education

9th இந்தியா மற்றும் தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு



இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு


  1. முதன்மை துறையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில்கள் யாவை?விவசாயம் காடுகள் சுரங்கம்
  2. இரண்டாம் துறையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில்கள் யாவை? உற்பத்திப் பொருட்கள் தொழிற்சாலைகள்
  3. சேவை சார்ந்த தொழில்கள் எந்தத் துறையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன? மூன்றாம் துறை அல்லது சார்பு துறை
  4. இந்திய வரலாற்றில் முதன்முறையாக வேலைவாய்ப்பின்மை சிக்கலை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தவர் யார்? டெல்லி சுல்தான் பெரோஸ் ஷா துக்ளக்
  5. ஸ் லேட்டர் கிராமம் என்று அழைக்கப்படுவது எது? விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இருவேல்பட்டு எனும் கிராமம்
  6. 1972 முதல் அடுத்த 40 ஆண்டுகளில் இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் எவ்வளவு?சராசரியாக 2%

Choose the correct answer:

  1. பணியிடத்தை கணக்கிடுவதற்கான வயது எவ்வளவு? 15 வயது முதல் 60 வயது வரை
  2. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் எந்த இறங்குவரிசை சரியானது? மூன்றாம் துறை   }   இரண்டாம் துறை }   முதன்மை துறை
  3. பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத்துறை எது? வேளாண்மை துறை
  4. பின்வருவனவற்றுள் எது முதன்மை துறை சார்ந்தது அல்ல? உற்பத்தி
  5. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் துறையை சார்ந்தது அல்ல? காடுகள்
  6. மூன்றாம் துறையில் அடங்குவது எது? அனைத்தும்
  7. எந்தத் துறையில் தொழில் அமைப்பு முறை சேர்க்கப்படவில்லை? முதன்மைத் துறை
  8. அ).வேளாண்மை காடுகள் மீன்பிடிப்பு மற்றும் சுரங்க -முதன்மை துறை,          ஆ). உற்பத்தி மின்னுற்பத்தி எரிவாயு மற்றும் குடிநீர் வினியோகம் -இரண்டாம் துறை ,                                              இ).வாணிபம் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு -சார்பு துறை.  ஈ).குழும நிறுவனங்கள் மற்றும் வீட்டு தொழில்கள் -ஒழுங்கமைக்கப்படாத துறை
  9. எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தார்? பெரோசா துக்ளக்
  10. எந்தத் துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது? ஒழுங்கமைக்கப்பட்ட துறை
  11. எந்தத் துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது? ஒழுங்கமைக்கப்பட்ட துறை
  12. பொருந்தாத ஒன்றை கண்டறிக. சிறு தொழில்
  13. பொதுத்துறை மற்றும் தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது? இயற்கை வளங்கள் அல்லது பொருளாதார செயல்முறை (பக்க எண் 318 இரண்டாவது வரியிலிருந்து ...பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.)
  14. கூற்று: ஒழுங்கு படுத்தப்படாத துறையின் பொருளாதாரப் அன்பு என்பது வீட்டினுள் உற்பத்தி நடவடிக்கை மற்றும் சிறுதொழில் செய்வதாகும் காரணம்: இங்கு குறைவான ஊதியமும் மற்றும் வேலைகள் முறையாக வழங்கப்படுவதில்லை.
  15. தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும் அவர்கள் பணிக்கான வெகுமதிகளை செலுத்தும் நபர்களாக உள்ளவர்கள் யார்? முதலாளி
  16. தமிழ்நாட்டில் எந்த துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்? விவசாயம்

Fill-in the blanks:

  1. எந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையான வை அல்ல? ஒழுங்கு படுத்தப்படாத துறைகள்
  2. பொருளாதார நடவடிக்கைகள் தொழில் துறைகளை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர்? பொதுத்துறை மற்றும் தனியார் துறை
  3. எப்போதும் இந்தியாவின் வளர்ச்சி கொள்கையில் ஒரு முக்கிய உறுப்பாக இடம்பெற்றுள்ளது எது? வேலைவாய்ப்பு
  4. வேலைவாய்ப்பு முறை மாற்றத்திற்கான காரணம் எது? மக்களின் வாழ்க்கை முறை
  5. இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மை யாது? பல பரிமாணங்கள் கொண்டது
  6. நாட்டின் பொருளாதாரம் என்பது நாட்டு மக்களின் எண்ணிக்கை உழைக்கும் மற்றும் உழைக்கும் திறன் பெற்றவர்களை குறிக்கும்.
  7. பொது துறை என்பது சேவை நோக்கம் கொண்டது

Match the following:
  1. பொதுத்துறை -சேவை நோக்கம்
  2.  தனியார் துறை -லாப நோக்கம்
  3.  முதன்மை துறை -கோழி வளர்ப்பு
  4. சார்பு துறை -வங்கியல்

Post a Comment

0 Comments