாய் எங்கு அமைந்துள்ளது? இமாச்சல் பிரதேசம்
- பொமிடிலா கணவாய் எங்கு அமைந்துள்ளது? அருணாச்சல் பிரதேசம்
- ஷிப்கிலா கனவாய் எங்கு அமைந்துள்ளது? இமாச்சல் பிரதேசம்
- ஜெலிப்லா கணவாய் எங்கு அமைந்துள்ளது? சிக்கிம்
- பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் பெயர் யாது? கைபர் கணவாய்
- போலன் கணவாய் எங்கு அமைந்துள்ளது? பாகிஸ்தான்
- ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை நீண்டு உள்ள ஆறுகளால் உருவாக்கப்பட்ட வடிவிலான இமயமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது? சிவாலிக் குன்றுகள்
- சிவாலிக் குன்றுகளின் கிழக்குப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? டூயர்ஸ்
- சிவாலிக் குன்றுகளின் மேற்குப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? டூன்கள்
- டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்ப்பம், நாகா, மாணிப்பூர், மிக்கிற, காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து எவ்வாறு அழைக்கப்படுகின்றன? பூர்வாஞ்சல் மலைகள்
- சிந்து மற்றும் சட்லெஜ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை பிரிவு யாது? காஷ்மீர் பஞ்சாப் இமாச்சல் இமயமலை பிரிவுகள்
- சட்லெஜ் மற்றும் காளி ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை பிரிவு எது? குமாயூன் இமய மலைகள்
- காளி மற்றும் திஸ்தா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை பிரிவு எது? மத்திய நேபாள இமயமலைகள்
- திஸ்தா மற்றும் திகாங் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இமயமலை பிரிவு எது? அசாம் கிழக்கு இமயமலைகள்
- வடபெரும் சமவெளிகளின் மொத்த பரப்பளவு எவ்வளவு? 7 இலட்சம் சதுர கிலோ மீட்டர்
- உலகிலேயே மிகவும் வளமான சமவெளியாக கருதப்படுவது எது? வடபெரும் சமவெளிகள்
- இமயமலை ஆறுகளால் படிய வைக்கப் பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால் ஆன சமவெளி எது? பாபர் சமவெளி
- அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட சமவெளிப் பகுதி எது? தராய் மண்டலம்
- பழைய வண்டல் மண்ணால் ஆன படிவுகள் கொண்ட சமவெளி எது? பாங்கர் சமவெளி
- ஆறுகளால் கொண்டுவரப்பட்ட புதிய வண்டல் மண் படிவுகள் கொண்ட சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? காதர் சமவெளி அல்லது பெட் நிலம்
- ராஜஸ்தான் சமவெளியில் காணப்படும் உப்பு ஏரி எது? ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சாம்பார் ஏரி அல்லது புஷ்கர் ஏரி
- காக்காரா கான்டாக் கோசி யமுனை சாம்பல் பெட்வா ஆகியவை எந்த ஆற்றின் துணை ஆறுகள்? கங்கை நதி
- வண்டல் சமவெளியின் உயர் நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? சார்ஸ்
- வண்டல் சமவெளியில் சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? பில்ஸ்
- தீபகற்ப பீடபூமியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? 16 லட்சம் சதுர கிலோ மீட்டர்
- இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை பிரிவு எது? தீபகற்ப பீடபூமி
- தீபகற்ப பீடபூமி வடமேற்கே அமைந்துள்ள மலைத்தொடர் எது? ஆரவல்லி மலைத்தொடர்
- தீபகற்ப பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம் எது? ஆனைமுடி 2,695 மீட்டர்
- தீபகற்ப பீடபூமி யை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கும் ஆறு எது? நர்மதை ஆறு
- தீபகற்ப பீடபூமியின் வடபகுதி மற்றும் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? மத்திய உயர் நிலங்கள் மற்றும் தக்காண பீடபூமி
- மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் யாவை? நர்மதை மற்றும் தபதி
- ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் எது? குருசிகார் 1722 மீட்டர்
- மத்திய உயர் நிலங்களின் மேற்கு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? மாளவ பீடபூமி
- மத்திய உயர் நிலங்களின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நிலப்பகுதி எது? சோட்டா நாகபுரி பீடபூமி
- தக்காண பீடபூமி எந்த வடிவத்தில் அமைந்துள்ளது? முக்கோண வடிவம் சுமார் ஏழு லட்சம் சதுர கிலோமீட்டர்
- மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? சயாத்ரி
- ஆனைமலை ஏலக்காய் மலை மற்றும் பழனி மலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள சிகரம் எது? ஆனைமுடி சிகரம்
- மலைவாழ் இடமான கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது? பழனி மலை
- பூர்வா த்ரீ என்று அழைக்கப்படும் மலை எது? கிழக்கு தொடர்ச்சி மலை
- தார் பாலைவனம் உலகிலேயே எத்தனையாவது பெரிய பாலைவனம்? 17வது பெரிய பாலைவனம்
- வடக்கில் ராணா கட்ச் முதல் தெற்கில் கன்னியாகுமரி வரை நீண்டு உள்ள கடற்கரை சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? மேற்கு கடற்கரை சமவெளி
- மேற்கு கடற்கரை சமவெளியின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கொங்கண கடற்கரை
- மேற்கு கடற்கரை சமவெளியின் மத்திய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? கனரா கடற்கரை
- மேற்கு கடற்கரையின் தெற்கு பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? மலபார் கடற்கரை
- மலபார் கடற்கரையில் காணப்படும் மிக முக்கிய ஏரி எது? வேம்பநாடு ஏரி
- கிழக்கு கடற்கரை சமவெளி மொத்தம் எத்தனை மாநிலங்களில் பரவியுள்ளது? நான்கு மாநிலங்கள் மேற்கு வங்காளம் ஒடிசா ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு
- மகாநதி க்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சமவெளி பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? வட சர்க்கார்
- கிருஷ்ணா மற்றும் காவேரி ஆற்றில் இற்கு இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சமவெளி பகுதிஎவ்வாறு அழைக்கப்படுகிறது? சோழமண்டல கடற்கரை
- உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை எது?மெரினா கடற்கரை சென்னை
- இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரி எது? சிலிகா ஏரி
- கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றிற்கும் இடையே அமைந்துள்ள ஏரி எது? கொல்லேரு ஏரி
- தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள ஏரி எது?பழவேற்காடு ஏரி அல்லது புலிகாட் ஏரி
- அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்களில் மொத்தம் எத்தனை தீவுகள் உள்ளன? 572 தீவுகள்
- லட்சத்தீவுகளின் மொத்தம் எத்தனை தீவுகள் உள்ளன? 27 தீவுகள்
- இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை எங்கு உள்ளது?பாரன் தீவு அந்தமான் மற்றும் நிக்கோபார்
- லட்சத்தீவுகள் எந்த வகையான பாறைகளால் ஆனவை? முருகை பாறைகளால் ஆனவை
- அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிர்வாகத் தலைநகரம் எது? போர்ட் பிளேயர்
- அந்தமான் தீவுக் கூட்டங்களையும் நிக்கோபார் தீவு கூட்டங்களையும் பிரிக்கும் கால்வாய் எது? 10 டிகிரி வடக்கு கால்வாய்
- நிக்கோபார் இன் தென்கோடி முனை எவ்வாறு அழைக்கப்படுகிறது? இந்திரா முனை
- லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைநகரம் எது? கவரத்தி
- லட்சத்தீவு களையும் மாலத் தீவையும் பிரிக்கும் கால்வாய் எது? 8 டிகிரி கால்வாய்
- பீட் தீவு பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது? லட்சத்தீவுகள்
- லட்சத்தீவு மினிக்காய் மற்றும் அமினி தீவு கூட்டங்கள் எப்பொழுது முதல் லட்சத்தீவுகள் என்றழைக்கப்படுகின்றன? 1973 முதல்
- முதன்மை ஆறுகளும் துணை ஆறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? வடிகால் கொப்பரை
- சிந்து நதியின் மொத்த நீளம் எவ்வளவு?2850 கிலோமீட்டர். இந்தியாவில் 709 கிலோமீட்டர் மட்டுமே பாய்கிறது.
- சிந்து நதி எங்கு உற்பத்தி ஆகிறது? மானசரோவர்
- சிந்து நதியின் மிகப்பெரிய துணை ஆறு எது? சினாப்
- ஜீலம் சினாப் ராவி பியாஸ் மற்றும் சடலெஜ் ஆகியவை எந்த ஆற்றின் துணை ஆறுகள்? சிந்து நதி
- இந்தியாவின் மிக நீளமான நதி எது? கங்கை நதி 2525 கிலோமீட்டர் எளிதாக 25-25 என்று நினைவில் கொள்ளலாம்
- கங்கை நதி எங்கே தோன்றுகிறது?உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்திரி என்னும் பனியாற்றில் இருந்து
- கங்கை நதி அது தோன்றும் இடத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? பாகிரதி
- வங்கதேசத்தில் கங்கை நதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? பத்மா
- பிரம்மபுத்திரா ஆறு எங்கே தோன்றுகிறது? கைலாஷ் மலைத்தொடரில் உள்ள செம்மாயுங்கடங் இன்று பனியாற்றி லிருந்து
- பிரம்மபுத்திரா திபெத் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? சாங்போ(தூய்மை)
- பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவிற்குள் நுழையும் பகுதி எது? திகாங்அருணாச்சல பிரதேசம்
- பிரம்மபுத்திரா ஆறு வங்காளதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஜமுனா
- பிரம்மபுத்திரா ஆறு கங்கையுடன் இணையும் பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது? மேக்னா
- மகாநதி எங்கு உற்பத்தி ஆகிறது? சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் மாவட்டத்தில் சிகா என்னும் இடத்தில்
- கோதாவரி ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது? நாசிக் மகாராஷ்டிரா
- விருத்தகங்கா என்று அழைக்கப்படும் ஆறு எது? கோதாவரி
- கௌதமி மற்றும் வசிஸ்த என்னும் ஆறுகள் எந்த ஆற்றின் கிளை ஆறுகள்? கோதாவரி
- கோதாவரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரி எது? கொல்லேரு ஏரி
- கிருஷ்ணா நதி எங்கு உற்பத்தியாகிறது? மஹாபலேஷ்வர் மகாராஷ்டிரா
- தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான நதி எது? கோதாவரி
- காவேரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது? தலை காவேரி குடகு மலை
- தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் ஆறு எது? காவேரி
- காவேரி ஆற்றின் ஆற்று தீவுகள் யாவை? சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கம்
- காவேரி ஆறு கடலில் கலக்கும் இடம் எது? பூம்புகார்
- கிருஷ்ணா நதி கடலில் கலக்கும் இடம் எது? ஹம்சலா தேவி
- நர்மதை ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது? அமர்கண்டாக் மத்திய பிரதேசம்
- மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் நீளமானது எது? நர்மதை
- தபதி ஆறு எங்கு உற்பத்தி ஆகிறது? முல்டாய் பெட்டுல் மத்திய பிரதேசம்
- கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் யாவை? நர்மதை தபதி மற்றும் மாகி
- ஜெர்சப்பா ஜோக் நீர்வீழ்ச்சி எந்த ஆற்றின் அமைந்துள்ளது? சிராவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது 829 அடிகள்
- இந்திய பெரும் பாலைவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? மருஸ்தலி
Choose the correct answer:
- இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் எவ்வளவு?3214 கிலோமீட்டர்
- இந்தியாவின் தென்கோடி முனை என்று அழைக்கப்படுவது எது? இந்திரா முனை
- இமய மலையின் கிழக்கு மேற்கு பரவல் எவ்வளவு? 2500 கிலோ மீட்டர்
- பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு எது? கோசி
- தக்காண பீடபூமியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? 7 இலட்சம் சதுர கிலோ மீட்டர்
- மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? தீபகற்பம்
- பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா எதனை இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது? ஸ்ரீலங்கா
- தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது? ஆனைமுடி 2,695 மீட்டர்
- பழைய வண்டல் படிவுகள் உருவான சமவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது? பங்கர்
- பழவேற்காடு ஏரி எந்த மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ளது? தமிழ்நாடு மற்றும் ஆந்திரா
Match the following:
- சாங்போ -பிரம்மபுத்திரா
- யமுனை -கங்கை ஆற்றின் துணை ஆறு
- புதிய வண்டல் படிவுகள் -காதர்
- காட்வின் ஆஸ்டின் -இந்தியாவின் உயர்ந்த சிகரம்
- சோழமண்டல கடற்கரை -தென் கிழக்கு கடற்கரை சமவெளி
தமிழ்நாடு அரசு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறையினால் வழங்கப்பட்ட புவியியல் பாடப் பகுதிக்கான முக்கிய பாடக்குறிப்புகள் டவுன்லோட் செய்ய...
Click here....
2 Comments
Thanks for dontnpsc
ReplyDeleteThank u for Your valuable comment.
Delete